பசுமை விகடன் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி ‘அருமையான வருமானம் தரும் ஆடு வளர்ப்பு’ என்ற நேரலைப் பயிற்சி நடைபெற்றது.

இதில் பேசிய காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூர் உழவர் பயிற்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் சி.சௌந்தரராஜன், “தங்கத்தைப் போன்று இன்று ஆட்டிறைச்சியின் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. நல்ல விலை இருப்பதால் ஆடு வளர்ப்பில் ஈடுபடுபவர்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார் கள். எந்தத் தொழிலுக்கும் அடிப்படை யான பயிற்சி அவசியம். இது ஆடு வளர்ப்புக்கும் பொருந்தும். வெள்ளாடு வளர்ப்பில் பசுந்தீவனம் மிகவும் அவசியம். பசுந்தீவனத்துக்கு வேலி மசால் மிகவும் ஏற்றது. இதில் 37 சத விகிதம் புரதச்சத்து உள்ளது. ஆடு களுக்குப் புரதச் சத்துள்ள தாவரம்தான் அதிகம் தேவை. அந்தப் புரதம் இந்த வேலி மசாலில் அதிகமாக இருக்கிறது.

1 ஏக்கர் நிலத்தில் விதைத்தால் 80 டன் தீவனம் கிடைக்கும். சுமார் 7 அடி உயரம் வரை வளரும். 100 ஆடுகள் வளர்க்கிறீர்கள் என்றால் 3 ஏக்கரில் பசுந்தீவனம் பயிரிட வேண்டும். இதில் 2 ஏக்கரில் வேலி மசாலும், மீதி 1 ஏக்கரில் கம்பு நேப்பியர் ஒட்டுப் புல்லும் வளர்க்கலாம்.

100 ஆடுகள் வளர்க்க ஒரு ஆட்டுக்கு 10 சதுர அடி இடம் என்ற கணக்கில் 1,000 சதுர அடி இடம் தேவை. குட்டிகளுக்கு 800 சதுர அடி போதும். மொத்தம் 1,800 சதுர அடியில் கொட்டகை அமைத்துக்கொள்ளலாம். வெள்ளாடுகளுக்கு உஸ்மனாபாடி, தலைச் சேரி, போயர், சேலம் கறுப்பு, செம்பொறை உள்ளிட்ட ஆடுகளும் செம்மறி ஆடுகளுக்கு நெல்லூர் ஆடுகளும் ஏற்றது.

8 - 12 மாதங்கள் வளர்த்த குட்டி ஒன்று எடையைப் பொறுத்துக் குறைந்தபட்சம் 4,000 முதல் 6,000 ரூபாய் வரை விலை போகிறது. 100 வெள்ளாடுகள் மூலம் ஒரு ஈத்துக்கு 140 குட்டிகள் கிடைப்பதாக வைத்துக் கொண்டால்கூட வருடத்தில் 5,60,000 ரூபாய் கிடைத்துவிடும். அதே இரண்டாண்டுகள் எனில் மூன்று ஈத்துகள் கிடைக்கும். அதன் மூலம் மும்மடங்கு வருமானம் கிடைக்கும்” என்றார். நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்டம், வாலஜாபாத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக் குன்றத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் தங்களின் ஆடு வளர்ப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.

நிறைவாக வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் சௌந்தரராஜன்.