Published:Updated:

மகசூல்: குதூகல வருமானம் தரும் குதிரை மசால்!

குதிரைமசால் தீவனப் பயிர் வயலில் ரங்கசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
குதிரைமசால் தீவனப் பயிர் வயலில் ரங்கசாமி

2 ஏக்கர்… 4,00,000 ரூபாய் லாபம்!

கால்நடைகளை வளர்ப்பவர்கள் தனிப்பயிராகவோ ஊடுபயிராகவோ தங்கள் தேவைக்கேற்ப தீவனச்சாகுபடி செய்வார்கள். பசுந்தீவனம் வளர்க்க நிலம் இல்லாதவர்கள், பசுந்தீவனத்தை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவார்கள். அந்த வகையில் விவசாயிகள் பலரும் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவராக, குதிரை மசால் பயிரை 2 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமி.

2 ஏக்கர்ல ஒப்பந்த அடிப்படையில் குதிரை மசால் விதைச்சிருக்கேன். ஒரு போகத்தில் 100 டன் வரை மகசூல் கிடைக்கும்.

சூலூருக்கு அருகில் உள்ள குளத்தூர் கிராமத்தில்தான் இருக்கிறது, ரங்கசாமியின் தோட்டம். ஒரு காலைவேளையில் தோட்டத்திலிருந்த ரங்கசாமியைச் சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“குளத்தூர்தான் எனக்குப் பூர்வீகம். காலேஜ், ஆஸ்பத்திரி, தொழிற்சாலைகள்னு எங்க பகுதில பெருகிட்டு இருக்கு. இந்த ஏரியாவில் 1 ஏக்கர் நிலமே 1 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகுது. என் நிலத்தையும் நல்ல விலைக்குக் கேட்டாங்க. நான் முடியாதுனு சொல்லிட்டு விவசாயம் செய்திட்டிருக்கேன். மொத்தம் 3 ஏக்கர் இருக்கு.

எங்க ஊர்ல இருக்கிற ஆச்சான் குளம், நொய்யல் ஆறு மூலமா எப்பவும் தண்ணி நிறைஞ்சு நிற்கும்.

அதனால, எங்க ஊர் கிணறுகள்ல எப்பவும் தண்ணி இருக்கும். இதனால, தடையில்லாம வெள்ளாமை நடந்துட்டிருக்கு.

மகசூல்: குதூகல வருமானம் தரும் குதிரை மசால்!

இருபது வருஷத்துக்கு முந்தி, நெல், கரும்பு, பருத்தி, வாழைனு விவசாயம் செய்தோம். ஆள்பற்றாக்குறையால் அதையெல்லாம் குறைச்சிட்டேன். 1 ஏக்கர்ல தென்னை இருக்கு. 2 ஏக்கர்ல ஒப்பந்த அடிப்படையில் குதிரை மசால் விதைச்சிருக்கேன்.

சுப்பையன்கிறவர் குதிரை மசாலை வாங்கி உலர் தீவனமா மாத்தி வெளிமாநிலங்கள்ல இருக்கிற குதிரைப்பண்ணைகளுக்கு அனுப்பிட்டு இருக்கார்.

10 வருஷமா அவருக்குத்தான் குதிரை மசாலை உற்பத்தி செஞ்சு கொடுக்கிறேன்” என்ற ரங்கசாமி தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“குளம் வத்துற சமயங்கள்ல வண்டல் மண்ணை எடுத்துட்டு வந்து தோட்டத்தில் கொட்டுவேன். அதனால, மண்கண்டம் நல்ல வளமா இருக்கு. எந்த வெள்ளாமை வெச்சாலும் பங்கம் இல்லாமல் மகசூல் கொடுக்குது. நான் இயற்கை முறையில்தான் குதிரைமசால் சாகுபடி செய்திட்டு இருக்கேன். இது விதைத்த 60-ம் நாள்ல அறுவடைக்கு வரும். அடுத்து 22 நாளுக்கு ஒரு தடவை அறுவடை செய்யலாம். இந்த மாதிரி 25 முறை அறுவடை செய்யலாம். முதல் 15 அறுவடையில் நல்ல மகசூல் இருக்கும். அப்புறம் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். 25 அறுவடை முடிஞ்சதும் விதைக்காக விட்டு அடுத்த போக விதைப்புக்கு விதை எடுத்து வெச்சுக்குவேன்” என்ற ரங்கசாமி வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“விதைச்சதுல இருந்து 25 அறுப்பு முடியுற வரை ஒருபோகம். இந்தப் போகம் முடிய கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஆகிடும். ஒரு போகத்தில் 2 ஏக்கரிலும் சேர்த்து 100 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 4 ரூபாய் கொடுத்து ஒப்பந்தக்காரரே ஆள்கள விட்டு அறுவடை செய்துக்குவார். அந்த வகையில் ஒரு போகத்துக்கு 2 ஏக்கர்ல இருந்து 4,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கிது.

2 ஏக்கர் நிலத்தில் 140 கிலோ வரை விதை கிடைக்கும். ஒரு கிலோ விதை 1,000 ரூபாய் விலைக்கு விற்பனையாகுது. அந்தவகையில ஒரு போகத்துக்கு 1,40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இந்தப் பணம் சாகுபடிச் செலவுக்குச் சரியாகிடும். குதிரை மசால் மூலமாகக் கிடைக்கிற 4,00,000 ரூபாய் அப்படியே லாபம்” என்று சொல்லி விடைகொடுத்தார், ரங்கசாமி.

- தொடர்புக்கு: என்.ரங்கசாமி, செல்போன்: 95666 50248.

இப்படிதான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் குதிரை மசால் சாகுபடி செய்யும் விதம்குறித்து ரங்கசாமி சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே…

தேர்வு செய்த 1 ஏக்கர் நிலத்தில் 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டிப் பரப்பி, மண் பொலபொலப்பாகும் வகையில் நன்கு உழ வேண்டும். பிறகு 10 அடி நீளம் 6 அடி அகலம் என்ற அளவில் பாத்திகளை அமைக்க வேண்டும். பாத்திகளுக்குள் இட வலமாக அரையடி இடைவெளியில் கூர்மையான குச்சி கொண்டு கோடுகள் கிழித்து அதில், 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலில் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரிசையாகத் தூவிவிட வேண்டும். 1 ஏக்கர் நிலத்தில் விதைக்க 8 கிலோ விதை தேவைப்படும். வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும்.

மகசூல்: குதூகல வருமானம் தரும் குதிரை மசால்!

15 நாள்களுக்கு ஒருமுறை 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். விதைத்த 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். 60-ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து 22 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு அறுவடை முடிந்ததும் களைகளை அகற்றிவிட்டுப் பிண்ணாக்குக் கரைசலைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும் (45 கிலோ கடலைப்பிண்ணாக்கை 200 லிட்டர் தண்ணீரில் 2 நாள்கள் ஊறவைத்தால் பிண்ணாக்குக் கரைசல் தயாராகிவிடும்). தொடர்ந்து 25 முறை அறுவடை செய்யலாம். அதற்குப் பிறகு பயிரை அழித்து மறுவிதைப்புச் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் பூ எடுக்கும் சமயத்தில் அறுவடை செய்து விடுவதால், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது. ஆனாலும் கோடைக்காலத்தில் இலைப்பேன் மற்றும் அசுவினி ஆகியவற்றின் தாக்குதல் வர வாய்ப்புண்டு. அதைத்தடுக்க இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் தெளிக்கலாம்.

‘‘குதிரை மசால் விதைத்த 60-ம் நாள்ல அறுவடைக்கு வரும். அடுத்து 22 நாளுக்கு ஒரு தடவை அறுவடை செய்யலாம். இந்த மாதிரி 25 முறை அறுவடை செய்யலாம்.’’

அறுவடை முடிந்த பிறகு செடிகளைப் பூக்கவிட்டால் காய்கள் உருவாகும். காய்கள் முற்றியதும் அவற்றை உருவி காய வைத்து விதைகளைப் பிரித்து எடுத்துச் சேமித்து வைத்து, மறு விதைப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.