Published:Updated:

`போக்குவரத்து செலவுக்குக்கூட வருவாய் இல்லை!’ - விலை கிடைக்கா வேதனையில் நெல்லிக்காய் விவசாயிகள்

நெல்லிக்காய் தோட்டம்
நெல்லிக்காய் தோட்டம் ( உ.பாண்டி )

ஒவ்வொரு மரத்திலிருந்தும் சுமார் 20 கிலோ வரையிலான நெல்லிக்காய் அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து அதிக விளைச்சலின் காரணமாக நெல்லிக்காய் கிலோ ரூ.35-க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்புகளுக்கு இடையே எதிர்பார்த்ததைவிட விளைச்சல் அதிகமான நெல்லிக்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல்லிக்காய் விவசாயிகள் போக்குவரத்து செலவுகூட கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

நெல்லிக்காய் விளைச்சல்
நெல்லிக்காய் விளைச்சல்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டார பகுதிகளான கோட்டைமேடு, கோரைப்பள்ளம், கிளாமரம், காவடிபட்டி, ராமசாமிபட்டி, கமுதி விளக்கு உள்ளிட்ட கிராமங்களில் நெல்லி விவசாயம் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடை மழையை எதிர்பார்த்து சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நெல்லிக்காய் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நெல்லிக்காய் விளைச்சல்
நெல்லிக்காய் விளைச்சல்
உ.பாண்டி

எதிர்பார்த்தது போல் இப்பகுதிகளில் கோடை மழை அவ்வப்போது பெய்ததின் காரணமாக நெல்லி செடிகள் நன்கு வளர்ந்து வழக்கத்தைவிட அதிக அளவில் மகசூல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மரத்திலிருந்தும் சுமார் 20 கிலோ வரையிலான நெல்லிக்காய் அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து அதிக விளைச்சலின் காரணமாக நெல்லிக்காய் கிலோ ரூ.35-க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

அதிக மகசூல் காரணமாக விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவ குணம் நிறைந்த நெல்லிக்காய் கிலோ ரூ.80-க்கு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து செலவு தொகைக்கூட கிடைக்காத நிலையில் நெல்லிக்காய் விவசாயத்தில் ஈடுபட்டவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் நெல்லிக்காய்களைப் பறிக்காமல் செடிகளிலேயே விட்டு வைத்துள்ளனர்.

நெல்லிக்காய் விளைச்சல்
நெல்லிக்காய் விளைச்சல்
உ.பாண்டி

எனவே, வருவாய் இழந்து தவிக்கும் நெல்லிக்காய் விவசாயிகளின் வேதனையைப் போக்கும் வகையில் அரசே விவசாயிகளிடமிருந்து நெல்லிக்காய்களை நியாயமான விலைக்கு கொள்முதல் செய்வதுடன், அவற்றை மூடப்பட்டு கிடக்கும் உழவர் சந்தைகளின் மூலம் விற்பனை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு