Published:Updated:

தேவையற்ற உரங்களை விவசாயிகளிடம் விற்றால் உர உரிமம் ரத்து; வேளாண் துறை எச்சரிக்கை!

உரம்

தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகப் பயிர் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் மானிய விலையில் விற்கப்படுகின்றன. விவசாயிகள் உரத்துக்காக இவர்களை அணுகும்போது அவர்கள் கேட்கும் உரத்தை வழங்காமல், கட்டாயப்படுத்தி, வேறு இடுபொருளை விற்கின்றனர்.

பயிரும் ஓர் உயிர்தான். பயிரை வளர வைக்கும் உரமே அதை கொல்லக் கூடாது. விவசாயிகள் பயிரை வளர வைப்பதற்காக உரக்கடையில் உரத்தை கேட்கும் போது உர வியாபாரிகள் அவர்கள் கேட்கும் உரத்தை விடுத்து, மாறாக வேறு இடுபொருள்களை விற்பனை செய்கின்றனர்.

இப்படி வியாபாரம் செய்வதால் பயிர் மட்டுமல்லாமல், மண்ணின் வளமும் கெட்டுப் போக வாய்ப்புண்டு. இதைத் தடுக்கும் விதமாக, விவசாயிகளிடம் தேவையற்ற இடுபொருள்களை விற்பனை செய்யும் உர வியாபாரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது.

உரம்
உரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது, தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகப் பயிர் சாகுபடிக்குத் தேவையான உரங்கள் மானிய விலையில் விற்கப்படுகின்றன. விவசாயிகள் உரத்துக்காக இவர்களை அணுகும்போது அவர்கள் கேட்கும் உரத்தை வழங்காமல், கட்டாயப்படுத்தி, வேறு இடுபொருளை விற்கின்றனர். இதுபோன்று கட்டாயப்படுத்தி இடுபொருள்களை விற்கும் செயல், அரசின் உர கட்டுப்பாட்டு விதிகளுக்குப் புறம்பானது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனை கண்டிக்கும் வகையிலும், தடுக்கும் வகையிலும், அப்படி விற்பவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண் துறை எச்சரித்துள்ளது. இது போன்ற செயலில் ஈடுபடும் உர வியாபாரிகள் குறித்து புகார் அளிக்க மாவட்ட வேளாண் இணை இயக்குநரை அணுகலாம்.

 உர விற்பனை
உர விற்பனை

மாநில உர உதவி மையத்தின் 93634 40360 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என வேளாண் துறையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.