Published:Updated:

கோழிப்பண்ணைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பா? ஆய்வு செய்ய பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு!

கோழிப்பண்ணை

கோழிப்பண்ணைகளால் காற்று, நீர், சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா என்று, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணை நடத்துவோர், இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, வரும் 2023-ம் ஆண்டு நவம்பர் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பா? ஆய்வு செய்ய பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவு!

கோழிப்பண்ணைகளால் காற்று, நீர், சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா என்று, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணை நடத்துவோர், இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, வரும் 2023-ம் ஆண்டு நவம்பர் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

Published:Updated:
கோழிப்பண்ணை

கோழிகள் எண்ணிக்கை, ஐந்தாயிரத்துக்கும் மேலிருந்தால் அந்த பண்ணைகளை ஆய்வு செய்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்று, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, துரை என்பவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ``ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. காற்று, தண்ணீர் போன்றவை மாசடைகின்றன. எனவே, சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாத கோழிப்பண்ணைகளை மூட உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பு

இந்த வழக்கு, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய நீதிபதி சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள் பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்த கோழிப்பண்ணைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினர் நேரடியாக ஆய்வு செய்தனர். அதில் பண்ணையில் ஈரப்பதமோ, ஈக்களோ, துர்நாற்றமோ இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எனினும், பண்ணைகளில் 7,000 கோழிகள் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5,000-க்கும் மேல் கோழிகள் இருந்தால், அந்தப் பண்ணையை நடத்துவோரை சிறு விவசாயிகளாக கருத முடியாது. இத்தகைய பண்ணைகளில் சுற்றுச்சூழல் விதிகளின்படி ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்
தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்

எனவே, இந்தக் கோழிப்பண்ணைகளால் காற்று, நீர், சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா என்று, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கோழிப்பண்ணை நடத்துவோர், இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, வரும் 2023-ம் ஆண்டு நவம்பர் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, வரும் ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.