Published:Updated:

`இயற்கை முறையில விளைஞ்ச 15 கிலோ காய்கறிகள்!' - அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மாடித்தோட்ட அனுபவம் - 6

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

இந்த முறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாடித்தோட்டம் பற்றிப் பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம் வீடுகளில் மட்டுமல்ல; சினிமா, அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கும் வழக்கம் இப்போது வளர்ந்து வருகிறது. அவர்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்துக்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த நட்சத்திரத் தோட்டம் தொடர். இந்த முறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாடித்தோட்டம் பற்றிப் பார்க்கலாம்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
`இயற்கையா விளைஞ்ச காலிஃப்ளவரின் ருசியே தனி!' - காயத்ரி ஜெயராமனின் மாடித்தோட்ட அனுபவம் - 3

சினிமா கலைஞர்கள் தொடங்கி பலரும் இயற்கை விவசாயத்திலும் மாடித்தோட்டம் அமைப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையிலுள்ள கிண்டி லேபர் காலனியில், தன் வீட்டு மொட்டை மாடியில் சிறிய அளவில் மாடித் தோட்டம் அமைத்து தினமும் பராமரித்து வருகிறார்.

இவர் நிறைய மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டதால் தினமும் அதிகாலை பத்து பதினைந்து கி.மீ ஓடுவது வழக்கம். எந்த ஊராக இருந்தாலும் என்ன சூழலாக இருந்தாலும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து ஓட ஆரம்பித்துவிடுவார். கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, இவரால் வெளியில் ஓட்டப்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டிய சூழல். அது இவருக்கு அதிகமான அழுத்தத்தைக் கொடுத்தது. அதனால் புத்தகம் படிப்பதில் அதிக நேரம் செலவிட்டாலும் ஓடுவது பற்றிய சிந்தனை, இவர் மனசுக்குள் ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருந்து. அப்போதுதான், `நம்ம வீட்டு மொட்டை மாடியிலேயே ஓடலாமே’ என முடிவெடுத்தார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
`தக்காளி முதல் டிராகன் ஃப்ரூட் வரை!' - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம் - நட்சத்திரத் தோட்டம் - 4

8 வடிவத்தில் ஓடினால் இடுப்பு எலும்பு வலுவடைவதுடன் கவன சக்தி அதிகரிப்பது உள்ளிட்ட பல பலன்கள் கிடைக்கும் என முன்பு படித்தது ஞாபகத்துக்கு வர, மாடியில் 8 போன்ற வடிவத்தை ஏற்படுத்தி அதில் ஓட ஆரம்பித்தார். அந்த 8 வடிவ ஓடுதளத்தில் கடந்த வருடம் ஜூன் மாதம் 4 மணி நேரம் ஓடி, `ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்திலும் இடம் பிடித்தார். அந்த நேரத்தில்தான் இந்த மாடித்தோட்டம் யோசனை தோன்றியிருக்கிறது. உடனே தனது தொகுதியில் `பசுமை சைதை' திட்டம் மூலம் தொடர்பில் உள்ள இயற்கை விவசாயிகளைத் தொடர்புகொண்டு மாடித்தோட்டம் அமைத்தும்விட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பசுமை சைதை' திட்டத்துக்காக இரண்டு டோல் ஃப்ரீ நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதிக்குள் வசிக்கும் மக்கள் தங்களுடைய பிறந்த நாளில் அந்த நம்பருக்கு போன் செய்தால் போதும். அவர்கள் வீட்டுக்கு நேரில் போய் ஒரு மரக்கன்றைக் கொடுத்து, அவர்கள் கையால் நடச் சொல்லி, `இது இவர் பிறந்த நாளுக்காக நடப்பட்ட மரம்’ என அவர் பெயரில் போர்டு ஒன்று வைக்கப்படும். இதுதான் `பசுமை சைதை’ திட்டம். இதுவரைக்கும் இந்தத் தொகுதியில் மட்டும் 36,000 மரங்களுக்கு மேல் நடப்பட்டிருக்கின்றன.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
`15 தென்னை, 10 வாழை, நிறைய அமைதி!' - நடிகர் வேல ராமமூர்த்தியின் வீட்டுத்தோட்ட அனுபவங்கள் - 5

இப்படியான இயற்கை சார்ந்த விஷயங்களைப் பல வருடங்களாக செய்துகொண்டிருந்தாலும், பணிகளுக்கு இடையே மாடித்தோட்டம் யோசனை இல்லாமல்தான் இருந்திருக்கிறது. இந்த மாடித்தோட்டம் திடீரென உதயமானதுதான். தோட்டம் அமைக்க வேன்டும் என்ற முடிவெடுத்ததும், ரசாயன உரங்கள் பயன்படுத்தக் கூடாது, பயனுள்ள காய்கறிகள் விதைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

`பசுமை சைதை’ திட்டத்துக்கு மரக்கன்றுகள் வாங்க ஆலோசனை தரும் நண்பர்கள், இயற்கை உரம் கலந்த மண்ணைக் கொண்டு தோட்டம் அமைத்துக் கொடுக்க, விதைகளை விதைத்து காலையிலும் மாலையிலும் இவர் தண்ணீரை ஊற்றி பராமரித்திருக்கிறார். மூன்று மாதத்துக்குள் வெண்டை, கத்திரி, தக்காளி, பச்சை மிளகாய் என ஒவ்வொரு காய்கறிச் செடியும் 15 கிலோவுக்கு மேல் காய்த்துவிட்டன. இதுதவிர, பூச்செடிகளும் கீரைகளும் கொஞ்சம் வைத்திருக்கிறார். இப்போது தக்காளி, வெண்டை, பிரண்டை, ரோஜா, செம்பருத்தி என செடிகளால் நிரம்பியிருக்கிறது.

ஒருமுறை விகடனுக்கு அளித்த பேட்டியில், ``இந்தக் காய்கறிகளெல்லாம் எவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்குன்னு பாருங்க. நமக்குத் தேவையான காய்கறிகளை நாமளே விளைவிச்சு சாப்பிடுறதுல ஒரு அலாதி சுகம் இருக்கத்தான் செய்யுது. அதுவும் எந்த விதமான ரசாயனங்களும் கலக்காம விளையுற காய்கறிகளோட ருசியே தனி. நான் ஆரம்பத்திலிருந்தே தீவிர அசைவப் பிரியன். இயற்கையா விளைஞ்ச இந்தக் காய்கறிகளோட ருசி என்னைச் சைவப் பிரியனா மாத்திடும்போல இருக்கு. இது சின்ன இடம்தான். குறைவான செடிகள்தான் ஆனா, வீட்டுக்குப் போதுமான காய்கறிகள் கிடைக்குது. நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க” இப்படி சொல்லியிருந்தார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு