Published:Updated:

தொடர் கனமழையால் அழுகிய இளம் நெற்பயிர்கள்; வேதனையில் டெல்டா விவசாயிகள்!

இந்த ஆண்டு கண்டிப்பாக வெற்றிகரமாக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக, தொடர் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி, ஆரம்ப நிலையிலேயே தங்களது வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கடந்த பத்து நாள்களாகப் பெய்து வரும் கனமழையால், இங்குள்ள விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சம்பா, தாளடி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட நாற்றுகள் தொடர்ச்சியாக மழைநீரில் இருந்ததால் இவற்றின் வேர்கள் அழுகி, இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கைவிட்டுப் போயுள்ளது.

தொடர் கனமழையால் அழுகிய இளம் நெற்பயிர்கள்; வேதனையில் டெல்டா விவசாயிகள்!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கண்டிப்பாக வெற்றிகரமாக விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், கொஞ்சமும் எதிர்பாராத விதமாக, தொடர் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி, ஆரம்ப நிலையிலேயே தங்களது வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி, ``நான் 5 ஏக்கர்ல சம்பா பட்டத்துல நெல் சாகுபடி செஞ்சிருந்தேன். நாத்து நட்டு 20 நாள்தான் ஆகுது. பத்து நாளா இந்தப் பகுதிகள்ல தொடர்ச்சியா மழை பேஞ்சிக்கிட்டே இருக்கு. என்னோட வயல் முழுக்க தண்ணீர் தேங்கி நின்னுகிட்டே இருந்ததுனால, நாத்தெல்லாம் அழுகிப் போயிடுச்சு. நான் சாகுபடி செஞ்ச அஞ்சு ஏக்கர்லயும் முழுமையான பாதிப்பு. இதுல கொஞ்சம் கூட பயிர் தேறி வராது. எனக்கு மட்டுமல்ல, நீடாமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் முழுக்கவே, இளம் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கு’’ என வேதனையோடு தெரிவித்தார்.

விவசாயி காசிநாதன்
விவசாயி காசிநாதன்
பெட்ரோ கெமிக்கல் மண்டலம்: அச்சத்தில் 50,000 குடும்பங்கள்; போராட்டத்துக்கு ஆயத்தமாகும் விவசாயிகள்!

மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த முதியவர் காசிநாதன், ``நான் மூணு ஏக்கர்ல நெல் சாகுபடி செஞ்சிருந்தேன். என்னோட வயல்லயும் கடந்த பத்து நாளா தண்ணீர் நிக்கிது. வாய்க்கால்கள் முழுமையாகத் தூர் வாராததுனால, இந்தப் பகுதிகள்ல வயல்கள்ல தண்ணீர் வடியமாட்டேங்குது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உழவு, அடிவுரம், நாற்று உற்பத்தி பறிப்பு, நடவுக்கூலினு இதுவரைக்கும் ஏக்கருக்கு 15,000 ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். ஆனால், இதுல ஒத்த பைசா கூடதிரும்பி வராது. போன வருசம் சம்பா பட்டத்துல சாகுபடி செஞ்ச நெற்பயிர்கள் நல்லா செழிப்பா விளைஞ்சு அறுவடைக்கு வந்த நேரத்துல, புயலாலயும் பருவம் தவறிய மழையாலும் கடுமையான நஷ்டத்தை சந்திச்சோம். இந்த வருசமும் இப்படி ஆயிடுச்சு" என மனம் உடைந்து பேசினார்.

தொடர் மழை; வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கும் 100 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்!

குடவாசல், நன்னிலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி, மன்னார்குடி, வடுவூர், கோயில்வெண்ணி மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் தொடர் கனமழையால், இளம் நெற்பயிர்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக வயல்களில் மழைநீர் தேங்கி, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ``தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய மாநில அரசுகள் ஏக்கருக்கு 20,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்" என விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு