Published:Updated:

`3 மாசத்துல வரவேண்டிய மழை, 3 நாள்ல வந்துருச்சு!' - கன மழையால் பாதித்த கும்பப்பூ நெல் சாகுபடி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பயிர்கள் மூழ்கியதால் குளம்போல காட்சி அளிக்கும் வயல்வெளிகள்
பயிர்கள் மூழ்கியதால் குளம்போல காட்சி அளிக்கும் வயல்வெளிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை அணை நீரைவிட குளத்துத் தண்ணீர் மூலம்தான் அதிகப்படியான நிலப்பரப்புகளில் விவசாயம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் குளங்களும், குளங்களை ஒட்டிய ஏலா (புரவு) விவசாய பகுதிகளையும் காணமுடியும். மழை மூலமாக குளங்கள் நிரம்பும்.

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் தாராளமாக கிடைக்கும். இதனால் எப்போதும் நெல், வாழை, தென்னை, ரப்பர் பயிர்கள் செழிப்பாக வளரும். ஆனால், அவ்வப்போது இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் அழிவுகள்தான் கன்னியாகுமரி விவசாயிகளை கவலை அடையச் செய்கின்றன.

2017-ம் ஆண்டு ஓகிப்புயலின்போது ஏற்பட்ட மழையின் காரணமாக குளக்கரைகளும், ஆற்றங்கரைகளும் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது. ஓகிப்புயலால் விழுந்த மரங்களை அகற்றும் பணிகளே இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த நிலையில் கடந்த 12 மற்றும் 13-ம் தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் மாவட்டமே சின்னாபின்னமானது. வேம்பனூர் குளம், மணவாளக்குறிச்சி பெரியகுளம் என பெரிதும் சிறிதுமாக 200 குளங்களில் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீரும், மண்ணும் கலந்து குளத்தில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் ஓடியதால் நடப்பட்டு சில வாரங்களே ஆன நெற்பயிர்கள் நாசமாயின. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாழை மற்றும் தென்னை பயிர்கள் வேர் அழுகி சேதம் அடைந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள்
கன்னியாகுமரி மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள்
கன்னியாகுமரி: சாலைகளில் ஓடிய வெள்ளம்; மேலும் 2 நாள்கள் கனமழை! - வீடு வீடாக எச்சரிக்கும்  போலீஸார்

துவரங்காட்டைச் சேர்ந்த விவசாயி செண்பகசேகர பிள்ளையிடம் பேசினோம். ``கன்னியாகுமரி மாவட்டத்தில கடந்த ஆகஸ்ட் மாசத்தில இருந்தே மழை பெய்துகிட்டுதான் இருக்கு. இதனால அணைகளும், குளங்களும் நிரம்பிவிட்டன. நிலமும் தண்ணீரை உள்வாங்காத நிலை. கடந்த 12-ம் தேதி ஒரே நாள்ல 21 சென்டிமீட்டர் மழை பெய்தது. 12,13 மற்றும் 14-ம் தேதிகளில் மூன்று நாளில் மூன்று மாதம் பெய்ய வேண்டிய மழை மொத்தமா பெய்தது. அதுமட்டும் இல்லாம குளங்களும், ஆறுகளும் ஆக்கிரமிப்பில இருக்கு. தண்ணீர் போக விசாலமாக கால்வாய்கள் இல்லாததுனால பயிர்கள் தண்ணீர்ல மூழ்கிவிட்டன. இப்ப கும்பப்பூ சாகுபடி செய்திருக்கிறோம். துவரங்காடு பகுதியில மட்டும் 2,000 ஏக்கர் நெல் வயல் தண்ணீர்ல மூழ்கி சேதம் ஆகிவிட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 6,000 ஹெக்டேர் வயல்வெளி நாசம் அடைந்துள்ளன. நட்ட நாற்றுகளை வெள்ளம் இழுத்துச் சென்றுவிட்டது. இனி நடுவதற்கு நாற்றும் இல்லை. அதுதான் கவலையா இருக்கு" என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை அணை நீரைவிட குளத்துத் தண்ணீர் மூலம்தான் அதிகப்படியான நிலப்பரப்புகளில் விவசாயம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் குளங்களும், குளங்களை ஒட்டிய ஏலா (புரவு) விவசாய பகுதிகளையும் காணமுடியும். மழை மூலமாக குளங்கள் நிரம்பும். ஒரு குளம் நிரம்பினால் மற்றொரு குளத்துக்கு மறுகால் தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால்கள் அமைந்துள்ளன. இந்த வாய்க்கல்கள்தான் ஆக்கிரமிப்பில் உள்ளன.

வேம்பனூர் குளம் உடைந்ததால் வயல்வெளிக்குள் புகுந்த தண்ணீர்
வேம்பனூர் குளம் உடைந்ததால் வயல்வெளிக்குள் புகுந்த தண்ணீர்
வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி... விடாமல் பெய்யும் கனமழையால் மக்கள் கடும் அவதி!

இதுகுறித்து கோதையாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் வின்ஸ் ஆன்றோ கூறுகையில், ``குமரி மாவட்டத்தில் 2,400 குளங்கள் உள்ளன. மழையால் சுமார் 200 குளங்கள் உடைந்தன. ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் விதமாக குளங்களை ஆறுகளில் தடுப்பணை ஏற்படுத்தியும், குளங்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியும் செய்யப்பட வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த விவசாய பாசன குளங்களான தேரூர் குளம், தத்தையார் குளங்களை வனத்துறைவசம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதனால் அந்த குளங்களில் தூர்வாரி மேம்படுத்தும் பணிகள் செய்யமுடியாமல் பாழடைந்து வருகிறது. இந்த நிலையில், வேம்பனூர் மற்றும் மணவாளக்குறிச்சி பெரியகுளம் ஆகியவற்றை வனத்துறை வசம் ஒப்படைக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது. இதை உடனடியாக கைவிட வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு