Published:Updated:

சரியான லாபம் கொடுக்கும் சண்டைக்கோழி வளர்ப்பு!

சேவல்
பிரீமியம் ஸ்டோரி
News
சேவல்

கால்நடை

கால்நடைத் தொழில்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது நாட்டுக்கோழி. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆட்டு இறைச்சி கிலோ 1,000 ரூபாயை எட்டிய நிலையில், நாட்டுக்கோழி விற்பனை சூடுபிடித்தது. தற்போது நாட்டுக்கோழிகள் வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சில பண்ணையாளர்கள் நாட்டுக்கோழியுடன் சண்டை சேவலையும் வளர்த்து விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகேயுள்ள மாரம்பாடியைச் சேர்ந்தவர் தாமஸ்.
சேவல்
சேவல்

தனது 53 சென்ட் நிலத்தில் நாட்டுக்கோழிகள், சேவல்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். ஓர் அதிகாலையில் பண்ணைக்குள் சென்றோம். குஞ்சு வளர்வதற்குத் தனி இடம், கோழிகள், சேவல்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இடங்கள். கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலைபோலக் காட்சியளித்தது அந்தப் பண்ணை. சேவலுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருந்த தாமஸைச் சந்தித்தோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கோழிப்பண்ணை, சேவல்களுடன்
கோழிப்பண்ணை, சேவல்களுடன்

‘‘இதுதான் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். அப்பா, தாத்தா காலத்துல பால் மாடுகள் வெச்சிருந்தோம். 28 மாடுக வரைக்கும் இருந்துச்சு. தினமும் 300 லிட்டர் வரைக்கும் பால் கறந்து சொசைட்டிக்கு ஊத்துவோம். ஆனாலும் சொல்லிக்கிற மாதிரி கையில ஒண்ணும் நிக்கலை. இந்த நிலைமையில நான் டிப்ளோமா மெக்கானிக் இன்ஜினீயரிங் படிச்சேன். திண்டுக்கல்ல இருக்க ஒரு தனியார் கல்லூரியில படிச்சு முடிச்சுட்டு அங்கயே வேலைக்குச் சேர்ந்தேன். 10 வருஷம் அங்க வேலை பார்த்தேன். 5,000 ரூபாய்ல ஆரம்பிச்ச சம்பளம் 25,000 வரைக்கும் கூடிச்சு. அது எனக்குக் கட்டுப்படியாகலை. அதனால எங்க தோட்டத்துல மண்புழு உரம் தயாரிச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். அது நல்லா போயிட்டு இருந்துச்சு. அப்ப திடீர்னு தண்ணி பற்றாக்குறையாகிடுச்சு. மண்புழு உரம் தயாரிக்கிற அளவுக்குத் தண்ணி இல்லை. அப்பதான் அதை விட்டுட்டு கோழி வளர்ப்பைத் தேர்வு பண்ணினேன். அதுக்கு தண்ணி அதிகம் தேவைப்படாது. முக்கியமா கோழி வளர்ப்புல நஷ்டம் வராது. ஒரு கோழி ஒரு பருவத்துக்குக் குறைஞ்சபட்சம் 10 முட்டைகள் வைக்கும். அதை வளர்த்துக் கிலோ 400 ரூபாய்னு வித்தாலும் 10,000 ரூபாய் கிடைக்கும். இது நல்ல லாபமான தொழில்னு இறங்குனேன். 200 தாய்க் கோழிகள், 40 சேவல்கள் வாங்கி, பண்ணையை ஆரம்பிச்சேன். கறி, சண்டை சேவல் இது ரெண்டும்தான் என்னோட விருப்பமா இருந்துச்சு. அதுல இறங்கி நெளிவு சுளிவைக் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒரு மாத குஞ்சு 300 ரூபாய்

கோழிகளோட எண்ணிக்கை படிப்படியா அதிகமாச்சு. பிறகு, நவீன முறையில நாட்டுக்கோழி வளர்ப்புலயும் இறங்குனேன். இப்ப மேய்ச்சல் முறை, நவீன முறை ரெண்டு விதமாகவும் கோழிகள் வளருது. என்கிட்ட 1,000 தாய்க் கோழிகள், 100 சேவல்கள் இருக்கு. கோழிகளுக்கு முழுக்க மூலிகை கலந்த தீவனம்தான் கொடுக்குறேன். சுக்கு, மிளகு, திப்பிலி, ஆடாதொடா, பிரண்டை, மஞ்சள், வேம்பு, கண்டங்கத்திரினு இன்னும் சில மூலிகைகளை அரைச்சு, தீவனத்துல கலந்து கொடுத்துதான் வளக்குறேன். முட்டைகளை எடுத்து, வெளியே கொடுத்து பொரிக்க வைக்குறேன். குஞ்சுகளுக்குத் தடுப்பூசிப் போட்டுத்தான் விற்பனை செய்றேன். ஒருநாள் குஞ்சு 200 ரூபாய், ஒரு மாசக்குஞ்சு 300 ரூபாய்னு கொடுக்குறேன். பெரும்பாலும் ஒருநாள் குஞ்சுகள் கொடுக்க மாட்டேன். ஒரு மாசக்குஞ்சுகள்தான் கொடுப்பேன். ஒரு மாசம் அதுக்கு போட வேண்டிய தடுப்பூசி, மருந்து எல்லாம் போட்டுதான் கொடுக்குறேன். என்கிட்ட வாங்கிட்டுப் போற குஞ்சுகள் நல்லா ஆரோக்கியமா வளரும். அதுக்கு கேரண்டியோட தான் கொடுக்குறேன்.

சேவல்களுடன் தாமஸ்
சேவல்களுடன் தாமஸ்

இலங்கை போகும் சேவல்கள்

என்கிட்ட இருக்கிறது சங்ககிரி, பொள்ளாச்சி ரகச் சேவல்கள் மற்றும் பெருவிடை கோழிகள்தான். முழுக்க அந்தியூர் ஒரிஜினல் கோழிகள். கோழி 4 முதல் 4.5 கிலோ எடை இருக்கும். சேவல் 5 முதல் 6 கிலோ எடை இருக்கும். அதனாலதான் குஞ்சுகளை அந்த விலைக்குக் கொடுக்குறேன். குஞ்சுகளுக்கு நல்ல தேவை இருக்கு. பண்ணைக்கு வந்து தாய்க்கோழி, சேவலைப் பார்த்துட்டுத்தான் புக் பண்ணிட்டுப் போவாங்க. அதுல குஞ்சு எடுத்துக் கொடுப்போம். எங்க பண்ணையில சண்டை சேவல் ரொம்பப் பிரபலம். இலங்கை, மகாராஷ்டிரா, ஆந்திராவுக்குச் சேவல், கோழிகளை வாங்கிட்டுப் போறாங்க’’ என்றவர் வருமானம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சேவல் மூலம் ஆண்டுக்கு ரூ.10 லட்சம்

1,000 தாய்க்கோழிகள்ல இருந்து மாசம் 3,000 முட்டைகளுக்கு அதிகமா கிடைக்கும். அதுல தரமான முட்டைகளை மட்டும்தான் பொரிக்க வைப்போம். சுமார் 2,000 முட்டைகள் வரைக்கும் பொரிக்க வைப்போம். எல்லாக் குஞ்சுகளையும் விற்பனை செய்ய மாட்டோம். 300 குஞ்சுகளை வெச்சுகிட்டு 1,700 குஞ்சு களைத்தான் விற்பனை செய்வோம். ஒரு மாசம் தடுப்பூசி கொடுத்து வளர்த்துதான் விற்பனை செய்வேன். இந்தக் குஞ்சுகளையெல்லாம் பெரும்பாலும் சண்டைக் கோழிகளாதான் விக்கிறேன். அதனாலதான் ஒரு குஞ்சு 300 ரூபாய் விலையில 1,700 குஞ்சுகளுக்கு 5,10,000 ரூபாய் கிடைக்கும். சேவலைப் பொறுத்தவரை அது எந்த உசரத்துக்கு எகிறி சண்டைப் போடுதோ அதுக்கு ஏற்பத்தான் விலை இருக்கும். என்கிட்ட 10 அடி உயரம் வரைக்கும் பறந்து சண்டை போடுற சேவல்கள் இருக்கு. சேவலோட நிறம், கால் அமைப்பைப் பொறுத்து விலை இருக்கும். குறைஞ்சபட்சம் 5,000 முதல் சேவல் விலை இருக்கும். வருஷம் 100 சேவல்கள் வரைக்கும் விற்பனை செய்வேன். ஒரு சேவல் சராசரியா 12,000 ரூபாய்னு வெச்சுகிட்டாலும் 12,00,000 ரூபாய் கிடைக்கும். அதை மாசக் கணக்குல பார்த்தா, மாசம் 1,00,000 ரூபாய். ஆக மொத்தம் குஞ்சு, சேவல் விற்பனை மூலமா மாசம் 6,10,000 ரூபாய் கிடைக்குது. அதுல வேலையாட்கள் சம்பளம், தீவனம், மூலிகைகள், மருந்து, பொரிக்க வைக்குற கூலினு 2,10,000 ரூபாய் செலவாகிடும். மீதம் 4,00,000 லாபமா நிக்குது’’ என்றவர் நிறைவாக,

குஞ்சு பராமரிப்பு, முட்டைகள்
குஞ்சு பராமரிப்பு, முட்டைகள்

“இந்தத் தொழில்ல 4 வருஷமா இருக்கேன். என்னைத் தேடி வந்துதான் வாங்கிட்டுப் போறாங்க. விற்பனைக்காக நான் எங்கேயும் அலையிறது இல்லை. இன்னிக்கு நிலவரத்துக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு அருமையான தொழில். இதுல அரசாங்கம் இன்னும் கொஞ்சம் சலுகைகள், மானியங்கள் கொடுத்தா இந்தத் தொழில் இன்னும் வளரும். இந்த 53 சென்ட் இடத்துல இருந்து மாசம் 6,00,000 வருமானம் வேற எந்தத் தொழில்லயும் கிடைக்காது’’ என்றார்.

தொடர்புக்கு. தாமஸ். செல்போன்: 94421 30022.

சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி

ல்லா முட்டையையும் பொரிக்க வைக்க மாட்டோம். 50 முதல் 60 கிராம் எடை இருக்க முட்டையைத்தான் பொரிக்க வைப்போம். அப்பத்தான் 35 கிராம் எடையில குஞ்சு வரும். குஞ்சுக்கு முதல் நாள் லிவர் வீக்கம் வராம இருக்கறதுக்காக ஒரு மருந்து கொடுப்போம். அந்த மருந்து லிட்டர் 6,000 ரூபாய். அந்தக் குஞ்சுகளை 35 டிகிரி வெப்பநிலையில 10 அடிக்கு 10 அடி அறையில 7 நாள் புரூடர்ல வளர்ப்போம். அதுக்குப் பிறகு வெளியே எடுத்து அறை வெப்பநிலையில 7 நாள்கள் வளர்ப்போம். இதுல 7-ம் நாள் எப்1 மருந்தும், 15-ம் நாள் ஐபிடி மருந்தும் கொடுப்போம். 25-ம் நாள் லசோட்டோ கொடுக்கிறோம். கோழிகள் நம்ம தட்பவெப்ப சூழ்நிலையைத் தாங்கி வளரணும். அதுக்காக 20-ம் நாள் குளிர், வெயில், மழை, பனி தாங்கி வளர்ற மாதிரி வளர்ப்போம். கீழே மணல் இருக்கும். மேலே கூண்டு வெச்சு அடைச்சிடுவோம். கால் விரல்கள்மூலம் மண்ணைக் கிளறத் தொடங்கிவிடும். இதை வாங்கிட்டுப் போறவங்க வெப்பம் இருக்க இடம், இல்லாத இடங்களை எங்க வேணும்னாலும் வளர்க்கலாம். இப்படிக் கவனமா வளர்த்துக் கொடுக்குறதால தான் ஒரு மாச குஞ்சு 300 ரூபாய்க்குக் கொடுக்கிறோம்’’ என்றார்.