Published:Updated:

`நூற்புழுக்களின் பாதிப்பை தவிர்க்க இதைச் செய்யுங்கள்!' - பகிரும் தோட்டக்கலைத்துறை அதிகாரி

சம்பா‌ கோதுமை அறுவடை

அமைச்சர் ராமசந்திரனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விளை நிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சம்பா கோதுமையை பயிர் செய்தனர். அது விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. வனத்துறை அமைச்சர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் சம்பா கோதுமை அறுவடையை இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தனர்.

`நூற்புழுக்களின் பாதிப்பை தவிர்க்க இதைச் செய்யுங்கள்!' - பகிரும் தோட்டக்கலைத்துறை அதிகாரி

அமைச்சர் ராமசந்திரனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விளை நிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சம்பா கோதுமையை பயிர் செய்தனர். அது விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. வனத்துறை அமைச்சர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் சம்பா கோதுமை அறுவடையை இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தனர்.

Published:Updated:
சம்பா‌ கோதுமை அறுவடை

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் `இங்லீஷ் வெஜிடபிள்ஸ்' எனப்படும் மலைக் காய்கறி விவசாயத்தை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. கேரட், காலிஃப்ளவர், புரக்கோலி, முட்டைக்கோஸ், பீட்ரூட் எனப் பயிரிடப்பட்டு வருகிறது. ஒற்றைப் பயிர் முறையை மாற்றி சுழற்சி முறையில் மாற்றுப் பயிர்களில் கவனம் செலுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

சம்பா‌ கோதுமை அறுவடை
சம்பா‌ கோதுமை அறுவடை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதன் அடிப்படையில் குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர் கோதுமை ஆராய்ச்சி மையம் மற்றும் நீலகிரி தோட்டக்கலைத்துறை தரப்பில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் விளை நிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு சம்பா கோதுமையை பயிர் செய்தனர். அது விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. வனத்துறை அமைச்சர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் சம்பா கோதுமை அறுவடையை இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சம்பா கோதுமை சாகுபடியின் பயன்கள் குறித்து நம்மிடம் பேசிய தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர், ``நீலகிரியில் ஆண்டு முழுவதும் மலைக் காய்கறி பயிர்கள் தொடர்ந்து பயிரிடப்படுவதால் மண்ணில் நூற்புழுக்களின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. நூற்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்க பயிர் சுழற்சி முறையில் கோதுமை பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகிறோம். பெட்டட்டி பகுதியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் சம்பா கோதுமையை பயிர் செய்தோம். தற்போது நல்ல மகசூல் கிடைத்துள்ளது.

சம்பா‌ கோதுமை அறுவடை
சம்பா‌ கோதுமை அறுவடை

இதனை அமைச்சர் ராமசந்திரன் பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் தலைமையில் தோட்டக்கலைத்துறை மூலம் அறுவடை விழா நடத்தப்பட்டது. விவசாயிகளும் தங்கள் வயலில் ஒரே பயிரைச் சாகுபடி செய்வதைத் தவிர்த்து மாற்றி பயிர் செய்ய வேண்டும். அப்போது நோய் தாக்குதலை குறைக்க முடியும். விவசாயத்தில் பயிர் சுழற்சி மிகவும் முக்கியமானது. இது குறித்த விழிப்புணர்வுகாகவே இந்த வயல் அறுவடை விழா நடத்தப்பட்டது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism