Election bannerElection banner
Published:Updated:

வீட்டுத்தோட்டங்களைத் தாக்கும் ஆப்பிரிக்கன் நத்தை... நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

ஆப்பிரிக்கன் நத்தை
ஆப்பிரிக்கன் நத்தை

ஆப்பிரிக்கன் நத்தை அழுகிப்போன பொருள்களை மட்டும்தான் சாப்பிடும் என்று சிலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது பசும் இலைகளையும் ஆவலாகச் சாப்பிடும்.

வீட்டுத்தோட்டத்தில் நகர்வாழ் மக்களுக்கும் ஆர்வம் வந்துவிட்டது. வீட்டுக்கு முன்னால் சிறிதளவு இடம் இருந்தால்கூட தொட்டிகளில் தக்காளி, பச்சை மிளகாய், வெந்தயக்கீரை, கத்திரிகாய் என்று சில செடிகளை வளர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இவர்களும் இவர்களுடைய செடிகளும் சந்திக்கின்ற பிரச்னைகளில் ஒன்றுதான் ஆப்பிரிக்கன் நத்தை. ஒரே இரவில் ஆசை ஆசையாக வளர்த்த அத்தனை செடிகளையும் தின்று தீர்த்துவிடும்.

பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்
பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்

காலங்காலமாக தோட்டம் போட்டு வந்தவர்களுக்கு இந்த நத்தைகளை எப்படி விரட்டவேண்டும் என்பது தெரியும். ஆனால், புதிதாகச் செடி வளர்க்க ஆரம்பிக்கிற நகரவாசிகளுக்கு இது தெரியாது. இவர்களுக்காக, ஆப்பிரிக்கன் நத்தைகளை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்று சிம்பிளான வழிமுறைகளைச் சொல்கிறார் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்.

``ஆப்பிரிக்கன் நத்தை அழுகிப்போன பொருள்களை மட்டும்தான் சாப்பிடும் என்று சிலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது பசும் இலைகளையும் ஆவலாகச் சாப்பிடும். எக்கச்சக்கமாகச் சாப்பிடும் தன்மைகொண்டது ஆப்பிரிக்கன் நத்தை.

மாடித்தோட்டத்தில் அதிக விளைச்சல் எடுப்பது எப்படி? - ஒரு கம்ப்ளீட் கைடு!

இந்த நத்தைகளுக்கு நொதிக்க வைக்கப்பட்ட சாறுகள் அதிகம் பிடிக்கும். ஒரு பாட்டிலுக்குள் கருவாட்டு துண்டைப் போட்டு தண்ணீர் ஊற்றி செடிகளுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டால், அந்த பாட்டிலுக்குள் சென்றுவிடும். அல்லது பழுத்த வாழைப்பழம் அல்லது பப்பாளிப்பழம், சம அளவு வெல்லம் சேர்த்து பாட்டிலை மூடி வைத்துவிட வேண்டும். இந்த பாட்டிலை தினமும் ஷேக் செய்யவேண்டும். ஒன்று அல்லது ஒன்றரை மாதத்தில் இதிலிருந்து சாராய வாடை வந்துவிடும். இதையொரு டப்பாவில் ஊற்றி செடிக்கு அருகே வைத்தால் சாப்பிட வரும். பிடித்து, அப்புறப்படுத்திவிடலாம்.

home gardening
home gardening

ஒன்றிரண்டு ஆப்பிரிக்கன் நத்தைகள் வந்தால் பிடித்து உப்புத்தண்ணீரில் போட்டுவிடுங்கள். இறந்தவுடன் அதையெடுத்து வெளியே போட்டால் கோழிக்கோ, காக்காவுக்கோ உணவாகிவிடும். முடிந்தால், ஓட்டைப் பிடித்துத் தூக்கி டப்பாவுக்குள் போட்டு அப்புறப்படுத்திவிடலாம். இதைத் தொடுவதால் ஒன்றும் பிரச்னை வராது.

மழைக்காலங்களிலும் ஈரப்பதம் அதிகமான இடங்களிலும்தான் இந்த நத்தைகள் அதிகமாக வரும். வெயில் காலத்தில் குறைந்துவிடும்'' என்றார்.

1,000 ரூபாய் போதும்... அழகாய் அமைக்கலாம் வீட்டுத் தோட்டம்- கம்ப்ளீட் கைடு!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு