Published:Updated:

மாடித்தோட்டத்துல பயிர்கள் வாடிப் போகுதா? நீங்க பண்ணவேண்டியது இதுதான்! - வீட்டுக்குள் விவசாயம் - 18

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் பசுமையை உருவாக்க வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 18

``வீட்டுத்தோட்டம் அமைக்குறதுல பிரச்னை இல்லை. ஆனா, நாலு நாள் ஊருக்குப் போயிட்டா அதுக்கு தண்ணி ஊத்துறது யாரு? அதுனாலதான் யோசிக்கிறேன்" - இப்படிச் சொல்றவங்க நிறைய பேர் அதுக்கு யோசனை பண்ணிகிட்டே மாடித்தோட்டம் பக்கம் எட்டிக்கூட பாக்குறதில்லை. ஆனா, இது ஒரு பிரச்னையே இல்லீங்க. மாடித்தோட்டம் அமைக்கும்போது, பையில மண் அதிகமா சேர்த்தாதான் இந்தப் பிரச்னை. அதுக்குப் பதிலா தென்னைநார் கழிவு உரத்தைப் பயன்படுத்தணும். இந்தக் `காயர் கம்போஸ்ட்' ஒட்டகம் மாதிரி, தண்ணி கிடைக்கும்போது உறிஞ்சுகிட்டே இருக்கும். பயிர்களுக்கு நாம கொடுக்குற தண்ணிய உறிஞ்சு வெச்சுக்கும். நாலு நாள் தண்ணி கிடைக்காதப்ப, உறிஞ்சு வெச்ச தண்ணியை பயிர்கள் எடுத்துக்கும். அதுனால வீட்டுத்தோட்டம் அமைக்கும்போதே `காயர் கம்போஸ்ட்' மூலமா அமைச்சுட்டா போதும். நாலு நாள் ஊருக்குப் போனாலும் கவலைப்படாம போயிட்டு வரலாம்.

நிர்மல்
நிர்மல்

ஊருல இருந்து திரும்ப வந்த பிறகு, செடிகளைப் பாருங்க. நல்லாதான் இருக்கும். அதுக்கும் மீறி செடிகள் வாடி இருந்தா, கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வைத்தியம் இருக்கு.

10 லிட்டர் தண்ணியில ஒரு லிட்டர் இளநீரை கலந்துக்கணும். அதை மதிய நேரத்துல வாடி நிக்குற செடிகள் மேல தெளிச்சு விட்டா போதும். ரெண்டு மணி நேரத்துல பயிர்கள் புத்துணர்வு பெற்று, பளபளனு இருக்கும். இதுனால செடிகளோட வாட்டம் போறது மட்டுமல்ல. மகசூலும் அதிகமாகும். அதுலயும் கோடைக்காலத்துல இந்த வைத்தியம் நிச்சயம் தேவைப்படும்.

பொதுவா வீட்டுத்தோட்டம் அமைக்குறதுல இடம் இல்லை, தண்ணி வசதி இல்லை, உரம் இல்லைன்னு சொல்லுவாங்க. ஆனா, அது ஒரு மேட்டரே இல்லைனு சொல்றாரு காலி இடத்துலயெல்லாம் செடிகளை வளர்த்துட்டு வர்ற `எக்ஸ்னோரா' நிர்மல்.

``தோட்டம் அமைக்க இந்த இடம்தான்னு இல்லை. எல்லா இடத்திலும் செடிகளை வளர்க்கலாம். நான் அடுக்குமாடிக் குடியிருப்பில் 12-ம் தளத்தில் என்னுடைய வீட்டில் பல்வேறு செடிகளை வளர்த்து வருகிறேன். மொட்டை மாடியில் மட்டும்தான் செடிகளை வளர்க்க முடியும் என நினைக்கிறார்கள். ஆனால், வீட்டுக்கு உள்ளேயும் செடிகளை வளர்க்க முடியும்.

மூங்கில் கழிகளில் செடிகளை வளர்த்து வருகிறேன். சூரிய ஒளி தேவைப்படாத பயிர்களும் இருக்கின்றன. சில பயிர்களுக்கு வெளிச்சம் மட்டும் போதும். நிழலில் வளரும் செடிகளில் 30 ரகங்கள் இருக்கின்றன. ஆக, நமக்குத் தேவைப்படுவதெல்லாம் மனசுதான். அது இருந்தால் எங்கும் செடிகளை வளர்க்க முடியும்.

1,000 சதுர அடி பரப்புள்ள மொட்டை மாடியில் வெர்டிக்கல் கார்டன் அமைப்பதன் மூலம் மொட்டைமாடி தோட்டத்தின் பரப்பளவை 10,000 சதுர அடியாக மாற்ற முடியும். `வீட்டுத்தோட்டம் என்று சொன்னாலே தண்ணிக்கு எங்க போறது?' என்றுதான் பலரும் சொல்கிறார்கள். ஆனால், கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைதான் நமது கதை.

Tomato
Tomato
Photo: Vikatan / Saravanakumar.P
பழைய வாட்டர் கேன்லயே அசத்தலா அமைக்கலாம் மாடித்தோட்டம்... வாங்க தெரிஞ்சுப்போம்! -  17

நமது வீடுகளில் பயன்படுத்திய பிறகு, கழிவு நீர் என வெளியேற்றும் தண்ணீரில் 25 சென்ட் தோட்டத்தையே வளர்க்கலாம். வாசிங்மெஷின் மூலமாக வெளியேறும் தண்ணீரைக் குழாய் மூலமாகச் சேமித்துப் பயன்படுத்தலாம். பொதுவாக, கழிவுநீரை மூன்று வண்ணங்களாகப் பிரிக்கிறார்கள். சாம்பல் வண்ண கழிவு நீர், கறுப்பு வண்ண நீர், வெள்ளை வண்ண நீர் எனப் பிரிக்கிறார்கள். இதில் சாம்பல் வண்ண நீர் என்பது அரிசி, பருப்பு, பாத்திரம் கழுவும் தண்ணீர். அதைப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். கறுப்பு வண்ண நீர் என்பது கழிவறை கழிவு நீர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போலக் குளிக்கும்போது வீணாகும் சோப்பு தண்ணீரைத்தான் வெள்ளை வண்ண நீர் என்கிறார்கள். அந்த நீரையும் நாம் வீணாக்கித்தான் வருகிறோம். நமது வீட்டில் வீணாகும் கழிவு நீரை முறையாகச் சுத்திகரித்துப் பயன்படுத்தினாலே போதும்... பெரிய தோட்டத்தையே வளர்க்கலாம்'' என்றார்.

மாவுப்பூச்சிக்கு புளிச்ச மோர், இரும்புச் சத்துக்கு முருங்கை இலை... மாடித்தோட்ட அனுபவங்கள்! - 16

வீட்டுக்குள்ளேயே தயாரிக்கலாம் உரம்!

வாழை, திராட்சை போன்ற பழக்கழிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சம அளவு வெல்லத்தைப் போட்டு 15 நாள்கள் வைத்து விட வேண்டும். பிறகு, அதை எடுத்து 5 மடங்கு தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம். இதனால் செடிகள் வளர்ச்சி நன்றாக இருக்கும். சோடியம், பொட்டாச்சியம் சத்துகள் குறைந்தால் 10 முட்டை, 10 எலுமிச்சம் பழங்களோடு கொஞ்சம் வெல்லம் கலந்து 15 நாள்கள் வைத்திருந்து தெளிக்கலாம். இதைப் போன்ற பொருள்களை வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தலாம். தோட்டம் அமைக்க இடமே இல்லை. என்பவர்கள் காம்பவுண்ட் சுவரில் கூட கீரைகள், காய்கறிகளை வளர்க்கலாம். அதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு