Published:Updated:

மாடித்தோட்டத்தை வளமாக்கும் வெங்காயத்தோல் & வாழைப்பழத்தோல்... எப்படி? - வீட்டுக்குள் விவசாயம் - 24

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டம் வாயிலாக ஒவ்வொரு வீட்டிலும் பசுமையை உருவாக்க வழிகாட்டும் தொடர்..! #VeetukkulVivasayam #DIYTerraceGarden - பாகம் - 24

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பாகப் பல்வேறு விஷயங்களை இந்தப் பகுதியில் பார்த்துட்டு வர்றோம். அந்த வகையில இன்னிக்கி சுலபமான ஒரு வழியைத் தெரிஞ்சுக்க போறோம்.

பொதுவா செடிகள்ல சல்லிவேர் அதிகமா உருவாகுறதுக்கும், தண்டு வளர்ச்சி சிறப்பா இருக்கிறதுக்கும் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், காப்பர், சல்பர், அயோடின்னு பல்வேறு சத்துகள் தேவைப்படுது. இந்தச் சத்துகள் கிடைச்சாதான் செடிகள்ல முழுமையான வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும்.

510 ரூபாய்க்கு அரசின் மாடித்தோட்டம் கிட்... என்னென்ன இருக்கும்? - வீட்டுக்குள் விவசாயம் - 23

வீட்டுத்தோட்ட விவசாயிகள், இந்தச் சத்துகளுக்கு எங்கே போறது?

உடனே இந்தக் கேள்விதான் வரும். கவலையே படாதீங்க மக்களே. இதுல பெரும்பாலான சத்துகளைத்தான் நாம் தினமும் குப்பைத்தொட்டியில போட்டுக்கிட்டு இருக்கோம். அதைக் குப்பையில போடுறதுக்குப் பதிலா சின்ன மாற்றம் பண்ணி, செடிகளுக்குக் கொடுத்தா உரம். மேலே சொன்ன சத்துகள் தன்னால கிடைச்சிடும். சுருக்கமா சொன்னா நம்ம கையில வெண்ணெய் இருக்கு... நெய் தேடி ஏன் அலையணும்?

இன்னிக்கு வாழ்க்கை முறையில பெரும்பாலும் வாழைப்பழம் சாப்பிடுற பழக்கம் பலரிடமும் இருக்குது. அதேபோல கிலோ 100 ரூபாய்க்கு விற்றாலும் வெங்காயம் இல்லாம சமையல் இருக்காது. அந்தளவுக்கு வெங்காயம் நமக்கு அத்தியாவசிய பொருள். இந்த ரெண்டு பொருள்கள்ல இருந்துதான் செடிகளுக்குத் தேவையான சத்துகளை எடுத்து உரமாக்கி கொடுக்கப் போறோம். அதைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க.

வாழைப்பழம்
வாழைப்பழம்

வாழைப்பழத்தை உறிச்சு, பழத்தைச் சாப்பிட்டதும், தோலை என்ன பண்ணுவோம்?

``அதை எங்க பேங்க்லயா போட முடியும்? குப்பைத்தொட்டியிலதான் போடுவோம்"-னு சொல்ற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது. இதுவரைக்கும் குப்பைத்தொட்டியில போட்ட தோலை இனிமே போடாதீங்க. அந்தத் தோல்லதான் இருக்கு சீக்ரெட்.

வாழைப்பழத் தோலை 3 நாள் நல்ல வெயில்ல காய வைக்கணும். முழு தோலை அப்படியே போடாம, சின்னச் சின்னதா வெட்டிக் காய வெச்சா சீக்கிரம் காய்ஞ்சிடும். காய்ஞ்ச வாழைத்தோலை கையில எடுத்து விரலுக்கு மத்தியில வெச்சு உடைச்சா துண்டு துண்டா உடையணும். அந்தப் பதத்துக்குக் காயணும். பிறகு, அதை எடுத்துப் பொடி பண்ணணும். உடனே மிக்ஸியைத் தேட வேண்டாம். சின்ன உரல்ல வெச்சு குத்தி பொடியாக்கிக்கணும். இந்தப் பொடிதாங்க அற்புதமான உரம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுல பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம் சத்துகள் அடங்கி இருக்கு. இந்தப் பொடியை ஒரு செடியோட வேர்ப்பகுதியில் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் செடியோட அளவுக்கு ஏத்தமாதிரி போடணும். பொடியைப் போட்டு மண்ணைக் கிளறி விடவும். இப்படி செஞ்சா மூணே மாசத்துல நல்ல ரிசல்ட் பார்க்கலாம். செடியோட வளர்ச்சி நல்லா இருக்கும். தண்டு வளர்ச்சி நல்லா இருக்கும். அதையெல்லாம் விடச் செடியில் பூக்கும் திறன் அதிகரிக்கும். இதை உலகத்தில் பல நாடுகள்ல பயன்படுத்திட்டு இருக்காங்க. இதை நாமளும் செஞ்சு பார்க்கலாம். ரொம்ப ரொம்ப சுலபமான வழி இது. இன்னும் சிலர், வாழைப்பழத் தோல்ல தண்ணி ஊத்தி ரெண்டு நாள் ஊற வெச்சு, அந்தத் தண்ணீரை எடுத்துச் செடிக்குப் பயன்படுத்துறாங்க.

மாடித்தோட்ட வாழை
மாடித்தோட்ட வாழை
மாடித்தோட்டத்தில் செலவில்லாமல் பந்தல் அமைக்கலாம்... எப்படி? - வீட்டுக்குள் விவசாயம் - 22

வாழைப்பழத் தோல் பொடியைப் பயிர்களுக்குப் போடுறது இன்னைக்கு உலகம் முழுக்க பிரபலம் ஆகிட்டு இருக்க மாதிரியே, வாழைத்தோல் பொடியில `டீ' தயார் செஞ்சும் பயன்படுத்துறாங்க. இதைத் தயார் செய்ய, ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து 200 மில்லி சுடுதண்ணியில கலக்கணும். சூடு நன்றாக ஆறிய பிறகு, சம அளவு தண்ணீர் கலந்து செடிகளுக்குத் தெளிக்கலாம். இதனால் பூக்கள் அதிகம் பூக்கும்.

பயன்படுத்திய முட்டை ஓடுகளை மிக்ஸியில் போட்டு நல்லா பவுடர் போல அரைச்சு எடுத்துக்கணும். அரைச்ச மிக்ஸியை கழுவாம, அதுலயே தண்ணி ஊத்தி, அதுல வாழைப்பழத்தைச் சின்ன சின்னதா வெட்டிப் போட்டு அரைக்கணும். அதை நல்லா வடிகட்டி எடுத்து அதுல சம அளவு தண்ணி கலந்து செடிகளோட வேர்பகுதியில ஊற்றலாம். இதுனால பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் செடிகளுக்குக் கிடைக்குது.

வாழைப்பழத் தோல் மாதிரியே வெங்காயத்திலயும் தோல் (சருகு) தான் பயன்படுத்தப்போறோம். சின்ன வெங்காயத்தைவிடப் பெரிய வெங்காயம் தோல் எடுத்துக்கலாம். இந்தத் தோல்ல கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, அயோடின், சல்பர் சத்து எல்லாமே இருக்குது. இந்த வெங்காயத் தோலை செடிகளுக்கு மூடாக்காப் பயன்படுத்தலாம்.

ஒரு டப்பாவுல ஒரு கைப்பிடி வெங்காயத்தைப் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு நாள் மூடி வெச்சிடணும். அடுத்த நாள் எடுத்துப் பார்த்தா, தண்ணி காபி கலர்ல மாறி இருக்கும். அதைத் துணி மூலமா வடிகட்டி வாரம் ஒரு முறை, அந்தத் தண்ணியை செடிகளுக்கு ஊற்றலாம். அதனால் செடிகள்ல தண்டு வளர்ச்சி அபரிதமாக இருக்கும். மற்ற பகுதிகளோட வளர்ச்சியும் நல்லா இருக்கும்.

வெங்காயம்
வெங்காயம்
வறட்சியை விரட்டும் கரும்புச் சக்கை... எப்படி? - மாடித்தோட்டம் ஆலோசனைகள் - வீட்டுக்குள் விவசாயம் 20

அதேபோல,

- ஒரு பெரிய வெங்காயம்,

- வெள்ளைப் பூண்டு 4 பல்,

- 2 ஸ்பூன் மிளகாய்த் தூள்,

ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டை பொடி,

கொஞ்சம் தண்ணி ஊத்தி மிக்ஸியில் போட்டு நல்லா அரைச்சு வெச்சுக்கணும். அரைச்ச பிறகு, அதை எடுத்து நைலான் துணியில வடிகட்டிச் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். இதையும் சம அளவு தண்ணி சேர்த்துதான் பயன்படுத்தணும். இது செடிகளோட வளர்ச்சியில மட்டுமல்லாம பூச்சி, நோய்ல இருந்தும் செடிகளைப் பாதுகாக்கும்.

2 கைப்பிடி வெங்காயத் தோலை எடுத்து ஒரு லிட்டர் தண்ணியில நல்ல மூழ்க வச்சி 24 மணி நேரம் வெச்சிருக்கணும். பிறகு, அதை வடிகட்டினால் சிவப்பு நிறத்தில் ஒரு தண்ணி கிடைக்கும். அது அருமையான உரம். அதையும் சமபங்கு தண்ணில கலந்து 15 நாளைக்கு ஒரு தடவை செடிகளுக்குத் தெளிக்கலாம். இப்படி செய்றதுனால செடிகளோட சல்லி வேர் அதிக அளவுக்குப் பரவும். நான் மேலே சொன்ன முறைகள் இப்ப பல நாடுகள்ல பிரபலமாகிட்டு வருது. நாமளும் அதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

- வளரும்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு