Published:Updated:

`நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து இயக்கப்படுமா?' ஏக்கத்தில் விவசாயிகள் - தஞ்சாவூர் உழவர் சந்தை அப்டேட்!

தஞ்சாவூர் உழவர் சந்தை ( ம.அரவிந்த் )

சுபமுகூர்த்த நாட்களில் வாழை இலை,பழம் என அனைத்தும் விலைகளும் அதிகமாக இருக்கும். இலை உள்ளிட்டவை கிடைப்பதும் தட்டுப்பாடாக இருக்கும். அந்த நாட்களில் உழவர் சந்தை நிர்வாகத்தில் குறைந்த விலையை நிர்ணயம் செய்து விடுவார்கள்.

`நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து இயக்கப்படுமா?' ஏக்கத்தில் விவசாயிகள் - தஞ்சாவூர் உழவர் சந்தை அப்டேட்!

சுபமுகூர்த்த நாட்களில் வாழை இலை,பழம் என அனைத்தும் விலைகளும் அதிகமாக இருக்கும். இலை உள்ளிட்டவை கிடைப்பதும் தட்டுப்பாடாக இருக்கும். அந்த நாட்களில் உழவர் சந்தை நிர்வாகத்தில் குறைந்த விலையை நிர்ணயம் செய்து விடுவார்கள்.

Published:Updated:
தஞ்சாவூர் உழவர் சந்தை ( ம.அரவிந்த் )

விவசாயிகள் விளைவித்த காய்கறி உள்ளிட்ட பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்து லாபம் அடைவதற்காக தொடங்கப்பட்டது உழவர் சந்தை. தினமும் ரூ 5 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறக்கூடிய உழவர் சந்தையில் விவசாயிகள் வசதிக்காக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகள் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் உள்ளிட்டோர் பல வித இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கடை நடத்துபவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உழவர் சந்தை
உழவர் சந்தை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், திருக்காட்டுப்பள்ளி என மொத்தம் ஐந்து உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துறையின் கீழ் உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டை சாலை அண்ணா நகரில் செயல்படும் உழவர் சந்தை 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 70க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தினமும் 5 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது.14 டன் காய்கறிகள் விற்பனை ஆவதாக சொல்லப்படும் நிலையில் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய உழவர் சந்தைக்கு விசிட் அடித்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினமும் வெளிச்சந்தையில் உள்ள விலையை அறிந்து அதற்கேற்ற வகையில் உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர், ஒவ்வொரு பொருட்களுக்கும் விலையை நிர்ணயம் செய்து கொடுக்கிறார். அதன்படி உழவர் சந்தையில் கடை நடத்தும் விவசாயிகள், மகளிர் சுய உதவிகுழுக்களை சேர்ந்த பெண்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

காய்கறி வியாபாரம்
காய்கறி வியாபாரம்

வாழை பழக்கடை நடத்தி வரும் கவிதா என்ற பெண்ணிடம் பேசினோம். "திருவையாறு பகுதியில எங்களுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்து வருகிறோம். அதில் விளையக்கூடிய வாழை இலை, வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைக்காய் போன்றவற்றை உழவர் சந்தைக்கு எடுத்து வந்து விற்பனை செய்கிறோம். இடைத்தரகர்கள் எங்க வாழைத்தோட்டத்துக்கு வந்து வாழை இலை உள்ளிட்டவற்றை குறைந்த விலைக்கு கேட்பாங்க.

அவங்ககிட்ட கொடுத்த எங்களுக்கு கட்டுபடியாகாது. லாபமும் குறைந்த அளவில்தான் கிடைக்கும். உழவர் சந்தைக்கு எடுத்து வந்து மக்கள்கிட்ட நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கிய பிறகு எங்களுக்கு கூடுதலாக லாபம் கிடைத்தது. உழவர் சந்தை நிர்வாகிகள் சொல்ற விலைக்குத்தான் நாங்க விற்பனை செய்யணும். சுப முகூர்த்த நாட்களில் வாழை இலை, பழம் என அனைத்தும் விலைகளும் அதிகமாக இருக்கும். இலை உள்ளிட்டவை கிடைப்பதும் தட்டுப்பாடாக இருக்கும். அந்த நாட்களில் குறைந்த விலையை நிர்ணயம் செய்து விடுவார்கள்.

கவிதா
கவிதா

விழா நாட்களை அறிந்து அதற்கேற்றால் போல் விலையினை நிர்ணயம் செய்தால் நன்றாக இருக்கும் எங்களுக்கு லாபகரமாக இருக்கும். சாகுபடி செலவு, ஏற்றுக்கூலி வாடகை உள்ளிட்ட அனைத்து செலவுகளும் போக விசேஷ தினங்களில் 1,000 ரூபாய், மற்ற நாட்களில் 500 ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும். எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டால் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

காய்கறிகள் விற்பனை செய்து வரும் ராஜதிலகம், "உழவர் சந்தையில சுமார் 15 வருடங்களாக காய்கறி கடை நடத்தி வருகிறேன். கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்கிறேன். எலக்ட்ரானிக் தராசு, கரண்ட் போன்ற வசதிகளை உழவர் சந்தை நிர்வாகத்தில் செய்து தந்துள்ளனர். பெரிய அளவில் செயல்படும் வெளிசந்தை மார்க்கெட்டுகளின் விலையை அறிந்து அதற்கேற்ற வகையில் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்து தருவார்கள்.

தஞ்சாவூர் உழவர் சந்தை
தஞ்சாவூர் உழவர் சந்தை

அந்த விலைக்குத்தான் நாங்கள் விற்பனை செய்ய வேண்டும். அதிகபட்சம் கிலோவிற்கு சுமார் 2 ரூபாய் லாபம் கிடைக்கும் வகையில தான் விலை நிர்ணயம் செய்வார்கள். உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்குதோ இல்லையோ தினமும் நிரந்தரமாக ஒரே இடத்துல உட்கார்ந்து வியாபாரம் செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்திருப்பதால் உழவர் சந்தை எங்களுக்கு முக்கியமானதாகவே இருந்து வருது" என தெரிவித்தார்.

மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள், உழவர் சந்தையில் கூட்டாக கடை எடுத்து காய்கறி உள்ளிட்டவை வியாபாரம் செய்து வருகின்றனர். வருகின்ற லாபத்தை அவர்கள் பிரித்து எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் பல பெண்களின் வாழ்வில் உழவர் சந்தை முன்னேற்றத்தை ஏற்படுத்தியி ருப்பதாகவும் கூறுகின்றனர்.

வியாபாரிகள்
வியாபாரிகள்

உழவர் சந்தை தொடங்கப்பட்டதிலிருந்து விவசாயிகள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு வருவதற்காக திருவையாறு டூ உழவர் சந்தை, செல்லம்பட்டி டூ உழவர் சந்தை என இரண்டு வழித்தடங்களில் இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. டிராப் மட்டுமே செய்து வந்ததால் கடை நடத்துபவர்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகினர். கடை முடிந்த பிறகு திரும்பி செல்வதற்கும் வசதியாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இரண்டு வழித்தடங்களில் ஒற்றை நடை வந்த இரண்டு அரசு பேருந்துகளையும் அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். இப்போது வரை உழவர் சந்தைக்காக இயக்கப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை.

உழவர் சந்தை
உழவர் சந்தை

காலை 6 மணியிலிருந்து மதியம் 12.30 வரை மட்டுமே செயல்பட நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேரத்தை கூடுதலாக்கி தர வேண்டும். காய்கறி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் இடத்தில் மளிகை கடை ஒன்றும் செயல்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும். அதனையும் கவனத்தில் கொண்டு அரசு நடைமுறைபடுத்தினால் நன்றாக இருக்கும் என கடை நடத்தும் சிலர் தெரிவிக்கின்றனர்.

உழவர் சந்தையின் உதவி நிர்வாக அலுவலரான அமரேசன், "மொத்தம் உள்ள 71 கடைகளில் சராசரியாக 60 கடைகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கனவர்கள் வந்து செல்கின்றனர்.14 டன் காய்கறிகள் விற்பனையாகிறது. சராசரியாக 5 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மலை பயிர்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்காக 20 கடைகள் ரூ.1,210க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

உழவர் சந்தை கார்கறி வியாபாரம்
உழவர் சந்தை கார்கறி வியாபாரம்

ரூ. 21.57 லட்சம் மதிப்பில் செய்யப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று இந்த வாரம் தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரின் தோட்டக்கலைத்துறை சார்பில் இடுபொருட்கள் விற்பனை செய்வதற்கான அரங்கு அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வர உள்ளது. மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது" என்றார்.