Published:Updated:

`புளியங்குடி வட்டார விவசாயிகளே...' - வானொலியில் `டிரெண்ட்' மாறிய கதை!

''வானொலிக்குன்னு ஒரு மொழி இருக்கு. இப்படியெல்லாம் பேசக்கூடாது''னு சொன்னார்.

மன்னாரு
மன்னாரு

சமீபத்தில் ஒருநாள் இணையத்தில் எதையோ தேடிக் கொண்டிருக்கும்போது, சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் இணையதளம் கண்ணில்பட்டது. உள்ளே சென்றால், ''ஆல் இந்திய ரேடியா, சென்னை வானொலி நிலையம். வீடும் வயலும்..!'' என்ற அறிவிப்புக் காதில் ஒலித்தது. தொலைக்காட்சிகளுக்குச் சவால்விடும் இந்த யூடியூப் யுகத்தில் வானொலி நிலையம் அசராமல் தனது கடமையைச் செய்து கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனோன். கிராமங்களில் இப்போதுகூட வானொலியை விரும்பிக் கேட்கும் நேயர்கள் இருக்கிறார்கள். முழுமையாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/2Mcyqik

'பசுமை விகடன் படித்து இயற்கை விவசாயத்துக்கு மாறினேன்...'' என்று விவசாயிகள் சொல்வதுபோல, அந்தக் காலத்தில் ஆல் இந்திய ரேடியோவைக் கேட்டு, நெல் சாகுபடி செய்தோம், மஞ்சள் சாகுபடி செய்தோம் என்று சொல்லிய விவசாயிகளை நேரில் பார்த்திருக்கிறேன். 'மரம்' தங்கசாமி, ஒவ்வொரு முறையும், ''திருச்சி வானொலி நிலையத்தில் பி.எஸ்.மணியனின் மரம் சம்பந்தமான புத்தகத்தைப் பற்றிய ஒலிபரப்புதான், என்னை மரம் வளர்ப்புப் பக்கம் எட்டிப் பார்க்க வைத்தது'' என்று சொல்வார். ஏடிடீ-27 ரக நெல்லுக்கு 'ரேடியோ நெல்' என்ற பெயரும் உண்டு. ரேடியோவில் சொல்லிச் சொல்லியே விவசாயிகள், இந்த ரகத்தை அதிக அளவு சாகுபடி செய்தார்களாம்.

'நீங்க விவசாயம் சம்பந்தமா சொல்ற தகவல் எளிமையா புரியுற மாதிரி இருக்கு'ன்னு சொன்னாங்க.
தென்கச்சி அண்ணாச்சி

தமிழ்நாட்டில் பண்ணை இல்லத்து ஒலிபரப்பில் புதுமையைப் புகுத்திய பெருமை தென்கச்சி கோ.சுவாமிநாதனையே சாரும். சென்னை வானொலி நிலையத்தில் துணை இயக்குநராக இருந்தபோது, அவருடன் பணி நிமித்தமாக பலமுறை சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

''விவசாயம் படிச்சிட்டு, ஊர்ல விவசாயம் பார்த்துக்கிட்டிருந்தேன். அந்தச் சமயத்துல திருநெல்வேலி வானொலி நிலையத்தில, விவசாய பகுதிக்கு எழுத்தாளர் வேணும்னு அறிவிப்பு வந்துச்சு. எழுதிப்போட்டேன். உடனே வேலை கிடைச்சது. பணிக்குச் சேர்ந்தேன். ஓர் அறிவிப்பைக் கொடுத்து, படிக்கச் சொன்னாங்க. 'புளியங்குடி வட்டார விவசாயிகளே... நீங்க சாகுபடி செய்திருக்கிற நெற்பயிர்ல.... இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் ஏற்பட்டிருக்கு. இதைக் கட்டுப்படுத்த, ஒரு வாளி தண்ணியில, இரண்டு மூடி ரசாயன மருந்து கலந்து தெளிச்சா, இலைச்சுருட்டுப்புழு கட்டுப்படும்''னு சொன்னேன்.

மன்னாரு
மன்னாரு

இதைக் கேட்ட, என்னோட மேல் அதிகாரி, ''வானொலிக்குன்னு ஒரு மொழி இருக்கு. இப்படியெல்லாம் பேசக்கூடாது''னு சொன்னார். நானும் சரி சரின்னு தலையாட்டினேன். ஒரு வாரம் கழிச்சி, புளியங்குடியிலிருந்து விவசாயிகள் வந்திருந்தாங்க. 'நீங்க விவசாயம் சம்பந்தமா சொல்ற தகவல் எளிமையா புரியுற மாதிரி இருக்கு'ன்னு சொன்னாங்க. மக்கள் மொழியில பேசினா, நிச்சயம் அதுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்ங்கிறதைத் தெரிஞ்சிக்கிட்டேன். அதுவே, இந்தத் துறையில என் அடையாளமாகவும் இருக்கு'' என்று சொன்னார் தென்கச்சி அண்ணாச்சி.

கர்நாடக மாநிலத்துக்கு ஒருமுறை பயணம் செய்தபோது, அங்கு கண்ட காட்சி அதிசயிக்க வைத்தது. விவசாயத்தில் செழித்திருந்த அந்தக் கிராமத்தில், நல்ல வசதியான வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அதில் 'ஈஸ்வரப்பா உபயம்' என்று வீட்டுக்கு முன்னால் கல்லில் பொறித்திருந்தார்கள். சுற்று வட்டாரக் கிராமங்களில் பரவலாகவே ஈஸ்வரப்பா உபயமாக இருந்தது. அவர் யார்? அவர் அவர் செய்த உபயங்கள்தான் என்னென்ன? - பசுமை விகடன் இதழின் 'மாத்தியோசி' பகுதியில் விரிவாக வாசிக்க > மண்புழு மன்னாரு : வானொலி விவசாயிகளும் ஈஸ்வரப்பா உபயமும்! https://www.vikatan.com/news/agriculture/manpuzhu-mannaru-6

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |