நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்? - வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னறிவிப்பு!

முன்னறிவிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
முன்னறிவிப்பு

முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்திலிருந்து வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

‘‘எதிர்வரக்கூடிய 2020-ம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கான (அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை யொட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் (Australian Rainman International V.4.3 Software) என்னும் கணினி கட்டமைப்பைக் கொண்டு 2020-ம் ஆண்டுக்கான வடகிழக்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்!

அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர், நீலகிரி மாவட்டத்தில் சராசரி மழையளவுக்குயொட்டிய மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்? - வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னறிவிப்பு!

சராசரி மழையளவுக்கும் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்!

காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகியவையாகும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் சராசரி மழையளவைக் காட்டிலும், அதிக மழை பெறப்பட்டுள்ளதால், மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும். இதைப் பயன்படுத்தி விவசாயிகள் விதைப்பு செய்வதன் மூலம், பயிரின் முதன்மை நீர்த்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எதிர்வரக்கூடிய 2020-ம் ஆண்டுக்கும் சராசரி வடகிழக்குப் பருவமழை எதிர்பார்க்கப் படுவதால், தற்போது விதைக்கும் பயிர்கள் நல்ல வளர்ச்சியும் மகசூலும் பெற முடியும்’’ என அந்த முன்னறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்? - வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னறிவிப்பு!