Published:Updated:

How to: மாடித்தோட்ட தவறுகளைத் தவிர்ப்பது எப்படி? I How to avoid terrace gardening mistakes?

மாடித்தோட்டம்
News
மாடித்தோட்டம்

நம் நாட்டில் பெரும்பாலும் வெப்பமண்டல தாவரங்கள்தான் உள்ளன. அவற்றுக்கு நேரடியான சூரிய ஒளி தேவை. எனவே, நிழற்வலை அமைக்கத் தேவையில்லை. பூக்காத தாவரங்களுக்கு, அதாவது புதினா, கீரை வகைகள் போன்றவற்றுக்கு நிழற்வலை அமைத்துக்கொள்ளலாம்.

Published:Updated:

How to: மாடித்தோட்ட தவறுகளைத் தவிர்ப்பது எப்படி? I How to avoid terrace gardening mistakes?

நம் நாட்டில் பெரும்பாலும் வெப்பமண்டல தாவரங்கள்தான் உள்ளன. அவற்றுக்கு நேரடியான சூரிய ஒளி தேவை. எனவே, நிழற்வலை அமைக்கத் தேவையில்லை. பூக்காத தாவரங்களுக்கு, அதாவது புதினா, கீரை வகைகள் போன்றவற்றுக்கு நிழற்வலை அமைத்துக்கொள்ளலாம்.

மாடித்தோட்டம்
News
மாடித்தோட்டம்

மாடித்தோட்டத்துக்கான ஆர்வம் மக்களிடையே பெருகி வரும் சூழலில், அதில் சில விஷயங்களில் காட்டும் கவனம் பெருமளவில் வளர்ச்சிக்கு உதவும். தாவரங்களை நடவு செய்வதில் ஆரம்பித்து அறுவடை செய்யும் வரை, மாடித்தோட்டம் செழிப்பாக இருக்க தவிர்க்க வேண்டிய சில தவறுகளைப் பார்ப்போம்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

ஒரே குடும்பத்து தாவரங்கள்... வேண்டாம் அருகருகில்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களை அருகருகில், அடுத்தடுத்து நடவு செய்ய வேண்டாம். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களைத் தாக்கும் பூச்சியானது, ஒரு செடியைத் தாக்கினால் அடுத்தடுத்து உள்ள தாவரங்களுக்கு விரைவில் பரவ வாய்ப்புள்ளது. தக்காளி, கத்திரிக்காய், மிளகாய் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றுக்கு இடையில் நான்கடி இடைவெளி அல்லது வேறு குடும்பத்தைச் சேர்ந்த தாவரத்தை நடவு செய்த பின், அடுத்த செடியை நடவு செய்யவும்.

நிழற்வலை தேவையில்லை! 

நிழற்வலை அமைப்பு தேவையில்லாதது. நம் நாட்டில் பெரும்பாலும் வெப்பமண்டல தாவரங்கள்தான் உள்ளன. அவற்றுக்கு நேரடியான சூரிய ஒளி தேவை. எனவே, நிழற்வலை அமைக்கத் தேவையில்லை. சூரிய ஒளி குறைவதால் செடி வளரும். ஆனால், தேவையை நிறைவேற்றாது. செழிப்பான செடிகள் வளராது. `எனில் நிழற்வலை தேவையே இல்லையா?' என்றால், தேவைதான். பூக்காத தாவரங்களுக்கு, அதாவது புதினா, கீரை வகைகள் போன்றவற்றுக்கு அமைத்துக்கொள்ளலாம். காய்கறிகளுக்கு நிழற்வலை அமைப்பது நல்லதல்ல.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

கேரட், முட்டைக்கோஸ்... குளிர்ச்சி கிடைக்காது! 

கேரட், முட்டைக்கோஸ் மாதிரியான காய்கறிகளை மாடித்தோட்டத்தில் சிலர் வளர்க்கின்றனர். அவற்றுக்கு நிழற்வலை அமைக்கின்றனர். ஆனால், இதனால் அவற்றின் மீது வெயில்படுவதைக் குறைக்க முடியுமே தவிர, குளிர்ச்சியை ஏற்படுத்த முடியாது. இவ்வகை செடிகள் எல்லாம் மண்ணுக்கு அடியில் வளரும் என்பதால் இவற்றை மாடித்தோட்டத்தில் நேரடியாக சூரிய ஒளி படாத இடத்தில வைத்தால் நல்லது. ஆனால், இந்த முறை சரியானதல்ல என்று தோட்டக்கலை துறையினர் கூறுவதையும் கவனத்தில் கொள்ளவும்.

ரசாயன விளைவுகள்! 

மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதல் அதிகமாகும் நேரத்தில், அவசரத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவோம். அது தொட்டி மண்ணை தரம் இழக்கச் செய்துவிடும். பொதுவாக நிலத்தில் விவசாயம் செய்யும்போது, ரசாயனம் மண்ணுக்கு உள்ளே ஆழமாகச் சென்றுவிடும்போது உடனடி பாதிப்பு இருக்காது. மாடித்தோட்டத்தில் சின்னச் சின்ன தொட்டிகளில் ரசாயனம் தெளிக்கும்போது, அது அந்தத் தொட்டிக்குள்ளேயே இருந்துவிடும். அந்தத் தொட்டிகளில் அடுத்தடுத்து எந்தத் தாவரம் வைத்தாலும் அதில் ரசாயனம் கலக்க வாய்ப்புள்ளது. எனவே, அவசரத்தில் ரசாயன உரத்தைப் பயன்படுத்தியிருந்தால் அந்த மண்ணை மாற்றிவிட்டு வேறு செடியை நடுவது நல்லது.

Terrace Garden
Terrace Garden
Photo: Vikatan / Vijay.T

தொட்டியில் அதிக மண் வேண்டாம்! 

தொட்டிகளில் மண்ணை அதிக அளவில் நிரப்புவது நல்லதல்ல. மண்ணுக்குப் பதிலாக தென்னை நார் கழிவை பயன்படுத்துவது நல்லது. தென்னை நாரை இரண்டு முறை பயிர் செய்து முடித்த பின் மாற்ற வேண்டும்.
தொட்டிகளின் எடை கட்டடத்தை சேதப்படுத்தலாம் என்பதால், வீட்டின் தரைப்பகுதியில் மண் தொட்டியைப் பயன்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் தவிர்க்கலாம். பைகளை (Grow Bag) பயன்படுத்துவது நல்லது. மாடித்தோட்டத்தில் நீர் தேங்காமல் வடிந்து செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

செடிகள் வளையக்கூடாது! 

ஒரு பையில் ஒரு செடிதான் வைக்க வேண்டும். அப்போதுதான் செடிக்கு சத்துகள் முழுமையாகக் கிடைத்து மகசூல் கிடைக்கும். செடிகள் வளையாமல் நேராகச் செல்வதுபோல், அல்லது படர்ந்து குட்டி மரம் போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நல்ல மகசூல் கிடைக்கும்.

Terrace garden
Terrace garden

விதைகளை நடும்போது..! 

விதைகளை நேரடியாகத் தொட்டியில் நடவு செய்யக் கூடாது. அப்படியே நட்டாலும் நேரடியாக அதன் மீது வெயில் படாத வகையில் வைக்க வேண்டும். கத்திரி, தக்காளி, மிளகாய் செடிகளின் விதைகளைப் பொறுத்தவரை மிகச் சிறியதாக இருக்கும். இவற்றுக்கு ஈரப்பதம் மிக முக்கியம். நடவு செய்யும்போது, நீரில் இருக்கும் ஈரப்பதத்தை விதை உறிஞ்சி, பின்தான் முளைக்கும். விதை முளைக்கும்வரை ஈரப்பதம் உலர்ந்துவிடாமல் பாத்துக்கொள்ள முடிகிறவர்கள், நேரடியாக நடவு செய்யலாம். இல்லையெனில், நாட்டுவிதையை இரண்டு, மூன்று விதைகளாக நடவு செய்யலாம். விதை முளைத்த பின் நன்றாக வளர்ந்தவற்றை விட்டுவிட்டு மற்றவற்றை கிள்ளி விட வேண்டும்.