விவசாயிகள் அதிக மகசூலை பெறுவதற்கும், நஷ்டத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், விதைகளின் தரம் மற்றும் அவற்றின் முளைப்புத் திறன் அவசியமானதாக இருக்கிறது. விதைகளின் முளைப்புத் திறனை ஆய்வு செய்து கண்டறிய, தமிழக அரசின் விதை ஆய்வு மையம், ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கி வருகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கி வரும் விதை ஆய்வு மையத்தில், விதை பரிசோதனை முறைகள், விதைகளின் முளைப்புத் திறன் கணக்கெடுப்பு, ஆய்வகப் பதிவேடுகள் மற்றும் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவற்றை, விதைப் பரிசோதனை அலுவலர் அருணா ஆய்வு செய்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய விதை பரிசோதனை அலுவலர் அருணா, "விதைகளின் தரம் என்பது முளைப்புத்திறன், புறத்தூய்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியவற்றை பொறுத்து அமைகிறது. நல்ல தரமுள்ள விதைகளை விதைப்பு செய்வதால் பயிர்களின் எண்ணிக்கை பராமரிக்கப்படுவதுடன் அதிக மகசூலுக்கும் வழிவகை செய்கிறது.
விவசாயிகள் மற்றும் விதை விற்பனை நிலைய உரிமையாளர்களிடம் இருந்து நேரடியாக விதைகளைப் பெற்று பரிசோதனை செய்கிறோம். விதைகளைப் பரிசோதனை செய்ய, விதை மாதிரிக்கு 80 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது தவிர, விவசாயிகள் தங்கள் வீடுகளிலேயே விதைகளின் முளைப்புத்திறனை பரிசோதனை செய்து பார்க்கலாம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபயிரிடப்படும் விளைநிலத்தில் இருந்து, கொஞ்சம் மண்ணை சட்டியில் சேகரித்து, 100 விதைகளை சரியாக எண்ணி, ஒரு அதில் விதைத்து, தண்ணீர் தெளித்து நிழலான இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். நாம் விதைத்த 100 விதைகளில் எத்தனை விதைகள் முளைத்துள்ளன என்பதைப் பார்க்க வேண்டும். 90 அல்லது அதற்கு மேல் முளைத்திருந்தால், நல்ல முளைப்புத்திறன் கொண்ட விதை என்பதை தெரிந்து கொள்ளலாம்; தாராளமாக பயிரிடலாம்.
ஒவ்வொரு விதையும் குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட வடிவத்தில் இருக்க வேண்டியது முக்கியம். அவற்றை நமது ஆய்வகங்களில் துல்லியமாக பார்க்க முடியும். விதைகளில் கலப்படங்கள் இருக்கிறதா என்பதையும் தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எளிமையாக கண்டறிய முடியும். விதைப்புக்கு முன் சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் அரசின் விதை ஆய்வு மையத்தை அணுகினால் நல்லது" என்றார்.

நீலகிரி மாவட்ட விதை பரிசோதனை வேளாண் அலுவலர் அன்பழகி பேசுகையில், "நீலகிரியில் விளையக்கூடிய காரட், பீன்ஸ், பட்டானி, நூல்கோல், டர்னிப், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பீட்ரூட், காலிபிளவர், குடைமிளகாய், போன்ற மலை காய்கறி விதைகள், கோதுமை, ஓட்ஸ், மக்காசோளம் போன்ற தானிய விதைகள் மற்றும் அனைத்து சிறு தானிய விதைகள் பரிசோதனை இங்கு செய்யப்படுகிறது. விவசாயிகள் மகசூல் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, விதைகளின் முளைப்புத்திறன் குறித்து பரிசோதித்து, பயிரிட்டு லாபம் அடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.