ஊட்டி. உச்சரிக்கும்போதே உள்நாக்கு வரை குளிரும் குளுமையான பகுதி. இங்கு, தேயிலை, காபி போன்ற பணப்பயிர்களும் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், டர்னீப்... போன்ற ‘இங்கிலீஸ் வெஜிடபிள்ஸ்’ என்றழைக்கப்படும் வெளிநாட்டுக் காய்கறிகள் மலையில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியக் காரணிகளாக இந்தப் பயிர்கள் இருக்கின்றன. நீலகிரியில் சுமார் 55,000 ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை விவசாயமும் 7,000 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்படுகின்றன.

அதிகளவு காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் கேத்தி பள்ளத்தாக்கும் ஒன்று. தொட்டபெட்டா சரிவிலிருந்து நீண்டிருக்கும் இந்தப் பள்ளத்தாக்கில் பயணித்தோம். கண்ணுக் கெட்டிய தொலைவுவரை கேரட், உருளைக்கிழங்கு பயிரிடப்பட்ட பச்சை பசேல் வயல்கள் ரம்மியமாகக் காட்சியளித்தன. ஓர் இடத்தில் பச்சை வயல்களுக்கு மத்தியில் மஞ்சள் கம்பளம் விரித்ததைப்போல, அடர் மஞ்சள் நிறமாக இருந்தது. அந்தக் காட்சி நம் கவனத்தைக் கவரவே ஆர்வமிகுதியில் அந்த இடத்துக்குச் சென்றோம்.

மஞ்சள் நிறப் பூக்கள் நிறைந்த செடிகளில் காய்க்கத் தயாராக இருந்தது கடுகு. காய்கறிப் பயிர்களுக்கு மத்தியில் இந்த ஒரு வயலில் மட்டும் கடுகு இருந்தது, நம்முள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. வயலில் இருந்தவரிடம் சென்று, நம்மை அறிமுகம் செய்துகொண்டு கேள்விகளை முன்வைத்தோம். குளிருக்கு இதமாக ஜெர்க்கின் சகிதமாக இருந்தவர், இடுப்பளவு வளர்ந்திருந்த கடுகு பயிர்களுக்கு ஊடாக நம்மை நடக்கச் செய்தபடியே பேசினார்.

“என்னோட பேர் அருணாசலம். சின்ன வயசுல இருந்தே விவசாயம்தான். மலைகாய்கறிகளைப் பொறுத்தவரைக்கும் எல்லாமே மூணு, நாலு மாசப் பயிர்கள்தான். ஒரு வருஷத்துல ரெண்டு அல்லது மூணு போகம் பயிர் செய்யலாம். ஆனா, அந்த அளவுக்கு மண்ணுக்குச் சத்து கொடுக்கணும். இந்த ஏரியாவுல கேரட், பீட்ருட், பூண்டு மாதிரியான பயிர்கள் நல்ல விளைச்சல் கொடுக்கும். ஆனா, அதுல ஒரு பிரச்னை இருக்குது. நான் சொன்ன பயிர்களைத் தாக்குற வேர்ப்புழுக்களைக் கட்டுப் படுத்துறது பெரிய பிரச்னையா இருக்கும். வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த அதிக மருந்து தேவைப்படும். அப்படியே மருந்தடிச் சாலும் பெருசா பிரயோஜனம் இருக்காது.

இந்த நிலைமையில வேர்ப்புழுக்களை எப்படிக் கட்டுப் படுத்துறதுனு யோசிச்சோம். பல வருஷங்களுக்கு முன்னாடி எப்படிக் கட்டுப்படுத்தினாங்கன்னு வயசானவங்களிடம் பேசிபார்த்தோம். அப்பதான், வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த அந்தக் காலத்துல கடுகு சாகுபடி பண்ணுன தகவல் தெரிஞ்சது. சரி நாமும் கடுகை வெதைச்சி பாக்கலாம்னு முடிவு செஞ்சேன். கேரட் அறுவடை செஞ்சு முடிச்ச நெலத்துல கடுகு விதைகளைத் தூவி வளர்த்துப் பார்த்தேன். அடுத்த முறை கேரட்ல நல்ல மகசூல் கிடைச்சது. அதுல இருந்து தொடர்ந்து இந்த முறையைப் பயன்படுத்துறோம்’’ என்றவர், கடுகு விதைக்கும் முறையைப் பற்றி விளக்கினார்.

“கடுகுல இருக்குற ஒருவகை காரத்தன்மை மண்ணுல இருக்கும் வேர்ப்புழுக்களை முழுசா கட்டுப்படுத்தி அழிக்குது.’’

‘‘அறுவடை முடிச்சிட்டு அடுத்த வெள்ளாமைக்குத் தயாராகுற இடைப்பட்ட காலத்துல இந்த வேலையைச் செய்யணும். கடுகு விதைகளை வாங்கி வெறும் நிலத்துல தூவி விட்டால் போதும். தண்ணி, மருந்து எதுவும் தேவையில்ல. 10-15 நாளுலயே பயிர் முளைச்சு நல்லா வளர ஆரம்பிச்சிடும். அடுத்த 10 நாள்கள்ல இடுப்பு உயரத்துக்கு வளந்திடும். பிறகு பூக்க ஆரம்பிச்சிடும். நல்லா பூத்து முடித்ததும், கடுகு காய்க்க ஆரம்பிக்கும். அந்தச் சமயத்துல பூ, காய் எல்லாத்தையும் சேர்த்து செடியோட வயல்ல உழவு செய்யணும்.

இப்படி உழும்போது மண்ணுக்கு நல்ல தழைச்சத்து கிடைக்குது. கடுகுல இருக்குற ஒருவகை காரத்தன்மை மண்ணுல இருக்கும் வேர்ப்புழுக்களை முழுசா கட்டுப்படுத்தி அழிக்குது. இது மட்டுமல்லாம அடுத்த போகத்துக்கு நிலம் தயாராகுற இடைப்பட்ட காலத்துல கடுகு செடி வளர்றதால சரிவு பகுதிகள்ல மண் அரிப்பே இருக்காது. மேல் மண்ணையும் வளத்தோடு வெச்சிருக்க உதவும். ரசாயன பயன்பாடு இல்லாமலேயே இயற்கை முறையில் வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்தி நல்ல மகசூலை எடுக்க முடியும்” என்றார். இனிப்பு நிறைந்த கேரட், பீட்ரூட் பயிர்களைத் தாக்கும் வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த ரசாயன கொல்லிகள் மட்டுமே தீர்வு என்ற மனநிலையில் இருக்கும் விவசாயிகள் மத்தியில் அருணாசலம் முன்னத்தி ஏராக இருக்கிறார்.

தொடர்புக்கு, அருணாசலம்,
செல்போன்: 94865 31275

இயற்கைக்கு முன்னுரிமை!

இது தொடர்பாக நீலகிரி தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “இங்கு விளைவிக்கப்படும் காய்கறிப் பயிர்களில் அளவுக்கு அதிகமாக ரசாயன பயன்பாடுகள் இருப்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருப்பது உண்மைதான். இயற்கை முறைகளைப் பின்பற்ற விவசாயிகளை ஊக்குவித்து வருகிறோம். அருணாசலம் போன்ற விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப் படும்” என்றனர்.