காலால் மடை திறந்த காலம் போய், தண்ணீருக்காகத் தவம் கிடக்கும் காலம் உருவாகிவிட்டது. காலத்துக்கேற்ப பயிர் செய்வதுதானே புத்திசாலித் தனம். அதனால் பலரும் தண்ணீர் தேவை குறைந்த பயிர்களைச் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

குறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் கொடுக்கும் பயிர்கள் வரிசையில் ஒன்று கொய்யா. அதிலும் ஒரே ரகமாக இல்லாமல் பல்வேறு ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் ‘ஜி-விலாஸ்’ என்ற புதிய ரகக் கொய்யாவைச் சாகுபடி செய்து வருகிறார் விருதுநகரைச் சேர்ந்த ராஜேஷ். இந்த ரகம், லக்னோ-49 மற்றும் தைவான் பிங்க் ஆகிய இரண்டு ரகத்தையும் ஒட்டுக்கட்டி உருவாக்கப்பட்ட ரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது கடம்பன்குளம். அங்குள்ள தனது கொய்யாத் தோட்டத்தில் பழங்களைப் பறித்துக்கொண்டிருந்த ராஜேஷை ஒரு காலை வேளையில் சந்தித்தோம். மகிழ்ச்சியோடு வரவேற்றவர் ஒரு பழத்தை நறுக்கி நம்மிடம் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். “இதுதான் என்னோட சொந்த ஊர் விவசாயத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்ல. ஆனா, எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்து மேல ஒரு ஆர்வம்.

பி.இ படிச்ச பிறகு எம்.பி.ஏ முடிச்சதும், அசோக் லைலேண்டுல 36 வருஷம் வேலை பார்த்து, துணைத் தலைவர் பதவி வரைக்கும் வந்தேன். 2017-ம் வருஷம் ஓய்வு பெற்றேன். அதுக்குப் பிறகு, சொந்த ஊர்லயே நிலம் வாங்கி, ஒரு வீடுகட்டி ‘செட்டில்’ ஆகணும்னு நினைச்சேன். அப்போ விவசாயம் செய்யணும்ங்கிற எண்ண மெல்லாம் இல்ல. ஆனா, இந்தத் தோட்ட வீட்டுக்கு என்னைச் சந்திக்க வந்த நண்பர்கள், ‘வீடு கட்டின இடம்போக இவ்வளவு நிலத்தைச் சும்மா போட்டிருக்கியே. ஏதாவது விவசாயம் செய்யலாம்ல’னு கேட்டங்க. அதுக்குப் பிறகுதான், எனக்கும் அந்த எண்ணம் வந்துச்சு. ஆனா, விவசாயத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாம எப்படிச் செய்யுறது யோசனையா இருந்துச்சு.

விருதுநகரைச் சுற்றி இயற்கை முறையில விவசாயம் செய்யுற நாலஞ்சு பேரோட பண்ணையைப் போய்ப் பார்த்தேன். அடியுரத்துல இருந்து நோய்த்தாக்குதல், பூச்சித்தாக்குதல் வரைக்கும் எல்லாத்துக்கும் அவங்க இயற்கை முறையிலேயே தீர்வு சொன்னது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. அதுக்கப்புறம், என்ன பயிர் சாகுபடி செய்யலாம்னு ஆலோசனை செஞ்சப்போ, இந்தப் பகுதியில கொய்யாவுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்குறதா சொன்னாங்க. நாட்டு ரகங்கள் தவிர, லக்னோ-49, தைவான் பிங்க், தைவான் ரெட், அர்க்கா கிரண் கொய்யா ரகங்களைச் சாகுபடி செய்ற சில விவசாயிகளைச் சந்திச்சேன்.

மதுரை அக்ரி காலேஜ்லயும் நேர்ல போயி பேராசிரியர்கள்கிட்ட பேசினேன். அவங்க கொய்யாச் சாகுபடிக்கான சில அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் சொன்னாங்க. அந்த நேரத்துலதான் சத்திரரெட்டியாபட்டி விவசாயி கந்தசாமி, பசுமை விகடனை எனக்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். என்ன ரகத்தைத் தேர்வு செய்யலாம்னு யோசிச்சப்போ தைவான் பிங்க் ரகமும், லக்னோ-49 ரகமும் இணைந்த ‘ஜி-விலாஸ்’னு ஒரு ரகம் இருப்பதாச் சொன்னாங்க. இணையத்துல அந்த ரகத்தைப் பற்றிப் படிச்சேன். அதிக சதைப்பற்று, குறைவான விதைகள், 10 நாள்கள் வரை இருப்பு வைக்கலாம்னு போட்டிருந்துச்சு. கர்நாடகாவுல இருக்கச் சில நண்பர்கள்கிட்டயும் விசாரிச்சேன். ‘தைவான் பிங்க் மாதிரிதான் இந்த ரகமும், கர்நாடகாவுல நல்லா வருது’னு சொன்னாங்க. நம்ம பகுதியில பல விவசாயிங்க, தைவான் பிங்க் சாகுபடி செய்யறதுனால இந்த ரகமும் வரும்ங்கிற தைரியத்துல 3 ஏக்கர்ல நடவு பண்ணினேன். நல்லாவே வந்திருக்கு” என்றவர் கொய்யா தோப்புக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

‘‘மற்ற கொய்யா விவசாயிங்க மாதிரி இல்லாம, புது ரகத்த சாகுபடி செஞ்சு பார்க்கணும்னுதான் இந்த ‘ஜி-விலாஸ்’ ரகத்தைத் தேர்வு செஞ்சேன். இது மொத்தம் 5 ஏக்கர் நிலம். இதுல 3 ஏக்கர்ல ஜி-விலாஸ் கொய்யா காய்ப்புல இருக்கு. மொத்தம் 3,600 கன்றுகள் வெச்சோம். இப்போ 2,700 கன்றுகள்தான் இருக்கு. 3 மாசத்துக்கு முன்னால பெய்ஞ்ச மழையில 700 கன்றுகள்வரை சேதமாயிடுச்சு. இப்போ 5 மாசமா தொடர்ந்து கொய்யா பறிச்சுட்டு இருக்கேன். இதுவரைக்கும் (மார்ச் 11-ம் தேதிவரை) 8,255 கிலோ பழம் பறிச்சிருக்கேன். அதுல 500 கிலோ வரைக்கும் சேதமாயிடுச்சு. ஒரு கிலோ, ஒரே விலையா 50 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். பக்கத்து ஊரு வியாபாரிகளே நேரடியா வந்து எடை போட்டு எடுத்துக்கிறாங்க. இப்போ ஒரு மாசமா சென்னைக்கும் அனுப்பிட்டு வர்றேன்’’ என்றவர் வருமானம் குறித்துப் பேசினார்.

‘‘கொய்யா நடவு செஞ்சு 3 வருஷத்துக்குப் பிறகு, ஒரு ஏக்கர்ல இருந்து வருஷம் 3 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம்.’’

‘‘சேதமானது போக மீதமுள்ள 7,755 கிலோ விற்பனை மூலமா ரூ.3,87,750 வருமானமாக் கிடைச்சது. ஒரு ஏக்கருக்கு ஆரம்பகட்ட செலவு 1,20,000 ரூபாய் ஆச்சு. மூணு ஏக்கருக்கும் சேர்த்து, ஆரம்பகட்ட செலவு 3,60,000 ரூபாய். இதுவரைக்கும் வருமானமா 3,87,750 ரூபாய் வந்திருக்கு. செலவுத் தொகையான 3,60,000 ரூபாய் போக, 27,750 ரூபாய் லாபமா கிடைச்சிருக்கு. ரெண்டரை வருஷத்துலேயே செலவுத்தொகை கைக்கு வந்து, லாபமும் பார்க்க தொடங்கிட்டேன்’’ என்றவர் நிறைவாக,

‘‘நான் நடவு செஞ்சப்ப இருந்த செலவைவிட இப்ப ஒரு லட்சம் ரூபாய் குறைவாத்தான் ஆகும். ஆரம்பகட்டத்துலதான் அந்தச் செலவும். 3 வருஷத்துக்குப் பிறகு, ஒரு ஏக்கர்ல இருந்து வருஷம் 3 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். அதுல வேலையாள் கூலி, அறுவடை, இடுபொருள், பரமாரிப்புச் செலவுகளுக்கு 1 லட்சம் ரூபாய் போனாலும் 2 லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
ராஜேஷ், செல்போன்: 98410 11091

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் ஜி-விலாஸ் ரகக் கொய்யா சாகுபடி செய்யும் முறை குறித்து ராஜேஷ் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

பழப்பயிர் சாகுபடியைப் பொறுத்தவரைப் பட்டம் கிடையாது. ஆனால், மழைக்கு முன்பாக ஆவணி, புரட்டாசி மாதங்களில் நடவு செய்வது சிறந்தது. நடவு செய்வதற்கு முன்பாகவே உழவுப் பணிகளை முடித்துவிட வேண்டும். ஒரு வார இடைவெளியில் 3 முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, 2 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். குழிக்குள் 2 சட்டி செம்மண், ஒரு சட்டி தொழுவுரம், இரண்டு கை மண்புழு உரம் போட வேண்டும். அதற்கு மேல் மீண்டும், ஏற்கெனவே போட்ட அளவு செம்மண், தொழுவுரம், மண்புழு உரம் போட வேண்டும். எந்த மண்ணாக இருந்தாலும், செம்மண் சேர்த்தால் கன்று வளர்ச்சி சீராகவும் வேகமாகவும் இருக்கும் (நடவு செய்யும் நிலம் செம்மண் நிலமாக இருந்தால் இது தேவையில்லை).

வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச்செடி 6 அடி என்ற இடைவெளியில் குழி எடுக்க வேண்டும். குழிகளை 5 நாள்கள் ஆறவிட வேண்டும். பிறகு, குழிக்குள் அரையடி உயரத்துக்கு, மேல்மண்ணைப் போட வேண்டும். நடவுக்கு ஒரு நாள் முன்பாக 100 லிட்டர் தண்ணீரில் டிரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் தலா 50 மி.லியைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். இதனால், வேர்த்தாக்குதல், நூற்புழுத் தாக்குதல் இருக்காது. 4 முதல் 6 மாதக்கன்றுகள் நடவுக்கு ஏற்றது. தொடர்ந்து ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 3-ம் மாதத்துக்குப் பிறகு, 3 மாதத்துக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 6-ம் மாதத்திலிருந்து மாதம் ஒருமுறை எருக்கிலைக் கரைசலை கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும் (20 லிட்டர் நாட்டுமாட்டுச் சிறுநீரில் 20 கிலோ எருக்கு இலையைத் துண்டுத் துண்டாக நறுக்கிப்போட்டு ஒருவாரம் காலை, மாலை கலக்கி விட வேண்டும். பிறகு, வடிகட்டினால் எருக்கிலைக் கரைசல் தயார். இதிலிருந்து 10 லிட்டர் எடுத்து அதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்).

6-ம் மாதத்துக்குப் பிறகு தேவைப்பட்டால் 20 நாள்களுக்கு ஒரு முறை மீன் அமிலம், வேஸ்ட் டீகம்போஸரைச் சுழற்சி முறையில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விடலாம். கன்று நட்ட 8 முதல் 10 மாதங்கள் வரை செடிகளின் நடுக்கிளையை மட்டும் விட்டுவிட்டு, பக்கக் கிளை நுனிகளைக் கிள்ளிவிட (கவாத்து) வேண்டும். 12-ம் மாதத்துக்குப் பிறகு, பூக்கும் பூக்களைக் காய்க்கவிடலாம். 14-ம் மாதம் முதல் காய் பறிக்கலாம். 18-ம் மாதத்துக்கு மேல் மகசூல் படிப்படியாக அதிகரிக்கும்.

காய்ப்புத் தொடங்கியதும் பழ ஈக்களின் தாக்குதல் இருக்கும். இதைத் தவிர்க்க, பூப்பூக்கத் தொடங்கியதுமே ஒரு ஏக்கருக்கு 4 இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி அல்லது விளக்குப் பொறியை வைத்துக் கட்டுப்படுத்தலாம். 6-ம் மாதத்துக்குப் பிறகு 3 மாதத்துக்கு ஒரு முறை செறிவூட்டப்பட்ட தொழுவுரத்தைச் செடிகளுக்கு அடியுரமாக வைக்க வேண்டும். 4 மாதத்துக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும். காய் பறிக்கும்போதே செடியின் நுனிக் கொழுந்துகளைக் கிள்ளிவிட வேண்டும். காய்ப்பு குறைவதுபோலத் தெரியும்போது கவாத்துச் செய்துவிடலாம். இயற்கை முறையில் முறையாகப் பராமரித்தால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை தொடர்ந்து காய் பறிக்கலாம்.

தைவான் ரகத்துக்கும் ஜி-விலாஸுக்கும் பெரிய வித்தியாசமில்லை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாரத் தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பரமசிவனிடம் பேசினோம், “விருதுநகர் மாவட்டத்தில் லக்னோ-49 ரகக் கொய்யாவுக்கு அடுத்தபடியாக தைவான், அர்க்கா கிரண் ரகக் கொய்யாதான் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. ‘ஜி-விலாஸ்’ என்ற ரகம் புது வரவாக உள்ளது. விவசாயி ராஜேஷ், இயற்கை விவசாயப் பயிற்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார். புதிய ரகத்தைச் சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ரகத்தைச் சாகுபடி செய்திருக்கிறார். இதன் பழங்கள் தைவான் பிங்க் ரகத்தைப் போலவே சுவையிலும், தேங்காயைத் துண்டைக் கடிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும். சதைப்பற்று சற்று அதிகமாகவும், விதைப்பகுதி குறைவாகவும் உள்ளது. தைவான் பிங்க் ரகக் கொய்யாவைப்போல அதிகபட்சம் 7 நாள்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். நீண்ட தூரம் எடுத்துச் செல்வதும் எளிதாக இருக்கும். இதனால், வியாபாரிகளுக்குப் பழங்களில் சேதம் ஏற்படுவதும் குறைகிறது. லக்னோ-49 ரகக் கொய்யாவைவிட மென்மையாகவும் உள்ளது. தைவான் ரகத்தைப்போல அதிக காய்ப்பு தரும் ரகமாகவும் உள்ளது. தைவான் ரகத்துக்கும் இந்த ஜி-விலாஸுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை” என்றார்.

தொடர்புக்கு, பரமசிவன், செல்போன்: 99523 53724

அதிக சதைப்பற்று...
நீண்டநாள் இருப்பு!

ஜி விலாஸ் கொய்யா ரகத்தின் சிறப்பைப் பற்றிப் பேசிய ராஜேஷ், “கடுமையான வெயிலையும் கடும் குளிரையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது. அதிக உரம், இடுபொருள் கொடுக்கத் தேவையில்லை. மண்ணில் உள்ள சத்தை எடுத்தே காய்க்கும் தன்மையுடையது. இதன் காய் 250 முதல் 450 கிராம் வரை எடையுள்ளது. அதிக இனிப்புச் சுவையும் உடையது. இதைக் கடித்து உண்ணும்போது பேரிக்காயைச் சுவைப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதில் விதைப்பகுதி குறைவாகவும், சதைப்பகுதி அதிகமாகவும் இருப்பது சுவையை அதிகப்படுத்துது. அறுவடை செய்த பழங்கள் 8 முதல் 10 நாள்கள்வரை கெடாமல் இருக்கும். அதிக நோய் எதிர்ப்புத் திறனும் உடையது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இந்தப் பழங்களுக்குச் சந்தையிலும், வியாபாரிகளிடமும் கூடுதல் விலை கிடைக்குது” என்றார்.