Published:Updated:

அதிகரிக்கும் ஆர்கானிக் அங்காடிகள்; போலிகளைக் கண்டறிவது எப்படி?

இயற்கை அங்காடி (File pic) ( Photo: Vikatan/ V.Sathishkumar )

``எங்கள் வாடிக்கையாளர்களே சில நேரங்களில் இயற்கை விவசாயிகளை பரிந்துரை செய்வார்கள். நம்பகத்தன்மை கொண்ட வாடிக்கையாளர்கள் பரிந்துரைக்கும் நபர்களிடமிருந்தும் கொள்முதல் செய்வோம்."

அதிகரிக்கும் ஆர்கானிக் அங்காடிகள்; போலிகளைக் கண்டறிவது எப்படி?

``எங்கள் வாடிக்கையாளர்களே சில நேரங்களில் இயற்கை விவசாயிகளை பரிந்துரை செய்வார்கள். நம்பகத்தன்மை கொண்ட வாடிக்கையாளர்கள் பரிந்துரைக்கும் நபர்களிடமிருந்தும் கொள்முதல் செய்வோம்."

Published:Updated:
இயற்கை அங்காடி (File pic) ( Photo: Vikatan/ V.Sathishkumar )

உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்கிற முனைப்பு பலரிடம் உருவாகி வருகிறது. ஆனால், இயற்கை வேளாண் அங்காடிகளில் விற்கப்படும் பொருள்கள் உண்மையிலேயே இயற்கையில் விளைவிக்கப்பட்டவைதானா என்கிற கேள்வி பலருக்கும் இருக்கலாம். இயற்கை வேளாண் அங்காடிகளின் நம்பகத்தன்மையை எப்படி உறுதி செய்வது என சென்னையில் இயற்கை வேளாண் அங்காடி நடத்தி வரும் ராதிகாவிடம் கேட்டோம்.

ராதிகா
ராதிகா

``நாங்கள் நடத்தி வரும் அங்காடி ஓர் கூட்டு முயற்சி. 2008-ம் ஆண்டு இந்த அங்காடியைத் தொடங்கினோம். விவசாயிகளின் பண்ணைகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அவர்கள் இயற்கையாகத்தான் விளைவிக்கிறார்களா, இயற்கை விவசாயத்தின் மீதான உண்மையான ஈடுபாடு அவர்களுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்னரே அவர்களிடமிருந்து விளைபொருள்களைக் கொள்முதல் செய்வோம். நாங்கள் யாரிடமிருந்து கொள்முதல் செய்கிறோம் என்பதை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்கிறோம்.

எங்கள் வாடிக்கையாளர்களே சில நேரங்களில் இயற்கை விவசாயிகளைப் பரிந்துரை செய்வார்கள். நம்பகத்தன்மை கொண்ட வாடிக்கையாளர்கள் பரிந்துரைக்கும் நபர்களிடமிருந்தும் கொள்முதல் செய்வோம். எங்கள் வாடிக்கையாளர்களைக்கூட சில நேரங்களில் பண்ணையைப் பார்த்து வருமாறு கூறுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இயற்கை உணவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் இயற்கையாக விளைந்தவையா என்பதை தரச்சான்றிதழ் மூலமாக மட்டுமே உறுதி செய்துவிட முடியாது. நீங்கள் வாங்கும் பொருள் எங்கு விளைந்தது, யாரால் விளைவிக்கப்பட்டது என்கிற தகவல்களை நீங்கள் கடை உரிமையாளர்களிடம் கேட்க வேண்டும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள் நம்பிக்கையோடும், உறுதியோடும் வெளிப்படையாக அந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறார்கள் என்றால் அவர்களிடமிருந்து நீங்கள் பொருள்களை வாங்கலாம். இந்த நம்பகத்தன்மை அடிப்படையில்தான் இயற்கை அங்காடிகளில் வாங்க முடியுமே தவிர, உணவுப் பொருள்களின் வெளித்தோற்றத்தை பார்த்தெல்லாம் இயற்கையாக விளைந்தவையா என்று கண்டுபிடிக்க முடியாது. தரச்சான்றிதழ் என்பதுகூட லேபிள்தான்” என்றவரிடம் இயற்கை வேளாண் அங்காடிகளில் சந்தை விலையைவிட விளைபொருள்களின் விலை கூடுதலாக இருப்பதற்குக் காரணம் என்ன என்று கேட்டோம்.

``இயற்கை வேளாண் அங்காடிகளில் விலைபொருள்களின் விலை கூடுதலாக இருக்கிறது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இயற்கை விளைபொருள்களுக்கான தேவையைப் பயன்படுத்திக்கொண்டு அதிக விலை வைத்து விற்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் உற்பத்தி பெருகும்போது விலை குறையும். இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை நுகர்வோர் குறைவான அளவிலேயே இருக்கிறார்கள்.

இயற்கை அங்காடி (File pic)
இயற்கை அங்காடி (File pic)
Photo: Vikatan/ V.Sathishkumar

நுகர்வோர் அதிகரிக்க உற்பத்தி பெருகும்; அதன்மூலம் விலை குறையும். தற்போது சந்தை விலைக்கு நிகராகவும் அல்லது சற்றுக் கூடுதல் விலைக்கும்தான் விற்கப்படுகிறதே தவிர உயர்தர மக்கள் மட்டும்தான் வாங்க முடியும் என்கிற நிலை இல்லை” என்கிறார் ராதிகா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்கானிக் உணவுகள்... நமக்கு நாமே!

வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்கள் வழியே நமக்குத் தேவையான ஆர்கானிக் காய்கறிகளை நாமே விளைவித்துக் கொள்ள முடியும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த, இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் அனந்து.

அனந்து
அனந்து

``நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்வதன் மூலம் அவற்றை வெளியில் இருந்து வாங்குவதற்கான செலவு இல்லை. அந்தத் தொகை சேமிப்பாக மாறும். நகரங்கள், கிராமங்கள் என நீங்கள் எங்கு வசித்தாலும் உங்கள் வீட்டின் சூழலுக்கு ஏற்றாற்போல உங்களுக்கான காய்கறிகளை நீங்கள் விளைவித்துக்கொள்ள முடியும். இல்லத்தரசிகள் இதை ஒரு தொழிலாகவும் செய்ய முடியும். அதற்கான சாத்தியங்கள் தற்போது பெரிதளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகப் பெண்கள் ஒன்று சேர்ந்து இயற்கையாகக் காய்கறிகளை விளைவித்து சந்தைப்படுத்தினால் வருவாய் ஈட்ட முடியும். தமிழகத்திலேயே பல பகுதிகளில் மகளிர் குழுக்கள் இதைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இயற்கையான இடுபொருள்கள் மற்றும் விளைபொருள்களையும் விற்பனை செய்கிறார்கள்.

பெண்கள் ஒன்று சேர்ந்து குழுவாக இயங்கினால் தொடர்ச்சியாக இயங்க முடியும். தங்களின் தேவை போக எஞ்சும் விளைபொருள்களைச் சந்தைப்படுத்தலாம். சமையலறையில் எஞ்சும் காய்கறிக் குப்பைகளையே உரமாக மாற்றி வீட்டுத்தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம் குப்பைகள் வெளியே போகாது. நம் சமையலுக்குத் தேவையான பல வகையான விளைபொருள்களையும் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டத்தின் மூலமாகவே விளைவிக்க முடியும்” என்கிறார் அனந்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism