Published:Updated:

ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை அமைப்பது எப்படி? பசுமை விகடன் நடத்தும் நேரலை நிகழ்ச்சி!

பசுமை விகடன் பயிற்சி!

ஒரே இடத்தில், மேல்தளத்தில் கோழிகள் வளர்த்து, அதனது எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்தளத்தில் குளக்கரை அமைத்து மீன்கள் வளர்க்கலாம். அந்த குளத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, வேளாண்பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு பயன்படுத்தி, கூடுதல் வருமானத்தை ஈட்டலாம்.

ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை அமைப்பது எப்படி? பசுமை விகடன் நடத்தும் நேரலை நிகழ்ச்சி!

ஒரே இடத்தில், மேல்தளத்தில் கோழிகள் வளர்த்து, அதனது எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்தளத்தில் குளக்கரை அமைத்து மீன்கள் வளர்க்கலாம். அந்த குளத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, வேளாண்பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு பயன்படுத்தி, கூடுதல் வருமானத்தை ஈட்டலாம்.

Published:Updated:
பசுமை விகடன் பயிற்சி!

விவசாயம் என்றாலே அதிக லாபம் இல்லாத தொழில் என்ற மனநிலை உருவாகி வருகிறது. அதிலும் கால்நடை வளர்ப்பு பற்றி கேட்கவே வேண்டாம். ஆடு, மாடுகள் வளர்ப்பது கடினமான வேலை என்ற எண்ணம் உருவாகியுள்ளது. ஆனால், நடைமுறையில் இவை இரண்டுமே நல்ல லாபம் கொழிக்கும் தொழில்கள். இவை இரண்டும் ஒன்றிணைந்தால் இரட்டிப்பு லாபம்தான்.

கறவை மாடு வளர்ப்பு
கறவை மாடு வளர்ப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த இரட்டிப்பு லாபத்தின் மந்திரத்தை சொல்லித் தருவதுதான் 'லாபத்துக்கு வழிகாட்டும் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை' என்ற நேரலை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை பசுமை விகடன் ஏற்பாடு செய்துள்ளது. இதில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா. குமாரவேல் பயனுள்ள உரை நிகழ்த்த உள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிகழ்ச்சியை பற்றி முனைவர் பா.குமாரவேல் சொல்வதைக் கேளுங்கள்...

''ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை என்றால் என்ன என்ற கேள்வி, பலருக்கும் இருக்கும். வேளாண்மையுடன் கால்நடைகள், கோழியினங்கள் மற்றும் மீன் ஆகியவற்றை, ஒரே இடத்தில் இணைத்து பராமரித்து, ஆண்டு முழுவதும் கூடுதல் வருவாய் பெறுவதுதான் ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.

கால்நடை வளர்ப்பு
கால்நடை வளர்ப்பு

உதாரணமாக, கிராமங்களில் தென்னந்தோப்பில் பசுந்தீவனம் பயிரிட்டு, அதில் கால்நடைகள் மற்றும் நாட்டுக்கோழிகளை மேய்ச்சலுக்கு விடும்போது கிடைக்கும் கழிவுகளை, தோப்பு மற்றும் பசுந்தீவனங்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். மேலும் ஒரே இடத்தில் மேல் தளத்தில் கோழிகள் வளர்த்து, அதனது எச்சத்தைப் பயன்படுத்தி, கீழ்தளத்தில் குளக்கரை அமைத்து மீன்கள் வளர்க்கலாம். அந்த குளத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, வேளாண்பயிர்கள் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு பயன்படுத்தி, கூடுதல் வருமானத்தை ஈட்டலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒருங்கிணைந்த பண்ணையில் வேளாண்மையுடன் கால்நடைகளை இணைக்கும் போது நிலம், நீர் மற்றும் தாவரங்கள் ஆகியன முழுஅளவில் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக வருமானமும் பெருகி வருகிறது. விவசாயத்திற்கு இயற்கை கைக்கொடுக்கவில்லை என்றாலும், கால்நடைகள் நிச்சயம் கைக்கொடுக்கும். இதற்கு ஒருங்கிணைந்த பண்ணை பெரும் உதவி புரியும்.

காய்கறிகள், கால்நடை வளர்ப்பு...
காய்கறிகள், கால்நடை வளர்ப்பு...
நா.ராஜமுருகன்

நேரலை நிகழ்ச்சியில்...

1. கோழி வளர்ப்பு மூலம் சிறிய முதலீட்டில் பெரிய லாபம் பெறலாம் பெறுவது எப்படி?
2. ஆடு வளர்ப்பை வெற்றிகரமாகச் செய்வது எப்படி?
3. கறவை மாடு வளர்ப்பில் கவனிக்க வேண்டியது என்ன?
4. தீவன மேலாண்மையால் எப்படி செலவை குறைக்கலாம்?
5. ஏ.2 பால் வகையை எப்படி கண்டுபிடிக்கலாம்?
6. ஒருங்கிணைந்த பண்ணையை அமைப்பது எப்படி?
7. எந்தெந்த விவசாயக் கழிவுகளை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம்?
8. கால்நடை கழிவுகளை எப்படி பயன்படுத்தலாம்?
9. ஒருங்கிணைந்த பண்ணையில் எப்படி வருமானத்தை ஈட்டலாம்?

இன்னும் பல பல தகவல்கள் பற்றி பேசவுள்ளேன். விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும், விவசாய ஆர்வலர்களும் இந்த நேரலையில் பங்கு கொண்டு பயன் பெறுமாறுக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று அழைப்புவிடுத்துள்ளார், முனைவர் பா.குமாரவேல்.

நேரலை நிகழ்ச்சி எப்பொழுது?

வரும் ஜூலை 2-ம் தேதி சனிக்கிழமை, மாலை 6 மணி முதல், இரவு 7.30 மணி வரை, ஜூம் மீட் வாயிலாக இந்த நேரலைப் பயிற்சி நடைபெறும்.

கால்நடை
கால்நடை

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?
லாபத்துக்கு வழிகாட்டும் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை நேரலை வகுப்பில் கலந்துக்கொள்ள, https://events.vikatan.com/391-profit-guiding--livestock/ என்ற இணைய முகவரியில், ஜூலை 2, 2022 மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்து, இலவசமாக கலந்து கொள்ளலாம்.

இந்த நேரலை வகுப்பில் கலந்துக்கொண்டு பயன் பெறலாம் வாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism