மிகச் சுலபமான, சிறிய வேளாண் தொழில்நுட்பங்கள் எப்படி மிகப்பெரிய மாற்றங்களையும் லாபத்தையும் கொடுக்கின்றன என்பதை உதாரணங்களுடன் சொல்லும் தொடர் இது. உலகின் பல்வேறு நாடுகளில் வெற்றிகரமான விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.

ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘பருவத்தே பயிர் செய்’ போன்ற பழமொழிகள், ஒரு குறிப்பிட்ட பருவத்தில் பயிர் செய்ய வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிடுகின்றன. காரணம், அந்தப் பருவத்தில் நிலவும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், சூரிய ஒளியின் நேரம், மழை அல்லது பனியின் அளவு என அனைத்து வானிலைக் காரணி களும், அந்தப் பருவத்தில் பயிரிடப் படும் ஒரு பயிரின் வளர்ச்சி, பூக்கும் நிலை மற்றும் காய்க்கும் நிலை என அனைத்தையும் முடிவு செய்யும். அதனால்தான் ஒவ்வொரு பருவத்திலும் பயிரிட வேண்டிய பயிர்கள் பட்டியலை அனுபவ பூர்வமாகச் சொல்லி இருக்கிறார்கள் முன்னோர்கள்.

பருவத்தில் விதைத்து, நல்ல விளைச்சல் எடுத்தாலும், விற்பனை செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யக்கூடிய தானியங்களைப் போன்ற பயிர்களுக்குப் பரவாயில்லை. ஆனால், சேமித்து வைக்க முடியாத காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்கள் போன்றவற்றை என்ன செய்ய முடியும்? கிடைத்த விலைக்கு, அது நஷ்டமாக இருந்தாலும் விற்றுதான் ஆக வேண்டிய சூழல்.

சரி, இப்போது அப்படியே அதன் எதிர்நிலையைப் பார்ப்போம். ஒரு பயிரின் பருவகாலம் முடிந்துவிட்டால், அதன் வரத்துச் சந்தையில் குறைந்துவிடும். அந்தச் சமயத்தில், அதன் விலை உச்சத்தைத் தொடும். இதற்கு, மிகச்சிறந்த உதாரணங்கள் தக்காளியும் வெங்காயமும்தான். ஆனால், இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில், நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் அந்தப் பயிர்களைப் பயிரிட ஏதுவான பருவநிலை இருக்கிறது. அதனால் அங்கு விளையும் பொருள்கள் நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன. இது முழுத் தேவையையும் பூர்த்திச் செய்யாது என்றாலும், ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.

ஆனால், தைவான் போன்ற மிகச்சிறிய நாடுகளில் அல்லது தீவுகளில், கிட்டத்தட்ட நாடு முழுவதும் ஒரே மாதிரியான தட்பவெப்ப நிலையே நிலவும். அதனால் குறிப்பிட்ட ஒரு பருவம் முடிந்த பிறகு, குறிப்பிட்ட அந்தப் பயிரை பயிர்செய்ய முடியாது. அது போன்ற சூழல்களில், இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். அதனால் பொருள்களின் விலையும் மிக அதிகமாக இருக்கும். அந்தச் சமயத்தில், ஏதேனும் ஓர் உபாயத்தால் உள்ளூரிலேயே குறிப்பிட்ட அந்தப் பயிரிரை உற்பத்தி செய்தால், நல்ல விலை கிடைக்குமல்லவா?

தைவான் - கிழக்காசியாவில் இருக்கும் ஒரு சிறிய நாடு. சீனாவுக்கு மிக அருகில், அதன் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு. அதன் மொத்தப் பரப்பளவு சுமார் 14,000 சதுர மைல்கள் மட்டுமே. அதிலும், மூன்றில் இரண்டு பகுதி மலைப்பகுதிகளையும், ஒரு பகுதி சமவெளியையும் கொண்டிருக்கும். அதில்தான், சுமார் இரண்டரை கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதிலும், கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட அபரிமிதமான தொழில் வளர்ச்சியால், பெரும்பாலான நிலங்கள் தொழிற்சாலை களுக்கு மாற்றப்பட்டுவிட்டன.

ஆக, ஒருகாலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பைக் கொடுத்த விவசாயம், இன்றைக்கு வெறும் இரண்டு சதவிகிதமாக மாறிவிட்டது. இருப்பினும், இருக்கின்ற நிலத்தைக் கொண்டு அதிகபட்சம் எவ்வளவு விளைவிக்க முடியுமோ அதை விளைவிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தது அரசு. அதன் விளைவாகத் தற்போது அங்கு பருவமில்லா பருவத்திலும் சாகுபடி நடந்து வருகிறது.

பொதுவாக, குளிர் அதிகம் இருக்கும் மேற்கத்திய நாடுகளிலும், வெயில் அதிகமிருக்கும் அரபு நாடுகளிலும் பசுமைக் குடில்களை அமைத்து விவசாயம் செய்வது ஒரு சாதாரண நிகழ்வு. பசுமைக் குடில்களுக்குள் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், சூரியஒளியின் அளவு என அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். சமயங்களில் மண்ணில்லா விவசாயத்தைக்கூடச் செய்யலாம். தானியங்கி முறையில் உரமிடுதல் மற்றும் பாசனம் செய்யலாம். ஆனால், இதற்கு அதிக மின்சாரம் தேவைப்படும். அடிப்படை கட்டமைப்பு மற்றும் நடைமுறை செயல்பாட்டுக்குப் பசுமைக் குடில்கள் அதிகம் செலவு வைக்கும். அந்தளவுக்கு வருமானமும் கிடைக்கும் என்பதால், வளர்ந்த நாடுகளில் பசுமைக்குடில் விவசாயம் மிகச் சாதாரணம். ஆனால், தைவானிலும் பெரும்பான்மையாக இருக்கும் சிறுவிவசாயிகளுக்கு அது சாத்தியமில்லை. எனவே, அவர்களுக்கு ஏற்ற வேளாண் குடில்களை, குறைந்த முதலீட்டில் அமைப்பதற்கான ஆய்வுகள் விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாகப் பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாகின. அவற்றையே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன்.

தாழ்நிலை பிளாஸ்டிக் கூண்டுகள்

பெரும்பாலான காய்கறிகளைக் குளிர் மிக அதிகம் இருக்கும் பனிக்காலத்தில் விதைக்கவோ நடவு செய்யவோ இயலாது. விதைகள் பழுதின்றி நன்கு முளைப்பதற்கும் அல்லது நடவு செய்த நாற்றுகள் நன்கு வேர்பிடித்து விரைவாக வளர்வதற்கும் மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கியக் காரணி. குளிர்காலத்தில் மண்ணின் வெப்பநிலை குறைவாக இருப்பதால், விதைகள் விரைவாகவும் சீராகவும் முளைக்காது. அதேபோல, நடவுசெய்யப்படும் நாற்றுகள் வளர்வதற்கு அதிக நாள்களை எடுத்துக்கொள்ளும். எனவே, காய்கறிகளின் விதைப்பும், நடவும் குளிர்காலத்துக்கு முன்னரும் பின்னரும்தான் பெரும்பாலும் நடைபெறும். ஆனால், அதைப் பனிக் காலத்திலேயே செய்ய முடிந்தால், ஓரிரண்டு மாதங்கள் முன்னதாகவே அறுவடை செய்து சந்தைக்குக் கொண்டுவந்து விடலாம். அந்தச் சமயத்தில், சந்தையில் காய்கறிகளின் வரத்துக் குறைவாக இருப்பதால், நல்ல விலை கிடைக்கும். அதற்குக் கைகொடுப்பவைதான் தாழ்நிலை பிளாஸ்டிக் கூண்டுகள் (Low Plastic Tunnels).

நடவு பாத்திகளை அமைத்து, அவற்றில் விதைகளை ஊன்றி அல்லது நாற்றுகளை நடவு செய்தபிறகு, பாத்திகளின் மேல் இரும்பு அல்லது அலுமினியக் குழாய்களைக் கொண்டு கூண்டுகளை உருவாக்கி, அவற்றைப் பிளாஸ்டிக் மூடாக்குகளைக் கொண்டு முழுமையாக மூடிவிட வேண்டும். 15 நாள் களுக்கு, நடவு பாத்திகளை முற்றிலுமாகவே மூடி வைத்திருக்கலாம். இது மண்ணின் வெப்பநிலையையும், கூண்டுக்குள் இருக்கும் காற்றின் வெப்பநிலையையும் சற்று அதிகமாகவே வைத்திருக்கும். அதனால் விதையாக இருப்பின் விரைவாக முளைக்கவும், நாற்றுகளாக இருப்பின், நன்கு வேர்பிடித்து விரைவாக வளரவும் செய்யும்.

‘‘எந்த இடத்தில் வலைக்குடில்கள் அமைக்க வேண்டுமோ, அந்த இடத்தின் தட்பவெப்ப நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.’’

வாரங்கள் செல்லச் செல்ல, பனியின் தாக்கம் குறைந்து, வெளிப்புற வெப்பநிலையும் அதிகரிக்க ஆரம்பிக்கும்போது, பிளாஸ்டிக் மூடாக்கு களைப் பக்கவாட்டில், ஓரளவுக்கு உயர்த்திச் சுருட்டி வைத்துவிட வேண்டும். செடிகளும் அப்போது ஓரளவுக்கு வளர்ந்திருக்கும். ஆக, படிப்படியாகப் பிளாஸ்டிக் மூடாக்குகளைப் பக்கவாட்டில் உயர்த்தி, ஒருகட்டத்தில் கூண்டுகளின் மேற்புறத்தில் மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

இளவேனிற்காலத்தில் வெப்பநிலை சீராகிவிட்டால், அதுவும் கூடத் தேவையில்லை. இப்படி விதைக்கப்படும் அல்லது நடப்படும் செடிகள் ஓரிரண்டு மாதங்கள் முன்னதாகவே அறுவடைக்குத் தயாராகிவிடும். தைவானில் முதன்முதலில் இதைத் தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, பாகற்காய் சாகுபடியில் பயன் படுத்தினர். தற்போது பல்வேறு வகையான காய்கறிகளுக்கும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

குளிர்காலச் சாகுபடிக்காக உருவான இந்தத் தொழில்நுட்பம், மழைக்காலத்துக்கும் பயனுள்ளதாக மாறியது. எனவே, மழைக் காலத்தில் நைலான் வலைகளால் ஆன மூடாக்குகளைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அவை காற்றோட்டத்தை அதிகரிப்பதோடு மட்டுமன்றி, செடிகளின் மீதான மழையின் தாக்கத்தையும் தணிக்கிறது.

முதலில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பல்வேறு வகையான கீரை வகைகளை உற்பத்தி செய்யத் தொடங் கியவர்கள், பிறகு குடைமிளகாய், முட்டைக் கோஸ், முள்ளங்கி, தக்காளி, பீன்ஸ் எனப் பல்வேறு காய்கறி களையும் பயிரிட ஆரம்பித்துவிட்டனர். இந்தக் கூண்டுகளில் உற்பத்தியாகும் காய்கறிகள், பூச்சித் தாக்குதலிலிருந்தும் தப்பிப்பதால் அவற்றின் தரம் சிறப்பாக இருக்கிறது. அதனால் சந்தையில் விலையும் அதிகம் கிடைக்கிறது. இன்றைக்கு, தைவானில் தாழ்நிலை பிளாஸ்டிக் மற்றும் வலைக் கூண்டுகள் விவசாயம் 5,000 ஏக்கருக்கும் மேல் நடந்து வருகிறது.

தைவானைப் போன்று அதிக குளிர், மழை மற்றும் சூறாவளிக் காற்றின் தாக்கத்தைக் கொண்டிருக்கும் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளும், தாழ்நிலை பிளாஸ்டிக் மற்றும் வலைக்கூண்டுகள் விவசாயத்தைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. வியட்நாமில் தாழ்நிலை வலைக்கூண்டுகளில் சிறுகீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை ஆகியவற்றைப் பயிரிடும் விவசாயிகள், மும்மடங்கு விளைச்சலை அறுவடை செய்கிறார்கள்.

கம்போடியாவில் காலிஃப்ளவரை வலைக்கூண்டுகளில் பயிரிடும்போது, பூச்சித் தாக்குதல் 80 சதவிகிதம் வரையிலும் குறை வதுடன், மகசூலும் இருமடங்கு கிடைக்கிறது. பசிபிக் தீவுக்கூட்டங்களில் ஒன்றான சாலமன் தீவு விவசாயிகள், வலைக்கூண்டுகளைப் பயன்படுத்தி முட்டைக்கோஸ் உற்பத்தியில் பூச்சித் தாக்குதலை 70 சதவிகிதம் குறைப் பதுடன், அதிக வருமானமும் பெற முடியும் என்று நிரூபித்துள்ளனர். ஆக, தாழ்நிலை பிளாஸ்டிக் மற்றும் வலைக்கூண்டுகள் பருவமில்லா பருவத்தில் காய்கறி உற்பத்தியைச் சாத்தியமாக்குகிறது.

தாழ்நிலை பிளாஸ்டிக் அல்லது வலைக் கூண்டுகளை, ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கோ அல்லது அந்தப் பருவத்தில் முதல் சில வாரங்களுக்கோ, மாதங்களுக்கோதான் பயன்படுத்த முடியும். ஓரிடத்தில் நிரந்தரமாக நான்கைந்து ஆண்டுகளுக்கு நிலைக்கும்படி பயன்படுத்த முடியாது என்று நினைத்தவர்கள், அப்படியொரு உபாயத்தையும் உருவாக் கினார்கள். அதுதான் வலைக்குடில்கள்.

வலைக்குடிகள்!

ஆரம்பகட்டத்தில் வலைக்குடில்கள் மிக மிக எளிய வடிவில் அமைக்கப்பட்டன. நல்ல மண்வளம் கொண்ட இடத்தைத் தேர்வு செய்து, 500 சதுரமீட்டர் பரப்பளவில் இரும்புக் குழாய்களைக் கொண்டு, செவ்வக வடிவில் அமைத்தனர். இவ்வலைக் கூடங்களின் மேற்கூரையும் சமதளமாகவே அமைக்கப்பட்டது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமே, நல்ல தரமான வலைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பதுதான்.

முக்கியமாக, எந்த இடத்தில் வலைக் குடில்கள் அமைக்க வேண்டுமோ, அந்த இடத்தின் தட்பவெப்பநிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடுத்ததாக, பயிரிட இருக்கும் பயிர்களைத் தாக்கும் முக்கியப் பூச்சி மற்றும் நோய்களைப் பற்றிய தகவல் களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில், அதற்கேற்பதான் மிகச்சரியான வலைகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

பொதுவாக, வலைக்குடில்களை அமைக்க 16 முதல் 60 மெஷ் (mesh) வரையிலான வலைகளையே பயன்படுத்துவார்கள். இதில் மெஷ் என்பது ஓர் அங்குல அளவில் இருக்கும் துளைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். எனவே, 16 மெஷ் என்பது பெரிய துளைகளைக் கொண்ட வலையையும், 60-மெஷ் என்பது மிக மிகச் சிறிய துளைகளைக் கொண்ட வலையையும் குறிப்பதாகும்.

வெள்ளை ஈக்கள், அசுவினி, இலைப் பேன்கள் போன்ற மிகச்சிறிய பூச்சிகள் வலைக்குடில்களுக்கு உள்ளே புகாமல் தடுக்க, 60-மெஷ் வலைகளையே பயன்படுத்த வேண்டும். மேலும், இது போன்ற சிறிய துளைகளைக் கொண்ட வலைகள்தான் பயிர் வளர்ச்சிக்கு ஏதுவான ஒளியை (50-70 சதவிகிதம்) உள்ளே அனுப்பும். ஆனால், அதிக வெயில் மற்றும் காற்றின் ஈரப்பதம் உடைய பகுதிகளில், இது போன்ற நுண்ணிய வலை களைப் பயன்படுத்தும்போது, வலைக் குடில்களின் உட்புறம் வெப்பநிலையும் ஈரப்பதமும் இன்னும் அதிகரித்துப் பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்களை அதிகப் படுத்தும் அபாயம் உண்டு.

அதைத் தவிர்க்க, நல்ல காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இன்னொன்று, இந்த வலைகள் புற ஊதாக் கதிர்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டவையாக இருக்க வேண்டியதும் அவசியம். இல்லையென்றால் சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக்கதிர்கள், ஓரிரண்டு ஆண்டு களிலேயே வலை களைச் சேதப்படுத்தி, அவற்றை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கி விடும்.

இப்படி அமைக்கப்பட்ட வலைக் குடில்களில், பல்வேறு கீரை வகைகளைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பயிரிட்டு, பூச்சிக்கொல்லி களின் பயன்பாடின்றி, 15 அறுவடைகளை நிகழ்த்திக் காட்டியிருக் கிறார்கள். முறையான மண்வளம், பயிர் மேலாண்மையையும் மேற்கொண்டால் இது சாத்தியமே என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. தொடர்ந்து, தக்காளி, கத்திரி, குடைமிளகாய், முட்டைக் கோஸ், காலி ஃப்ளவர், புரோக்கோலி, பீன்ஸ், பொரியல் தட்டை மற்றும் பாகற்காய் போன்ற பயிர் களையும் பயிரிட ஆரம்பித்தனர். தைவானின் தென்பகுதியில் இருக்கும் சில விவசாயிகள், பப்பாளி மற்றும் இலந்தை போன்ற பழமரங் களைக்கூட வலைக்குடில்களில் பயிரிடு கிறார்கள்.

ஆனால், இந்த இடத்தில் மிக மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. நீங்கள் பயிரிட விரும்பும் காய்கறிகளை, அந்தப் பருவத்தில் வலைக்கூடங்களுக்கு வெளியிலேயே, திறந்த வயல்வெளிகளிலேயே விளைவிக்க முடியுமானால், அதை வலைக்குடில்களில் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், நிறைய விவசாயிகள் அந்தப் பருவத்தில் குறிப்பிட்ட காய்கறியை விளைவித்துச் சந்தைக்குக் கொண்டு வருவார்கள். அதனால் நல்ல விலை கிடைக்காது.

எந்தவொரு பயிரை அந்தப் பருவத்தில் திறந்தவெளி வயல்களில் விளைவிக்க இயலாதோ, அதைத்தான் வலைக்குடில்களில் விளைவிக்க வேண்டும். அப்போதுதான் அதிக லாபம் கிடைக்கும். வலைக்குடில்களின் கட்டுமான செலவு ஒருசில லட்சங்கள் ஆகும் என்பதால், எப்போதுமே அதிக லாபம் கிடைக்கும் வகையிலான பயிர்களை விளைவிப்பது அதிமுக்கியம்.

தைவானில் சிறிய அளவில் அமைக்கப்பட்ட இவ்வலைக் குடில்கள் வியட்நாமில் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டன. ஹனோய் நகருக்கு மிக அருகில், செந்நதிப் படுகையில் இருக்கும் விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நிலத்தைப் பகிர்ந்துகொண்டு விவசாயம் செய்து வருகிறார்கள். அதனால், பல விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஐந்தாறு ஏக்கரில் கூட, ஒரு மிகப்பெரிய வலைக்குடிலை அமைத்து விவசாயம் செய்வதைக் காண முடியும்.

ஆனால், இந்த வலைக்குடில்களில் ஒரு நடைமுறை சங்கடம் உண்டு. அவற்றின் மேற்கூரை சமதளமாக இருப்பதால், அதிக காற்றடிக்கும் காலத்தில் அவை மிக எளிதாகச் சேதம் அடையத் தொடங்கின. தைவான் போன்ற நாடுகளில் ஜூலை முதல் அக்டோபர் வரை பெருமழைக்காலம். புயல் காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ, ஓரிரண்டு நாள்களில் 40 - 50 உழவு மழை என்பதெல்லாம் மிகச் சாதாரணம். எனவே, வலைக்குடில்கள் இப்பெருமழை காலங்களில் பலத்த சேதத்துக்கு உள்ளாவது விவசாயிகளுக்குப் பெருந்துயர். அதற்காக வடிவமைக்கப்பட்டவைதான் பிளாஸ்டிக் வலைக்குடில்கள்.

- வளரும்