"சின்ன வயசுல முளைவிட்டிருக்கும் புளியங்கொட்டையை வேறு இடத்தில் நட்டு வைத்து வளருதான்னு பார்ப்போம். சாக்கடையில இருக்கிற தக்காளிச் செடி, சாமந்திச் செடி எடுத்து வந்து வீட்டில் நடுவோம். அதன் தொடர்ச்சிதான் இந்த மாடித்தோட்டம்” என்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த புரூரவன்.

புதுச்சேரி-கடலூர் சாலையில் நைனார் மண்டபம் வண்ணாரத் தெருவில் இருக்கிறது இவரது மாடித்தோட்டம். தொலைவிலிருந்தே தனித்துத் தெரியும் வகையில் மாடியில் உள்ள மரங்கள் நமது கவனத்தைக் கவர்கின்றன. பழ மரங்கள், காய்கறிகள் என மாடியை விவசாயம் நிலம் போலவே மாற்றி வைத்திருக்கிறார்.

ஒருமாலைப் பொழுதில் அவரது மாடித்தோட்டத்தில் சந்தித்தோம். ‘‘இது எங்க சொந்தவீடு. என் மனைவி பார்வதி. எங்களுக்கு மூன்று ஆம்பள பசங்க. எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. 6 பேரப் புள்ளைங்க. ஒரே வீட்டுல கூட்டுக் குடும்பமா வாழுறோம். எனக்கு வீட்டுல செடி, கொடிகளை வளர்க்குறதுல ஆர்வம் அதிகம். 10 வருஷத்துக்கு முன்ன நாங்க குடியிருந்த வீட்டு மாடியில அஞ்சாறு ஜாடிகள்ல செடிகளை வளர்த்தேன். கீழ் வீட்டுல இருந்தவங்க, தண்ணி ஒழுகுதுன்னு ஒரே பிரச்னை. அதுக்குப் பிறகுதான் இந்த இடத்தை வாங்கி வீடு கட்டினோம். கட்டும்போதே மாடியின் தளத்தை வழக்கத்தைவிடக் கடினமாகக் கட்டி, தண்ணீர் கீழே இறங்காதவாறு ‘புரோக்கன் டைல்ஸ்’ பதிச்சிட்டேன். பிறகு எனக்குப் பிடிச்ச செடிகளை மாடியில வெச்சு வளர்க்க ஆரம்பிச்சேன்.

கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், சாமந்தி செடிகளோடதான் என் மாடித்தோட்ட விவசாயம் ஆரம்பிச்சது. 10 செடிகளை வெச்சா, அதுல பாதிதான் பிழைச்சு வளரும். சில நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவங்க சொன்னபடி, யூரியா, டி.ஏ.பி உரங்களைப் போட்டும் பயனில்ல. அப்பதான், இயற்கை விவசாயம் பத்திக் கேள்விப் பட்டேன். அதைப் பத்தித் தெரிஞ்சுக்குறதுக்காகப் பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் மையத்துக்குப் போனேன். இப்ப அந்த மையத்தின் முதல்வராக இருக்குற முனைவர் விஜயகுமார்தான், அப்ப விவசாயிகளுக்கான பயிற்சியில நான் கலந்துக்க காரணமா இருந்தார். அந்தப் பயிற்சிக்குப் பிறகுதான், இயற்கை முறையில என் மாடித்தோட்டத்தை அமைக்க ஆரம்பிச்சேன். இப்ப 9 வருஷம் ஆகிடுச்சு. இன்னிக்குப் புதுச்சேரியில குறிப்பிட்டு சொல்ற மாடித் தோட்டங்கள்ல என்னோட தோட்டமும் ஒண்ணு’’ என்றவர், மாடித் தோட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

பப்பாளி, மாதுளை, காய்கறிச் செடிகள், பூச்செடிகள் என விவசாய நிலத்துக்குள் நுழைந்த உணர்வை ஏற்படுத்தியது அந்த இடம்.

‘‘என்கிட்ட இருந்த தேவையில்லாத பொருள்களை வெச்சுதான் இந்தத் தோட்டத்தை உருவாக்கினேன். இந்த மாதுளை மரத்தில காய்க்குற பழங்கள்ல அணிலுக்குப் பாதி, நமக்குப் பாதி. எல்லாப் பழங்களும் அப்படித்தான். இந்தத் தோட்டத்துல விளையிற பொருள்கள் எங்களுக்கு மட்டும் உணவா பயன்படுதுறதில்லை. அணில், காக்கா, குருவின்னு பல ஜீவராசிகளுக்கும் உணவா இருக்குது. அதுல எனக்கு ரொம்பச் சந்தோஷம்.

இந்தத் தோட்டத்துல வெங்கேரி, உஜாலா, ஒடிசா உள்ளிட்ட 10 அரிதான கத்திரிக்காய் வகைகள் இருக்கு. சிக்கிம், கேரளா காந்தாரி, நாட்டு மிளகாய், காஷ்மீர் மிளகாய்னு அஞ்சாறு வகை இருக்கு. கருந்துளசி, வெண் துளசி தானாகவே முளைச்சு கிடக்குது. கொடி அவரையில் 6 வகையும், செடி அவரையில் ஒண்ணும் இருக்குது. அவரையில மட்டும் வருஷத்துக்குச் சுமார் 40 கிலோ அறுவடை செய்றேன். முருங்கையைப் பொறுத்தவரை செடி முருங்கை, மர முருங்கை ரெண்டுமே இருக்கு. வெட்டிவேர், சிறியா நங்கை, ஆரோ ரூட் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரள சேப்பங்கிழங்கு, மஞ்சள் இருக்குது. சாமந்திப் பூவுல மட்டும் 6 வண்ணச் செடிகள் எங்க தோட்டத்துல இருக்குது.

பழ வகைகள்ல சீத்தா, வாட்டர் ஆப்பிள், பார்படோஸ் செர்ரி, மினி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, கொடி வகைகளில் வெற்றிலை, பீன்ஸ், சுரை, புடல், பாகல் இருக்கு. அதோட சுமார் 3 அடி நீளம் வளரும் பிரான்ஸ் நாட்டு ‘யார்டு லாங்’ பீன்ஸ் இருக்குது. அது காய்ச்சுகிட்டே இருக்கும். கீரைகள்ல பொன்னாங்கண்ணி, பாலக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, சிவப்பு நிற மணத்தக்காளிக்குப் பஞ்சமே இல்லை. 3 வகை அந்தி மல்லி, குடை மல்லி, ரெட்டை மல்லி, முல்லை, ராமர் மல்லி உட்பட 6 வகை மல்லிகை இருக்கு. கத்திரிக்காய், சுண்டைக்காய், தக்காளினு இங்கிருந்து கிடைக்குற எல்லாக் காய்கறிகளும் எங்க மூணு குடும்பத்துக்கும் போதுமானதாக இருக்கும். இங்க விளையுற எல்லாம் 100 சதவிகிதம் ஆர்கானிக். இங்க கிடைக்குற விதைகளையும், செடிகளையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கிறேன். கேக்குறவங்களுக்கு அதை இலவசமாகவே கொடுத்துட்டு வர்றேன்’’ என்றவர் நிறைவாக,

‘‘புதுச்சேரி அரசின் வேளாண்துறை நடத்தும் மலர் கண்காட்சியில் மாடித் தோட்டம் பிரிவில் இதுவரை 6 முறை முதல் பரிசைப் பெற்றிருக்கிறேன். மாடித்தோட்டம் வைக்க நினைப் பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். ரசாயன உரங்களை எந்த நிலையிலும் பயன்படுத்தாதீங்க. மாடித்தோட்டம் குறித்த வழி காட்டல்கள், சந்தேகங்கள், விதைகள், செடிகள் யாருக்குத் தேவைப்பட்டாலும் எந்த நேரத்திலும் என்னை அணுகலாம். எனக்குத் தெரிந்தவற்றைப் பகிர்கிறேன். நீங்களும் பகிருங்கள்” என்றார் மலர்ச்சியுடன்.

தொடர்புக்கு,
புரூரவன்,
செல்போன்: 98947 35993

பகிர்வு!

“மாடித்தோட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 3 நண்பர்களுடன் இணைஞ்சு, ‘என் மாடி என் தோட்டம்’ என்ற குழுவைத் தொடங்கினோம். வாட்ஸ்-அப் குழு மூலமாக மாடித்தோட்டம் குறித்த ஆலோசனைகள் கொடுக்கிறோம். மற்றவர்களும் தங்களுக்குத் தெரிஞ்சதைப் பகிர்ந்துக்குவாங்க. உறுப்பினர்கள் தனித்தனியாகச் சேகரிக்கும் விதைகளையும் பகிர்ந்துகொள்வோம். மாடித் தோட்டத்துக்காக யாராவது அணுகினால் அவர்கள் முதலில் பரிந்துரைப்பது எங்களைத்தான். அந்த அளவுக்கு நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் புரூரவன்.‘‘மாடித்தோட்டத்துல கிடைக்குற விதைகளையும் செடிகளையும் பத்திரப்படுத்தி வெச்சிருக்கிறேன். கேக்குறவங்களுக்கு அதை இலவசமாகவே கொடுத்துட்டு வர்றேன்.’’