புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பணிசெய்த ‘பாப்ஸ்கோ’ நிறுவனம் அரசால் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனால் வேலை இழந்தவர், வாழ்வாதாரத்துக்காகத் தனது குலத்தொழிலான மரச்செக்கு எண்ணெய் உற்பத்தித் தொழிலை மீண்டும் தொடங் கியுள்ளார்.

பாரம்பர்ய மரச்செக்கு எண்ணெய் ஆலை ஒன்றைத் தனது வீட்டின் அருகில் சிறிய அளவில் செய்து வருகிறார். வாகை மரத்தால் உருவாக்கப்பட்ட உலக்கை மற்றும் உரல் பொருத்தப் பட்ட மின்சாரத்தில் இயங்கும் செக்கு மூலமாக எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார்.

எண்ணெய் வித்துகளில் இருக்கும் கற்கள், குப்பை, சொத்தை ஆகியவற்றை அகற்ற எந்திரம் பயன்படுத்திச் சுத்திகரிக்கப்பட்ட வித்துகளை மட்டுமே பயன்படுத்துகிறார். தண்ணீருக்குப் பதிலாக இளநீர் அல்லது செவ்விளநீர் சேர்க்கிறார்.

முழு எந்திரமயமாக்கப்பட்ட ரோட்டரி (Rotary) மற்றும் எக்ஸ்பெல்லர் (Expeller) கருவிகளில் வெப்பம் அதிகம் உருவாகும் என்பதால் அனுபவ வழக்கத்தில் வித்துகளைக் குழவிக்குள் கைகளால் தள்ளித் தள்ளிப் பொறுமையுடன் ஆட்டி எண்ணெய் எடுக்கிறார். அவரைச் சந்தித்தோம்.

“நான் டி.எம்.இ படிச்சேன். மேற்கொண்டு படிக்க வசதியில்ல. புதுவை அரசின் பாப்ஸ்கோ நிறுவனத்தில வேலைக்குச் சேர்ந்தேன். கடந்த ஆட்சியிலயே சம்பளத்தை நிறுத்திட்டாங்க. பிறகு, எங்களுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷத்துக்கு முன்ன குலத்தொழிலான மரச்செக்கு எண்ணெய் உற்பத்தித் தொழிலைச் செய்ய முடிவெடுத்தேன். சுமார் 1.50 லட்சம் ரூபாய் முதலீட்டுல மரச்செக்கு எந்திரம், எள் சுத்தம் செய்யுற மெஷின், கல் நீக்கும் மெஷின், உளுந்து உடைக்கும் மெஷின்களை வாங்கினேன். நாட்டுச் சர்க்கரையோடு சேர்த்து இயற்கை முறையில நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரிக்கிறேன்.

இதற்கு வேண்டிய மூலப்பொருள்களை ஜெயங்கொண்டம், வேதாரண்யம், பூம்புகார் பகுதிகள்ல இருந்து வாங்கிக்கிறேன். 80 கிலோ எடையுள்ள எள் மூட்டை ரூ.8,000. அதிலிருந்து சுமார் 30 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். நல்லெண்ணெய் லிட்டர் ரூ.400-க்கு விற்பனை செய்யுறேன். எண்ணெய், பிண்ணாக்கு மூலம் ரூபாய் 5,000 லாபம் கிடைக்கும். 80 கிலோ எடையுள்ள கடலை ரூ.6,800-க்கு வாங்குறேன். அதிலிருந்து 30 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். லிட்டர் ரூ.250 வீதம் விற்பனை செய்றேன். எண்ணெய், கடலைப் பிண்ணாக்கு விற்பனைமூலம் ரூ.2,000 லாபம் கிடைக்கும். தேங்காய் 50 கிலோ எடையுள்ள மூட்டை ரூ.6,500-க்கு வாங்குறேன். அதிலிருந்து 30 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். லிட்டர் ரூ.300 வீதம் விற்பனை செய்றேன். ரூ.3,500 லாபம் கிடைக்கும்.

தரமான, சுத்தமான, சுகாதாரமான, இயற்கை முறையிலான எண்ணெயைத் தயாரிச்சு, நேரடியாக விற்பனை செய்றேன். மூன்று பேர் உழைக்கிறோம். சின்னளவில்தான் இப்போதைக்கு இதைச் செய்துகிட்டிருக்கோம். அதனால மாசம் 10,500 ரூபாய் அளவுக்கு லாபம் பார்த்துட்டிருக்கோம். நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிற கறுப்பு எள் வாங்கி, அதனுடன் செவ்விளநீர், கருப்பட்டி சேர்த்து இயற்கை முறையில் நல்லெண்ணெய் தயாரிக்கிறேன்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு,
ஆறுமுகம்,
செல்போன்: 94867 66888.