Published:Updated:

சத்தான மண்புழுக் குளியல் நீர்... எளிமையாக நீங்களே தயாரிக்கலாம்!

செறிவூட்டப்பட்ட மண்புழு நீர்! ( மாதிரி படம் )

ஒரு லிட்டர் குளியல் நீரை 9 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து செடிகளுக்கு அடியில் ஊற்றியும், இலைவழியாகத் தெளித்தும், சொட்டுநீர்ப் பாசன முறையில் நீரில் கரைத்தும் கொடுத்து நல்ல லாபம் பெறலாம்.

சத்தான மண்புழுக் குளியல் நீர்... எளிமையாக நீங்களே தயாரிக்கலாம்!

ஒரு லிட்டர் குளியல் நீரை 9 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து செடிகளுக்கு அடியில் ஊற்றியும், இலைவழியாகத் தெளித்தும், சொட்டுநீர்ப் பாசன முறையில் நீரில் கரைத்தும் கொடுத்து நல்ல லாபம் பெறலாம்.

Published:Updated:
செறிவூட்டப்பட்ட மண்புழு நீர்! ( மாதிரி படம் )

மண்வளம் பெருகிட மண்புழுக்கள் பெரிதும் உதவுகின்றன. இவை கிடைக்கும் பயிர்க் கழிவுகளை உண்டு நன்மை செய்யும் உரத்தை உருவாக்குவது நாம் அறிந்ததே. ஆனால், மண்புழுக்குளியல் நீர் பற்றி பலரும் அறிய வாய்ப்பில்லை. எலும்பே இல்லாத மெல்லுடலியான மண்புழுவுக்கு உடலை எப்போதும் ஈரமாகவே வைத்திருக்க வேண்டி அவை வியர்வை போன்ற திரவத்தை மெதுவாக வெளிவிடுகின்றன. இந்த திரவத்தைச் சேகரித்து பயன்படுத்தும் உத்திதான் மண்புழுக் குளியல் நீர் தயாரித்தலாகும். அதற்கு ஆங்கிலத்தில் வெர்மிவாஷ் என்ற பெயர் உள்ளது. இந்த நீருக்கு பயிர் வளர்ச்சியூக்கியாகச் செயல்படும் அற்புத சக்தியுண்டு.

 மண்புழு
மண்புழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்று அல்லது நான்கு மண்புழுக்களை ஒரு தொட்டியில் அல்லது பானையில் வளர்த்து அதனடியில் சிறுதுளைகளை இட வேண்டும். இதன்மூலம் மண்புழுவின் நீர் வடியும் வண்ணம் செய்ய முடியும். மண்புழு உள்ள பானைக்கு மேல்புறம் நீர் நிரம்பிய கலயம் அமைத்து அதில் ஒரு லிட்டர் நீரை ஊற்ற வேண்டும். அதற்கு முக்காலி போன்ற 3 கம்புகளைக் கட்டி தொங்கவைத்து சிறுதுளை ஏற்படுத்தி சொட்டு சொட்டாக வர விட வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓர் இரவு முழுவதும் இவ்வாறு சொட்டுச்சொட்டாக விழும் நீரானது மண்புழுவின் உடலை நனைக்கும். பின்னர் மண்புழு ஏற்படுத்திய சுரங்கங்களைக் கழுவிவிட்டு பானையின் அடிப்புறமாகத் துளைகள் வழியே நீர் வெளியேறும். இப்படி வெளியேறும் நீரே மண்புழுக் குளியல் நீராகும். இது டீத்தண்ணீர் மாதிரி இருக்கும். இதைப் பானைக்கு அடியில் வேறு பாத்திரத்தை வைத்து சேகரித்துப் பயன்படுத்தலாம்.

மண்புழு
மண்புழு

அதாவது ஒரு லிட்டர் குளியல் நீரை 9 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து செடிகளுக்கு அடியில் ஊற்றியும், இலைவழியாக தெளித்தும், சொட்டுநீர்ப் பாசன முறையில் நீரில் கரைத்தும் கொடுத்து நல்ல லாபம் பெறலாம். தயாரிக்க முடியாதவர்கள் தனியார்வசம் வாங்கியும் பயன்படுத்துவது நல்லது.

காய்கறிகள், பழங்கள், தென்னை, மலர்கள், மலைத்தோட்டப் பயிர்களென எல்லா பயிர்களும் நல்ல மகசூல்தர மண்புழுக்குளியல் நீரை இலைவழியாக மாதம் ஒருமுறை தெளிப்பது நல்லது. வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளுக்கும் பயன்படுத்தலாம்.

முனைவர்.பா.இளங்கோவன்,

பேராசிரியர் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர்,

பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்,

துவாக்குடி, திருச்சி -15

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism