Published:Updated:

How to: பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி... இயற்கை இடுபொருளின் தயாரிப்பு முறைகள்!

ஜீவாமிர்தம்

இயற்கை இடுபொருள்கள்

How to: பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்டி... இயற்கை இடுபொருளின் தயாரிப்பு முறைகள்!

இயற்கை இடுபொருள்கள்

Published:Updated:
ஜீவாமிர்தம்

ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பங்கள்

இயற்கை வேளாண் வித்தகர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுபாஷ் பாலேக்கர் கண்டுபிடித்த ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கனஜீவாமிர்தம் போன்ற இயற்கை இடுபொருள்களின் தயாரிப்பு முறைகள் இங்கே இடம் பெறுகின்றன.

ஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி வளமான நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாள்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை வலது புறமாக சுற்றுப்படி குச்சி வைத்து கலக்கிவிட்டு வந்தால், ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. இந்தப் பயிர் வளர்ச்சி ஊக்கியைப் பாசன நீரிலேயே கலந்துவிடலாம்.

ஜீவாமிர்தம்
ஜீவாமிர்தம்

பீஜாமிர்தம்

தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, நாட்டு மாட்டுச் சிறுநீர் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் வளமான மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். இதன் பிறகு சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்க வேண்டும். இதன்பிறகே விதையை இந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.

சுபாஷ் பாலேக்கர்
சுபாஷ் பாலேக்கர்

கனஜீவாமிர்தம்

பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரைக் கலந்தால் போதும். பிறகு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும்போது உதிர்த்து பயன்படுத்தலாம். இது மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இயற்கை விவசாய தொழில் நுட்பங்கள்

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் தான் செல்லும் இடங்களிளெல்லாம் அமுதக் கரைசல் பயன்படுத்துவது குறித்து பேசுவார். இயற்கை விவசாயம் செய்வோர் அமுதக் கரைசல் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.

அமுதக் கரைசல்

அமுதக்கரைசல்... இதை ‘நிலவள ஊக்கி’ என்றும் சொல்கிறார்கள். இதை நிலத்தில் தெளித்ததும், 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். நோய்த் தாக்குதல் இல்லாமல் பயிர்கள் வளர உதவும். பொதுவாக 15 நாள்களுக்கு ஒரு தடவை இந்தக் கரைசலைக் கொடுக்கலாம். பயிர்கள் மிகவும் வாட்டமாகக் காணப்பட்டால், வாரம் ஒருமுறைகூட கொடுக்கலாம். வசதியிருந்தால், தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

தயாரிப்பு முறை...

ஒரு தடவை போட்ட மாட்டின் சாணம் (எந்த வகை மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்), சிறுநீர் ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கைப்பிடி வெல்லம், ஒரு குடம் தண்ணீரைச் சேர்க்கவேண்டும். இதை 24 மணி நேரம் நிழல்பாங்கான இடத்தில் வைத்தால் அமுதக்கரைசல் தயார். ஒரு பங்கு அமுதக்கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிக்கலாம். ஓர் ஏக்கருக்கு பத்து டேங்க் (1 டேங்க்-10 லிட்டர்) அளவுக்குத் தெளிக்கவேண்டியிருக்கும். பாசன நீரிலும் கலந்துவிடலாம்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

மூலிகைப் பூச்சிவிரட்டி

பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் புழு, பூச்சிகளை விரட்டக்கூடியது பூச்சிவிரட்டி. நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி, ஆடாதொடை, வேம்பு போன்ற இலை தழைகளை ஐந்து கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, 10 லிட்டர் மாட்டுச்சிறுநீர் கலந்து ஏழு நாள்களுக்கு ஊற வைக்கவேண்டும். அதன்பிறகு, வடிகட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம். மாட்டுச்சிறுநீர் என்பது அருமையான கிருமிநாசினி. அதைக் கலப்பதால் புழு, பூச்சிகள் விரைவாகக் கட்டுப்படும். மாட்டுச்சிறுநீர் கிடைக்காவிட்டால், தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம். 10 லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் பூச்சிவிரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

ஏழு நாள்களுக்கு மேல் ஊறவைத்தால், இது பயிர் வளர்ச்சி ஊக்கியாக மாறிவிடும். இதையும் வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம்.

வேப்பங்கொட்டைக் கரைசல்

வேப்பங்கொட்டை 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு அரை கிலோ ஆகியவற்றை எடுத்து உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது) காட்டன் துணியில் இறுக்கமாகக் கட்டி... 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல் தயார். இதனுடன் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்து, 10 லிட்டர் டேங்குக்கு 500 மி.லி என்ற விகிதத்தில் கலந்து, மாலை மூன்று மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும்.

பஞ்சகவ்யா தயாரிப்பு

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கானது!

தேவையான மூலப்பொருள்கள்:

பசுஞ்சாணம் - 5 கிலோ

பசுமாட்டுச் சிறுநீர் - 3 லிட்டர்

காய்ச்சி ஆறவைத்த பால் - 2 லிட்டர்

பசுமாட்டுத் தயிர் - 2 லிட்டர்

பசு நெய் - 500 கிராம்

நாட்டுச் சர்க்கரை - 1 கிலோ

இளநீர் - 3 லிட்டர்

கனிந்த வாழைப்பழங்கள் - 12

தென்னங் கள் - 2 லிட்டர்

(தென்னங் கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு, ஒருவாரம் கழித்துத் திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதைப் பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.)

பஞ்சகவ்யா
பஞ்சகவ்யா

1 லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி பஞ்சகவ்யா என்பது பல பயிர்களுக்குப் பலமுறை சோதனை செய்து உறுதி செய்யப்பட்ட அளவீடு. இதைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது. 15 நாள்களுக்கு ஒருமுறை அதிகாலை அல்லது இளம் மாலை வேளைகளில் பயிருக்குத் தெளிக்க வேண்டும். தெளிக்கப் பயன்படுத்தும்போது கண்டிப்பாகக் கரைசலை வடிகட்டிய பிறகுதான், தெளிக்க வேண்டும். விதை மற்றும் நாற்று நேர்த்தி செய்யவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது.

முதலில் சொன்ன அளவீட்டில் விதை அல்லது நாற்றுகளை நனைத்து நிழலில் உலர வைத்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் விதைகளில் முளைப்புத்திறன் அதிகரிக்கும். நாற்றுகளில் வேர் சம்பந்தமான நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும். இந்தப் பஞ்சகவ்யா, தழை, மணி, சாம்பல் சத்துகளைப் பயிர்களுக்குக் கொடுப்பதுடன், வளர்ச்சி ஊக்கியாகவும், நுண்ணூட்டச் சத்துகளை வேர்களுக்கு அள்ளிக்கொடுத்து வருகிறது.

கொடுமுடி டாக்டர் நடராஜன்
கொடுமுடி டாக்டர் நடராஜன்

பஞ்சகவ்யா பயன்படுத்துவது குறித்துக் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், தயங்காமல் டாக்டர் நடராஜன் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புக்கு, செல்போன்: 94433 58379.

இ.எம் தயாரிப்பது எப்படி?

இ.எம் தொழில்நுட்பத்தைத் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரும், விஞ்ஞானியுமான முனைவர் அ.உதயகுமார்.

‘‘சமீப காலத்தில், இ.எம் என்ற இரண்டு வார்த்தை விவசாயிகள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. அதன் புண்ணியம் பசுமை விகடனையே சேரும். முதலில் செறிவூட்டப்பட்ட இ.எம் குறித்துப் பார்ப்போம். ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்திலிருந்து 20 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கலாம் எனச் சிலர் சொல்கிறார்கள். இது நிறுவனங்களுக்குச் சாதகமானது. ஆனால், ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்திலிருந்து 100 லிட்டர் விரிவுபடுத்தப்பட்ட இ.எம் தயாரிக்கலாம். 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில், 100 லிட்டர் இ.எம் தயாரிக்கக் கூடாது. அப்படிச் செய்யும்போது, டிரம்மில் உள்ள காலி இடத்தில் வாயுக்கள் உருவாகும்.

இ.எம் கரைசல்
இ.எம் கரைசல்

இவையிரண்டும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தாலோ கிடைப்பது அரிதாக இருந்தாலோ, வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம். இதில், ஒரு லிட்டர் இ.எம் தாய் திரவத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கரைசலை நன்கு கலக்கி, வெளிக்காற்று உள்ளே போகாமல் இருக்குமாறு, மூடிவைக்க வேண்டும். இந்த டிரம்மீது நேரடியாக வெயில்படக் கூடாது. மாட்டுக்கொட்டகை, திண்ணை போன்ற நிழலான இடங்களில் வைத்துக்கொள்ளலாம். தினமும் மூடியைத் திறந்து, உடனே மூடிவிட வேண்டும். கலக்கத் தேவையில்லை. ஏழு நாள்கள் இப்படிச் செய்தால் போதும். எட்டாவது நாள் பயன்பாட்டுக்குத் தயாராகிவிடும். நாம் தயாரித்துள்ள செறிவூட்டப்பட்ட இ.எம், பயன்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதைச் சில அறிகுறிகள் மூலமாக அறிந்துகொள்ளலாம். எட்டாவது நாளில் டிரம்மில் உள்ள செறிவூட்டப்பட்ட கரைசலிலிருந்து நல்ல மணம் வரும். அப்படி வந்தால் அது பயன்பாட்டுக்கு ஏற்றது. மாறாக, துர்நாற்றம் வீசினால், அதைப் பயன்படுத்தக் கூடாது. அதிகபட்சம் 90 நாள்கள் வரை இருப்பு வைக்கலாம்.

முனைவர் அ.உதயகுமார்.
முனைவர் அ.உதயகுமார்.

இ.எம் தாய் திரவம் லிட்டர் ரூ.400 முதல் ரூ.600 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தமிழ்நாட்டில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகளுக்கு விற்பனை செய்ய முன்வரவேண்டும். தற்போது, இ.எம் மூலம் தனியார் நிறுவனங்கள்தான் கொள்ளை லாபம் பெற்றுவருகின்றன. இ.எம் திரவம் தேவைப்படுபவர்களும் அதை வாங்கி விற்பனை செய்ய விரும்பும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் இந்த எண்ணில் தொடர்புகொள்ளவும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94425 42915