Published:Updated:

வேரோடு கருகும் சின்ன வெங்காயம்... தீர்வு என்ன?

கருகிய வெங்காயத்தைக் காட்டும் விவசாயி பிச்சை
பிரீமியம் ஸ்டோரி
கருகிய வெங்காயத்தைக் காட்டும் விவசாயி பிச்சை

பிரச்னை

வேரோடு கருகும் சின்ன வெங்காயம்... தீர்வு என்ன?

பிரச்னை

Published:Updated:
கருகிய வெங்காயத்தைக் காட்டும் விவசாயி பிச்சை
பிரீமியம் ஸ்டோரி
கருகிய வெங்காயத்தைக் காட்டும் விவசாயி பிச்சை

ச்சத்தில் இருக்கிறது வெங்காய விலை. ஆனால், அதிக விலை கிடைக்கும் காலத்தில், வெங்காயத்தை நோய்க்குப் பறிகொடுத்துவிட்டுத் தவித்துவருகிறார்கள் தமிழக விவசாயிகள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் சுமார் 160-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திரும்பும் திசையெங்கும் வெங்காய வயல்களாகக் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் திருகல்நோய் தாக்கத்தால் வெங்காயம் அழுகி, தாள்கள் கருகி உதிர்ந்து வருகின்றன. இதனால் செய்வதறியாமல் தவிக்கும் விவசாயிகள், பயிர்களை வயலோடு உழுதுவிடும் நிலையில் இருக்கிறார்கள்.

வெங்காய வயலை உழுதுவிடும் பணி
வெங்காய வயலை உழுதுவிடும் பணி

அந்தப் பகுதியிலுள்ள வெங்காய விவசாயிகளின் நிலை கண்ணீரை வரவழைக்கிறது. சோகத்தின் உச்சத்திலிருந்த நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த வெங்காய விவசாயி பிச்சையிடம் பேசினோம். “20 வருஷமா வெங்காய விவசாயம் செஞ்சுட்டு வர்றோம். ஆனா, இப்படியொரு சீக்குத் தாக்கி நான் பார்த்ததில்லை. அஞ்சு ஏக்கர்ல சின்ன வெங்காயம் நட்டிருந்தோம். மூணு வருஷத்துக்குப் பிறகு கொஞ்சம் மழை கூடுதலா பெஞ்சது. பயிரும் செழிப்பாத்தான் இருந்துச்சு. `நல்ல மகசூல் கிடைக்கும்’னு நம்பிக்கையோடு இருந்தோம். காய் காய்ச்சு அறுவடை செய்யப்போற நேரத்துல இலைகள் நிறம் மாறிக் கருகிடுது. வேர் மட்டும்தான் இருக்குது. வெங்காயம் காய்க்கவே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆரம்பத்துல அங்கங்க ஒரு சில செடிகள்லதான் நோய்த்தாக்குதல் தெரிஞ்சது. அதைச் சரிசெய்யறதுக்குள்ள மொத்தப் பயிரும் அழுகிடுச்சு. மொத்த வெங்காய விளைச்சலும் நாசமாகிடுச்சு. அஞ்சு ஏக்கர்ல இருந்து மூணு மூட்டைகூட விளையலை. பாழாப்போன கோழிக்கால்நோய் எல்லாத்தையும் நாசமாக்கிடுச்சு” என்று தலையில் அடித்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பேசிய மற்றொரு விவசாயி குமார், “எங்க நிலத்துல வழக்கமா 100 மூட்டை வெங்காயம் அறுவடை செய்வோம். இப்போ அஞ்சு மூட்டைக்குக் கூட வழியில்லை. இந்த நோயைச் சரிசெய்ய எல்லா மருந்தும் அடிச்சுப் பார்த்தாச்சு. ஆனாலும் கட்டுப்படலை. விதை வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய். ஏக்கருக்கு 600 கிலோ விதை வெங்காயம் தேவைப்படுது. உழவு, களையெடுப்பு, ஆள்கூலி, மருந்து தெளிப்புனு எல்லாச் செலவும் சேர்த்து ஒரு ஏக்கர்ல சின்ன வெங்காயம் நடவு செய்யக் குறைஞ்சபட்சம் 50,000 ரூபாய் செலவாகுது.

கருகிய வெங்காயத்தைக் காட்டும் விவசாயி பிச்சை
கருகிய வெங்காயத்தைக் காட்டும் விவசாயி பிச்சை

விளைச்சல் இருந்து, விலையும் இருந்தால் 30,000 ரூபாய் கையில கிடைக்கும். பல நேரங்கள்ல நல்ல விளைச்சல் இருந்தும் விலை இல்லாம, பல தடவை வெங்காயத்தைத் தரையில கொட்டியிருக்கோம்.

இப்போ அதிக விலைக்கு விக்குது. ஆனா, எங்ககிட்ட வெங்காயம் இல்லை. சுற்றுவட்டாரத்துல பல ஊர்கள்ல இதுதான் நிலைமை. இம்புட்டு பாதிப்பு ஏற்பட்டும், ஒரு அதிகாரிகூட வந்து பார்க்கலை’’ என்று ஆதங்கப்பட்டார்.

சிறுவயலூர் உழவர் மன்ற நிர்வாகி சக்திவேல், “இந்த நோய், தாய் வெங்காயத்தையும், விளைச்சலையும் பாதிக்குது. ஏக்கருக்கு 50,000 ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சும் முதலுக்கே மோசமாகிடுச்சு. எங்க ஊர்ல மட்டும் 300 ஏக்கர் பாதிக்கப்பட்டிருக்குது. அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்யணும். இந்தப் பகுதிகளுக்கு வேளாண் அதிகாரிகளை அனுப்பி ஆய்வு நடத்தி, இந்தக் கொலைகார நோயைக் கட்டுப்படுத்துற வேலையை உடனடியாகச் செய்யணும்’’ என்றார் வேதனையுடன்.

அரவிந்த், சக்திவேல்
அரவிந்த், சக்திவேல்

நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த், “பெரம்பலூர் மாவட்டத்துல மட்டும் சுமார் 3,500 ஹெக்டேர்ல சின்ன வெங்காயம் சாகுபடி நடக்குது. ரெண்டு ஏக்கருக்கு ரெண்டு மூட்டைகூட விளையலை. வேற வழியில்லாம நோய்த் தாக்கின பயிர்களை நிலத்தோட சேர்த்து உழுதுட்டு இருக்காங்க. வெங்காய விவசாயிகளான நாங்களே வீட்டுத்தேவைக்குப் பணம்கொடுத்து வாங்குற நிலைமைக்கு ஆளாகிட்டோம். நடவுக்காக வாங்கின கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு வந்துட்டோம்’’ என்றார் சோகமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பிரச்னை குறித்து, ஆலத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆனந்தனிடம் பேசினோம். “வைகாசி மற்றும் மாசிப் பட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிட்டால் இந்தத் திருகல்நோய் தாக்குதல் இருக்காது. ஆவணி மற்றும் புரட்டாசிப் பட்டத்துப் பயிர்களே பாதிக்கப்படுகின்றன. அதிக மழைப்பொழிவு, தட்பவெப்பநிலை காரணங்களால் நோய் ஏற்படுகிறது. ‘கொலிட்டோடிரைக்கம் கிளியோஸ் போரியாய்டஸ்’ (Colletotrichum gloeosporioides) எனும் ஒரு வகைப் பூஞ்சையின் மூலம் நோய் ஏற்படுகிறது. இது மண் மூலம் பரவக்கூடிய பூஞ்சை. குறிப்பாக, நோய்த் தாக்குதலுக்கு உள்ளான செடிக்குப் பாய்ச்சும் தண்ணீர், காற்று ஆகியவை மூலம் பரவுகிறது. அதிலும், 30 முதல் 40 நாள் வயதுடைய பயிர்களை இந்த நோய் தாக்கும். நெருக்கமாக நடவு செய்துள்ள வயல்களில் இந்த நோய்த் தாக்குதல் அதிகமாக இருக்கும். திருகல்நோய்த் தாக்குதலுக்குள்ளான செடிகளின் தாள்கள் நிறம் மாறிச் சுருங்கி, இறுதியாகத் தாள்கள் உதிர்ந்துவிடும். காய் பிடிக்கும் சூழலில் காயின் கழுத்துப் பகுதி நீண்டும், அடிப்பாகம் சிறுத்தும் காணப்படும். இதனால் நோய் முற்றிய நிலையில் பயிர் மடிந்துவிடும்.

ஆவணி மற்றும் புரட்டாசிப் பட்டத்துப் பயிர்களே பாதிக்கப்படுகின்றன. வீட்டுத்தேவைக்குப் பணம்கொடுத்து வாங்குற நிலைக்கு ஆளாகிட்டோம்.

இந்த நோயைத் தடுக்க, விதை வெங்காயத்தைச் சூரிய வெளிச்சத்தில் காயவைத்து, விதைநேர்த்தி செய்த பிறகே பயிரிட வேண்டும். மேலும், நோய்த் தாக்குதலுக்குள்ளான செடிகளைப் பிடுங்கிய பிறகே மருந்து தெளிக்க வேண்டும். வயலைத் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.

பெரும்பாலான விவசாயிகள் இதை முறையாகச் செய்வதில்லை. இந்த நோயைக் கட்டுப்படுத்த வேளாண்துறையுடன் இணைந்து செயல்பட விவசாயிகள் முன்வர வேண்டும். இந்த நோய் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்.இயற்கையை மீறி ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனாலும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்”என்றார்.

சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா போதும்!

யற்கை முறையில் திருகல் நோயைக் கட்டுப்படுத்தும் விதம் குறித்து, குன்றத்தூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரனிடம் கேட்டோம். ‘‘இதற்கு இயற்கை மட்டும்தான் தீர்வு. நடவுக்கு முன்பாக மண்ணைச் சீர்படுத்தி, ஒரு ஏக்கருக்கு தலா நாலு கிலோ சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி இட வேண்டும்.

மண்ணுக்குள் இருக்கும் வேரழுகல் ஏற்படுத்தும் கிருமிகளை இவை தடுக்கும். நன்மை செய்யும் கிருமிகளை அதிகம் உருவாக்கும். மண்ணுக்குக் கீழே விளையும் எந்தப் பொருளாக இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். நடவுக்கு முன்பே இதைச் செய்தால் வேரழுகல் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் மழைக்காலத்தில் வெங்காயச் சாகுபடி செய்பவர்கள் மேட்டுப்பாங்கான, வடிகால் வசதியுள்ள நிலங்களில் மட்டும்தான் சாகுபடி செய்ய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism