Published:Updated:

தென்னையை பாதிக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்... இயற்கை முறையில் தடுப்பது எப்படி?

ரூகோஸ சுருள் வெள்ளை ஈக்கள்

நன்மை செய்யும் பூச்சிகளை பூச்சிக்கொல்லி மருந்துகள் அழித்துவிடுவதனால்,முற்றிலுமாக பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்"

தென்னையை பாதிக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்... இயற்கை முறையில் தடுப்பது எப்படி?

நன்மை செய்யும் பூச்சிகளை பூச்சிக்கொல்லி மருந்துகள் அழித்துவிடுவதனால்,முற்றிலுமாக பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்"

Published:Updated:
ரூகோஸ சுருள் வெள்ளை ஈக்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களை தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை புதுக்கோட்டை மாவட்ட இணை இயக்குநர் ராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

வெள்ளை ஈ
வெள்ளை ஈ

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் கூறும்போது, "வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிறமுள்ள நீள்வட்ட முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளில் ஓலைகளின் அடிப்பகுதியில் இடும். மெழுகுப் பூச்சுடன் காணப்படும் முட்டைகளிலிருந்து வெளிப்படும் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த ஈக்கள் ஓலைகளின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சும்.

இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட ஓலைகளிலிருந்து படியும். அதன்மேல், கேப்னோடியம் என்ற கரும்பூசணம் படர்கிறது. இதனால், ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. இப்பூச்சிகள் தென்னை மட்டுமில்லாமல், வாழை, பாக்கு, சப்போட்டா ஆகிய பயிர்களையும் தாக்குகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டவுடன், மஞ்சள் நிறமுடைய பாலீத்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை 5 அடிக்கு ஒன்றரை அடி என்ற அளவில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கவர்ந்தழிக்கலாம்.

விளக்குப் பொறிகள் ஏக்கருக்கு 2 வீதம் 6 முதல் 11 மணி வரையிலும் ஒளிரசெய்ய வேண்டும். பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, ஓலைகளின் அடிப்புறத்தில் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்துக் கட்டுப்படுத்தலாம். கிரைசோபெர்லா என்னும் இரை விழுங்குகிகளை ஏக்கருக்கு 400 எண்கள் விட வேண்டும். ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வழங்கப்படும், என்கார்சியா என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 என்ற அளவில் வெளியிட வேண்டும்.

தென்னை
தென்னை

கரும்பூசணத்தைக் கட்டுப்படுத்திட ஒரு லிட்டர் நீருடன் 25 கிராம் மைதா பசையினை கலந்து ஓலையின் மீது தெளிக்க வேண்டும். அவை வெயில் பட்டு காயும் பொழுது கரும்பூசணத்துடன் உதிர்ந்துவிடும். வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாகும் பொழுது பொறிவண்டுகள் போன்ற இரைவிழுங்குகிகள் இயற்கையாக உருவாகும்.

தென்னை மரத்தினைச் சுற்றி தட்டைப் பயறு போன்ற பயறு வகைகளை ஊடுபயிராகவும், மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட சாமந்தி, சூரியகாந்தி போன்றவற்றை வரப்புப் பயிராகவும் பயிரிட்டு நன்மை செய்யும் பூச்சிகளை கவரலாம். நன்மை செய்யும் பூச்சிகளை பூச்சிக்கொல்லி மருந்துகள் அழித்துவிடுவதனால், முற்றிலுமாக பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவற்றை கடைபிடித்தால் இந்த பிரச்னையிலிருந்து தென்னை மரங்களை காப்பாற்றலாம்" என்று பரிந்துரை வழங்கினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism