'நிலமிருக்கும் இடத்தில் நீர் இல்லை; நீரிருக்கும் இடத்தில் நிலமில்லை’ என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் புலம்பலாக இருக்கிறது. இந்நிலையில், ஆராய்ச்சி மற்றும் புதுப்புது யுக்திகளின் மூலமாக இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும் என்பது குறித்த ஆராய்ச்சிகளும் அதன் முடிவுகளும் அவ்வப்போது வந்ததவண்ணம் உள்ளன. அவற்றையெல்லாம் பயன்படுத்தி வெற்றிகாண்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். அந்த வகையில், ‘அக்வாபோனிக்ஸ்’ என்கிற பெயரில் ஒருங்கிணைந்த நவீன விவசாய முறையைக் கையில் எடுத்து அசத்தி வருகிறார் ஜெகன் வின்சென்ட்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்கா, விண்ணமங்கலம் கிராமத்தில்தான் இருக்கிறது, ஜெகன் வின்சென்ட்டின் ஒருங்கிணைந்த பண்ணை. அங்கே நேரடியாகச் சென்று அவரை சந்தித்துப் பேசினோம்.

“2003-ம் வருஷம் அமெரிக்காவுல மென்பொருள் துறையில வேலை செய்துகிட்டிருந்தேன். அமெரிக்க விவசாயிகள் கொஞ்ச நிலம் இருந்தாலும், அதுல அதிகமான பயிர்கள், மீன் வளர்ப்புனு தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி விவசாயம் செய்துகிட்டிருந்தாங்க. எனக்கு அது ஆச்சர்யத்தையும், தொழில்நுட்பத்தைக் கத்துக்கணும் னுங்கற ஆர்வத்தையும் கொடுத்துச்சு. குறிப்பிட்டு சொல்லணும்னா வீட்டுக்குப் பின்னால இருந்த குறைவான நிலங்கள்லயும் அவங்க விவசாயம் செஞ்சதைப் பார்க்க முடிஞ்சது. அங்க வருஷத்துக்கு 5, 6 பருவங்கள் மாறிக்கிட்டே இருக்கும். சில நேரங்கள்ல பயிர் கைகொடுக் காதப்போ மீன் வளர்ப்பு கைகொடுக்கும். மீன் வருமானம் இல்லாதப்போ பயிர்கள் கைகொடுக்கும்னு ஒரு புதுவிதமான தொழில்நுட்பத்தைப் பார்க்க முடிஞ்சது. அதை ஏன் நாம இந்தியாவுல பண்ணக் கூடாதுனு தோணுச்சு. இதுக்கான தேடல்ல இறங்கி கத்துக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துக்கு மேல நம்ம வேலையோட சேர்த்து விவசாயமும் செய்யணும்னு முடிவு பண்ணி இந்தியா வந்துட்டேன்.

அப்புறமா இந்த நிலத்தை வாங்குனேன். மொத்தமா 1 ஏக்கர் 25 சென்ட். வாங்கும்போதே ஹைட்ரோபோனிக்ஸ், அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பங் களைத்தான் பயன்படுத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். எடுத்தவுடனே அகலக்கால் வெச்சிடக் கூடாதுங்குறதுல தெளிவா இருந்தேன். அதனால 1 லட்சம் லிட்டர் கொள்ளவுள்ள மீன் தொட்டி அமைச்சேன். அதுக்கு மேல 500 முதல் 1,000 காய்கறிகள், பூக்கள்னு செடிகளை பிளாஸ்டிக் பக்கெட்கள்ல வெச்சு வளர்த்துப் பார்த்தோம். நல்ல வருமானம் கிடைச்சது. பிறகு, படிப்படியா மீன் தொட்டிகளையும் அதிகப்படுத்தி, செடிகளை அதிகரிச்சோம். இப்போ 70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியா விரிவாகியிருக்கு. இந்தப் பண்ணையை ஆரம்பிச்சு, கடந்த 5 வருஷமா வெற்றிகரமா நடத்திட்டு இருக்கேன்” என்று முன்னுரை கொடுத்தவர் பண்ணையைச் சுற்றிக்காட்டினார்.

தொட்டிகளின் மேல் பகுதியில் விவசாயமும், தொட்டியில் மீன் வளர்ப்பும் நம்மைப் பரவசப்படுத்தின.

ஓரளவு தண்ணீர் வசதியுள்ள இடங்களில் அக்வாபோனிக்ஸ் முறையைப் பின்பற்றலாம். இந்தத் தொழில்நுட்பத்தில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்காது.

“இந்தப் பண்ணையில எங்க பார்த்தாலும் தண்ணீரா இருக்கும். ஆனா, சுற்றுவட்டாரப் பகுதிகள்ல தண்ணீர் பிரச்னை இருக்கு. இதுக்காகத்தான் தண்ணீரை மறுசுழற்சி செஞ்சு அதைச் செடிகளுக்குப் பயன்படுத்துறோம். இதை சிமென்ட் தொட்டிகள்ல மட்டும்தான் செய்யணும்ங்குற அவசியம் இல்ல. சாதாரண பி.வி.சி டேங்க்லகூடப் பண்ணலாம். நிரந்தரமான வாழ்வாதாரமா நான் முடிவு பண்ணிட்டதால சிமென்ட்ல தொட்டி அமைச்சேன். தொட்டி பலமா அமைச்சிருக்கிறதால தண்ணீர் கசிவுகள் எங்கேயும் இருக்காது. மீன் தொட்டிகளுக்கும் செடிகளுக்கும் சேர்த்து ஒரே செலவுல நிழல்வலை அமைச்சிருக்கேன். இதனால அதிகமான வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியுது. மொத்தமா 7,000 சதுர அடி கொண்ட தொட்டியில் மீன்களை வளர்க்கிறோம். முழுக்கவே குழி எடுத்துதான் கட்டப் பட்டிருக்கிறது. இதை 14 பிரிவுகளா பிரிச்சு மீன்கள வளர்க்கிறோம். அதிகமான பிரிவுகளா பிரிக்கும்போது மீன்களைப் பிடிக்க எளிமையாவும், வேலை ஆட்கள் செலவு குறைவாகவும் இருக்கும்.

7,000 சதுர அடி... 5,000 செடிகள்

கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியானு 9 வகையான மீன்கள் வளர்த்துகிட்டு இருக்கேன். 7,000 சதுர அடி கொண்ட தொட்டியின் மேல் சுமார் 5,000 பிளாஸ்டிக் பக்கெட்டுகள் அமைச்சு, தக்காளி, கத்திரி, மிளகாய்னு காய்கறிகளை வளர்க்குறோம். இது எல்லாமே அதிக மகசூல் கொடுக்கக்கூடிய வீரிய ரகச் செடிகள்தான். பொதுவா ஒரு ஏக்கர்ல தக்காளி பயிர் செய்யணும்னா 5,000 செடியில இருந்து 6,000 செடிகள் வைப்பாங்க. ஒரு ஏக்கர்ங்கறது, கிட்டத்தட்ட 44 ஆயிரம் சதுர அடி. இங்க 7,000 சதுர அடியிலயே 5,000 செடிகளை வளர்த்திருக்கோம். தரையில கிடைக்கிற மகசூலைவிட இந்த பக்கெட்டுல கிடைக்கிற மகசூல் கொஞ்சம் அதிகம். பக்கெட்கள்ல வளர்ற செடிகளுக்கு நேரடியா இயற்கை உரங்களைக் கொடுக்கிறோம். அதேபோல மீன் தண்ணீரைச் செடிகளுக்குக் கொடுக்குறதால செடிகள் எப்பவும் ஊட்டமாவே இருக்கு. ஒரு செடிக்கு 15 கிலோ வரைக்கும் தக்காளி சாதாரணமா கிடைக்குது. இந்த மாதிரி செடிகளை வளர்க்குறப்போ பூச்சிகளைக் கட்டுப்படுத்துறது, பராமரிக்கிறது ரொம்பச் சுலபம். ஒரு பக்கெட்ல உள்ள செடியில ஏதாவது பூச்சி தாக்கிடுச்சு, அதை அழிக்கணும்னு நினைச்சா, உடனடியா அந்த பக்கெட்ட எடுத்து அப்புறப்படுத்திடுவேன்.

இதுதவிர 50 கடக்நாத் கோழிகள், அசோலா, ஹைட்ரோபோனிக்ஸ் பயிர்கள் வளர்ப்பு, முயல் வளர்ப்பு எல்லாமும் ஆரம்பகட்டத்துல இருக்கு. 1.25 ஏக்கர்ல மொத்தமா 7,000 செடிகளைப் பயிர் செய்திருக்கேன். பகலில் சோலார், இரவில் மின்சார இணைப்பிலும் செயல்படுற மாதிரி 3.5 ஹெச்.பி மோட்டார் அமைச்சிருக்கேன். 24 மணிநேரமும் இயங்குற மாதிரியான ஜெனரேட்டரும் இருக்கு. மீன் வளர்ப்புக்கு மின் இணைப்புங்குறது ரொம்பவே முக்கியமானது. மீன் தொட்டிகள்ல இருக்குற தண்ணீரைப் பக்கத்துல சின்னதா குட்டை மாதிரி அமைச்சு, அதுல மறுசுழற்சி செஞ்சு மறுபடியும் தொட்டிக்கே கொண்டு வந்துருவேன். மீனுக்கும் எப்பவுமே சுத்தமான தண்ணீர் கிடைச்சுகிட்டே இருக்கும்.

இங்க முக்கியமான விஷயம் இந்தப் பண்ணைக்குள்ள எந்தவிதமான ரசாயனங்கள் வரக் கூடாதுங்குறதுல உறுதியா இருக்கேன். மாசம் 3 டன் காய்கறிகளை உற்பத்தி செய்றேன். இதைப்போலச் செங்குத்து தோட்டங்கள்னு தொழில்நுட்பங்கள் அதிகமா இருக்கு. இன்னைக்கு இருக்குற விவசாயத்துக்குத் தொழில்நுட்பங்கள் தேவைனு நினைக்கிறேன். தென்னிந்தியாவுல இந்த நன்னீர் மீன்களை வளர்க்குறதுக்கு நிறைய பேர் ஆர்வம் காட்டுறாங்க. இதைச் செய்றதுக்குச் சில விஷயங்களை நாம பின்பற்றணும்’’ என்றவர் அந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இதைக் கடற்கரையோர மாவட்டங்கள்ல செய்ய முடியாது. அதே மாதிரி அதிகமான வறட்சியுள்ள இடங்களில் இதைச் செய்ய முடியாது. ஓரளவு தண்ணீர் வசதியுள்ள இடங்களில் அக்வாபோனிக்ஸ் முறையைப் பின்பற்றலாம். இந்தத் தொழில்நுட்பத்தில் தண்ணீர் தேவை அதிகமாக இருக்காது. இந்தப் பண்ணையில வருஷத்துக்கு 30 டன் மீன்கள் கிடைக்குது. முக்கியமான விஷயம் போக்குவரத்து வசதியுள்ள நகரங்களுக்குப் பக்கத்துல இதை அமைச்சுகிட்டா நல்ல வருமானம் கிடைக்கும். மீன் ஒரு கிலோ 180 ரூபாய்க்குக் கொடுக்குறோம். 30 டன்னுக்கு 54 லட்சம் ரூபாய் வருமானமா கிடைக்கும். அதேபோலக் காய்கறிகள்ல வர்ற வருமானம் தனி’’ என்றவர் நிறைவாக,

‘‘இதுல எடுத்தவுடனே வருமானம் பார்த்திட முடியாது. இது எனக்குக் கிடைக்குறதுக்கு 5 வருஷம் ஆச்சு. இதைப் பெரிய அளவுல செய்ய வேண்டாம். முதல்ல சின்ன அளவுல செஞ்சு, நல்லா இருந்தா விரிவுபடுத்தலாம். நான் இதற்குச் செய்த முதலீடுகள் ரொம்பவே அதிகம். நிலம் வாங்கியது இல்லாம, 35 லட்சம் ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். இப்ப வருஷா வருஷம் அதைவிட அதிக வருமானம் எடுத்துக்கிட்டு இருக்கேன். 7 ஏக்கர் நிலத்துல எவ்ளோ பயிர்களை உற்பத்தி செய்ய முடியுமோ அதை இந்த ஒரு ஏக்கர்ல பண்ண முடியுமானு முயற்சி செய்துகிட்டிருக்கேன். ஆர்வம் இருக்குறவங்க முழு மனசோட அக்வா போனிக்ஸ்ல இறங்கலாம். இது சம்பந்தமான பயிற்சிகளையும் நான் இலவசமா கொடுத்து கிட்டு வர்றேன்” என்றபடி விடைகொடுத்தார், ஜெகன் வின்சென்ட்.

தொடர்புக்கு,
ஜெகன் வின்சென்ட்,
செல்போன்: 98405 07124