Published:Updated:

பாரம்பர்ய நெல் சாகுபடி: அதிக தண்ணீரைத் தேக்கினால் களைகள் கட்டுப்படுமா?

அதுவும் நிலத்தை ஈரப்படுத்தும் அளவில் இருந்தால் போதும். கேழ்வரகுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ, அதைபோலத்தான் நெல்லுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்

பாரம்பர்ய நெல் சாகுபடி முறைகள் குறித்து நம்மிடம் விளக்கும் சையது கனி கான், "உழுவதற்கு முன்னர் உளுந்து, பச்சைப்பயறு இவற்றில் ஏதாவது ஒன்றை விதைத்து, வளர்ந்த பிறகு மடக்கி உழுதுவிட வேண்டும். மட்கிய மாட்டு எருவை ஏக்கருக்கு ஒரு டன் தூவிவிட வேண்டும். 15 நாள்களுக்கு ஒரு முறை 10 கிலோ, 20 கிலோ என்ற அளவில் புதிய சாணத்தைப் பாசனநீர் வழியாகக் கரைத்துவிட வேண்டும்.

பாரம்பர்ய ரகங்கள் என்பதால் பூச்சித்தாக்குதல் 90 சதவிகிதம் இருக்காது. அப்படி இருந்தால், ஒடித்தால் பால் வரும் தாவர வகைகளில் இரண்டு வகை இலைகள், கசப்பு தன்மையுள்ள மூன்று வகை இலைகள் ஆகியவற்றை சம அளவில் எடுத்து, தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இந்த ஐந்திலைப் கரைசலில் ஒரு லிட்டர் எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். உடனடியாகப் பூச்சிவிரட்டி வேண்டுமென்றால், இலை தழைகளைத் துண்டு துண்டாக வெட்டி, தண்ணீரில் போட்டுச் சூடுபடுத்த வேண்டும். வடியும் சாற்றை ஆற வைத்து மாட்டுச் சிறுநீரில் கலந்து தெளிக்கலாம்" என்கிறார்.

பாரம்பர்ய நெல் சாகுபடி: அதிக தண்ணீரைத் தேக்கினால் களைகள் கட்டுப்படுமா?

மேலும், "பெரும்பாலான விவசாயிகள், 'வயலில் தண்ணீரைத் தேக்கினால் களைகள் கட்டுப்படும்' என்று நினைக்கிறார்கள். அது உண்மைதான். அதே நேரம், நெற்பயிரின் வேர்கள் நிலத்துக்குள் ஊன்றுவது தடுக்கப்படும் என்பதை மறந்துவிடுகிறார்கள். களைகள் அதிகமாக வளரும் வயல்களில் மூன்று முறை உழவு ஓட்டினால், எளிதாகக் களைகளைக் கட்டுபடுத்திவிட முடியும். நெல்லுக்கு வாரத்துக்கு ஒரு தண்ணீர் போதுமானது.

அதுவும் நிலத்தை ஈரப்படுத்தும் அளவில் இருந்தால் போதும். கேழ்வரகுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ, அதைபோலத்தான் நெல்லுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். கதிரில் பால் ஏறும் சமயத்தில் மட்டும் நிலத்தில் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் சையது கனி கான். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/31KVfjx

சரி, யார் இந்த சையது கனி கான்?

"இந்த ரகத்துக்குப் பெயர் 'ராஜமுடி.' மைசூர் மகாராஜா சாப்பிட்ட அரிசி ரகம். இது, பர்மா பிளாக். புற்றுநோய் எதிர்ப்பாற்றல்கொண்ட ரகம். இந்தியாவின் சிறிய நெல் ரகம் 'சுகந்தினி.' உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பிளாக் ஜாஸ்மின் தாய்லாந்து ரகம். 'காலா நோனி', அஸ்ஸாம் மாநில வாசனை ரகம். 'சேலம் சென்னா' சாப்பிடுவதற்கு ஏற்ற ரகம்..." இப்படி 1,300 நெல் ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்து, ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கி, ஒரு நெல் அருங்காட்சியகத்துக்குள் சென்றுவந்த உணர்வை ஏற்படுத்துகிறார் சையது கனி கான்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், தேசிய அளவில் நடைபெறும் இயற்கை விவசாயக் கண்காட்சிகள், பாரம்பர்ய நெல், விதைத் திருவிழாக்களில் விதைகளைக் காட்சிக்கு வைப்பதும், விவசாயிகளுக்கு விதைகளைக் கொடுத்துப் பரவலாக்குவதுமாகச் செயல்பட்டு வருகிறார்.

பாரம்பர்ய நெல் சாகுபடி: அதிக தண்ணீரைத் தேக்கினால் களைகள் கட்டுப்படுமா?

மாநில விருதுகள், தேசிய விருதுகள் பெற்றிருக்கும் இவர் பண்ணை, பெங்களூருவிலிருந்து 130 கிலோமீட்டர், மாண்டியாவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிரகவலு கிராமத்தில் உள்ளது.

சுற்றிலும் நெல், கரும்பு வயல்கள், சவுக்குத் தோட்டங்கள், ரைஸ் மில்களுக்கு மாட்டு வண்டிகளில் பயணம் போகும் நெல் மூட்டைகள் என்று அழகும் பரபரப்புமாக இருந்தது ஊர்.

நெல் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சியபடியே நம்மிடம் பகிர்ந்தவற்றை பசுமை விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > பாராட்டுகளைக் குவிக்கும் பாரம்பர்ய நெல் சாகுபடி! - ஒரு ஏக்கரில் 1,300 ரகங்கள்..! https://www.vikatan.com/news/agriculture/traditional-paddy-cultivation-1300-types-of-crops-in-one-acre

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு