சென்னை ஐ.ஐ.டி-யில் பேராசிரியராகப் பணிபுரியும் தலைப்பில் பிரதீப் மற்றும் அவரின் குழு, தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில், புதிய கண்டுபிடிப்பைக் கண்டறிந்துள்ளனர். குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவில் அகற்றும் புதிய தொழில்நுட்பத்தையும், மலிவு விலையில் நானோ அளவில் பொருள்களை உருவாக்கியதற்காகவும், இவருக்கும் இவரின் குழுவுக்கும் `இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் விருது' வழங்கப்பட உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தண்ணீர் துறையில் சுற்றுசூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததற்காக, இவ்விருதுக்கு, தலைப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி, நியூயார்க் நகரம், ஐ.நா தலைமையகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், இவர்களுக்கு பரிசுத்தொகையாக 2 கோடி ரூபாயும், தங்கப்பதக்கம், கோப்பை, சான்றிதழும் வழங்கப்பட உள்ளன. விருதுக்கு தேர்வாகியுள்ள குழுவினரை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.