Published:Updated:

தொடர் மழை : தூர்வாரப்படாத வடிகால்கள்.. மழை நீரில் மூழ்கிய பயிர்கள் - வேதனையில் விவசாயிகள்..!

மழை நீரில் மூழ்கிய பயிரை காட்டும் விவசாயி ( ம.அரவிந்த் )

தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் இன்னும் பயிர்காப்பீடு செய்யவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பயிர்காப்பீடு செய்வதற்கான தேதியை நீடித்து தர வேண்டும் - விவசாயிகள்

தொடர் மழை : தூர்வாரப்படாத வடிகால்கள்.. மழை நீரில் மூழ்கிய பயிர்கள் - வேதனையில் விவசாயிகள்..!

தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் இன்னும் பயிர்காப்பீடு செய்யவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பயிர்காப்பீடு செய்வதற்கான தேதியை நீடித்து தர வேண்டும் - விவசாயிகள்

Published:Updated:
மழை நீரில் மூழ்கிய பயிரை காட்டும் விவசாயி ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த தொடர் மழையில் சுமார் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. வடிகால்கள் முறையாக தூர்வாரப்படதாதே வயல்களில் மழை நீர் தேங்கி நிற்பதற்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்
மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் பல கிராமங்களை மழை நீர் சூழ்ந்தது. பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினார்கள். இது மாதிரி மழை பெய்து எங்கள் வாழ்நாளில் பார்க்கவில்லை என முதியோர்கள் பலர் கூறி வருகின்றனர்.

நெற்பயிர்கள், வாழை உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கின. இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதில் திருவையாறு அருகே புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லுார், கும்பகோணம், திருவிடைமருதுார் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேலான நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிரகள் மழை நீரில் மூழ்கின.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய வாழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கிய வாழை

இது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம், “புனல்வாசல் கிராமத்தில் விவசாயிகள் சம்பா நடவு மேற்கொண்டு 15 நாள்கள் ஆகிறது. இந்த நிலையில் பெய்த தொடர் மழையில் பயிர்கள் நீரில் மூழ்கின. வயல் பகுதிகளில் உள்ள வடிகால்கள் முறையாக தூர்வாரவில்லை. மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் முறையான நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் தற்போது பெய்த மழை நீர் வடிகாலில் ஓடுவதற்கு வழியில்லாததால் வயல்களில் தேங்கி நின்றது.

இதையடுத்து பயிர்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகளே ஒன்று கூடி சொந்த செலவில் ஜே.சி.பி இயந்திரம் வர வழைத்து வடிகாலை சீரமைத்து அதன் வழியாக மழை நீர் ஓட வைப்பதற்கான பணியில் ஈடுப்பட்டனர். வயல் ஓரத்தில் வரப்பை வெட்டி விட்டும் தண்ணீரை வெளியேற்றினர்.

விவசாயி
விவசாயி

இதே போல் கும்பகோணம் தாலுக்கா அத்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த கிராமங்களை சுற்றியுள்ள கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. மேலும் வடிகால் வசதியே இல்லை. அதனாலேயே மழை நீர் ஓட வழியில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ 25,000 செலவு செய்திருக்கிறோம். தொடர் மழை நீரில் பயிர்கள் மூழ்கியிருந்தால் அழுக கூடிய நிலை ஏற்ப்பட்டு நஷ்டத்தை சந்திக்கின்ற நிலை உருவாகும்.

எனவே, அரசு தனி கவனம் செலுத்தி கிராமப்புறங்களில் உள்ள கிளை வாய்க்கால்கள் தூர்வாருவதுடன், வடிகால் வசதியும் செய்து தருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 15 ஆம் தேதியே விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கான கடைசி நாள். தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் பயிர்காப்பீடு செய்யவில்லை. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பயிர்காப்பீடு செய்வதற்கான தேதியை நீடித்துதர வேண்டும்" என்றனர்.