Published:Updated:

அதிகரிக்கும் மண் சுரண்டல்... கண்டுகொள்ளாத அரசு... ஆபத்தில் குளம், குட்டை, ஏரிகள்!

மண் எடுக்கும் பணி

அளவுக்கு மீறிய ஆசையால், மண் வளம் சுரண்டப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விலங்குகள் கடுமையாகப் பாதிப்படையும். மலைச்சரிவு ஏற்படும் அபாயமும் உண்டு.

மலையும் மலையைச் சார்ந்த இடங்களையும் ஒருவகையில் கபளீகரம் செய்கிறார்கள் என்றால் வயலும் வயலும் சார்ந்த இடங்களையும் கபளீகரம் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.   

அதிகரிக்கும் மண் சுரண்டல்... கண்டுகொள்ளாத அரசு... ஆபத்தில் குளம், குட்டை, ஏரிகள்!
pixabay

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில், விதிகளை மீறி குளம், குட்டை போன்றவற்றில் மண்ணை எடுப்பதோடு, விவசாய நிலங்களில் உள்ள வண்டல் மண், கிராவல் மண் போன்றவையும் எடுக்கின்றனர். அதோடு  குவாரிகளின் நிலத்தின் அடிமட்டத்தில் இருந்து கற்களையும் தோண்டி எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். 

அதேபோல் திருப்பூர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் 3 ஏக்கர் பரப்பளவேயான அக்கிலம்மார் குட்டை உள்ளது. இந்தக் குட்டையில் 3 மீட்டர் ஆழத்தில் மண் எடுக்க அனுமதி உள்ளது. அதுவும் அங்குள்ள தடுப்பணையில் துார்வாருவதைக் கருத்தில் கொண்டே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இதிலும் அளவுக்கு மீறிய ஆசையால், மண் வளம் சுரண்டப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விலங்குகள் கடுமையாக பாதிப்படையும். மலைச்சரிவு ஏற்படும் அபாயமும் உண்டு.

அதிகரிக்கும் மண் சுரண்டல்... கண்டுகொள்ளாத அரசு... ஆபத்தில் குளம், குட்டை, ஏரிகள்!

தமிழகம் முழுவதும் ஏரி, குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்டவற்றில் வண்டல் மண்ணை எடுப்பதற்கு அனுமதி உள்ளது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மண்ணை எடுத்து விற்கும் போக்கு நிலவி வருகிறது. இதனால் கனிம வளம் குன்றி வருகிறது.

இது குறித்து விவசாயிகளும் பொது மக்களும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. 

கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

கூடிய விரைவில் குளம், குட்டை, ஏரிகள், விவசாய நிலங்களில் உள்ள மண்ணை சட்டத்துக்கு புறம்பாக எடுப்பதைத் தடுக்க சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.