Published:Updated:

பால் விலையை உயர்த்தியும் விவசாயிகளுக்கு பெருநஷ்டமே... எப்படி?

உண்மை நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள 99% பசுமாடுகள் அரசு குறிப்பிடும் அளவுடைய பால் கறப்பதில்லை

cow
cow

பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் ஒரு லிட்டர் மாட்டுப் பாலுக்கு 4 ரூபாயும், எருமைப் பாலுக்கு 6 ரூபாயும் விலை ஏற்றிக் கொடுத்தார். இது பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மையைத் தந்திருக்கிறதா என்று விசாரித்தால், ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்வதற்கு 49.84 ரூபாய் செலவு ஆவதாகவும், பால் விலை 32 ரூபாய்க்கு உயர்த்தப்பட்ட பிறகும் ஒரு லிட்டர் பாலுக்கு 17.84 ரூபாய் நஷ்டம் அடைவதாகவும் கணக்கு கொடுக்கிறார்கள் விவசாயிகள். விரிவாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/2m96vFo

இதுபற்றி, கிருஷ்ணகிரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம கவுண்டர், "நாங்கள் தமிழக அரசுக்குக் கடந்த ஐந்தாண்டுகளாகப் பால் விலையை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கை வைத்துப் போராடி வந்தோம். நீண்டகாலத் தாமதத்திற்குப் பிறகு தற்போது தமிழக முதல்வர் பசு மாட்டுப் பால் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் விலை உயர்த்தியும், எருமை மாட்டுப் பால் ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் விலை உயர்த்தியும் உத்தரவிட்டுள்ளார். இதனால், 28 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லிட்டர் பசுமாட்டுப் பால் 32 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படுகிறது. 35 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லிட்டர் எருமை மாட்டுப் பால் 41 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்படுகிறது.

cow
cow

தமிழ்நாட்டில் பசுமாட்டுப் பால் உற்பத்தியாளர்கள் 99% இருக்கிறார்கள். எருமை மாட்டுப் பால் உற்பத்தியாளர்கள் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கிறார்கள். அதனால், பசுமாட்டுப் பால் கொள்முதலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். தமிழக அரசு கொழுப்புச்சத்து 4.5, இதர சத்து 8.5 அளவுடைய பசுமாட்டுப் பாலுக்கே 4 ரூபாய் விலை உயர்த்தி, 32 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.

ஆனால், உண்மை நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள 99% பசுமாடுகள் அரசு குறிப்பிடும் அளவுடைய பால் கறப்பதில்லை. சில பசு மாடுகள் கொழுப்புச்சத்து 4.0-மும், இதரச் சத்து 8.0-மும் அளவுடைய பாலையே மாடுகள் கறக்கின்றன. இந்தப் பாலுக்கு 2.75 ரூபாய் விலை உயர்வுதான் கிடைக்கும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பசுமாடுகள் கொழுப்புச்சத்து 3.0-மும், இதரச் சத்து 7.7-ம் உடைய பால்தான் கறக்கின்றன. இந்தப் பாலுக்கு வெறும் 1.75 ரூபாய் விலை உயர்வே கிடைக்கும்.

இதைத்தவிர ஒன்றியத்திற்காகவும், இணையத்திற்காகவும் 2 ரூபாயும், பால் கூட்டுறவுச் சங்க வளர்ச்சிக்காக 1.25 ரூபாயும் என 3.25 ரூபாய் பிடித்துக்கொள்கிறார்கள். எங்களுக்கு ஒரு லிட்டர் பாலின் விலையிலிருந்து வெறும் 75 பைசா மட்டுமே கிடைக்கிறது. ஆக, பால் விலை உயர்வு என்பது ஆவின் பால் நிர்வாகிகளுக்கும், ஊழியர்களின் சம்பளம் உயர்த்தவும் பயன்படுமே தவிர, பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. விலை உயர்வு என்பது உற்பத்தியாளர்களுக்கு வெறும் கண்துடைப்பு நாடகமே" என்றார்.

cow
cow

"பால் விலை உயர்வு ஆவின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவே பயன்படும். பசு மாட்டுப் பால் லிட்டருக்கு 40 ரூபாய், எருமை மாட்டுப் பால் 50 ரூபாய் என உயர்த்த வேண்டும்" என்கிறார்கள் விவசாயிகள். - இதற்குப் பின்னால் உள்ள புள்ளி விவரம் - பின்னணியை முழுமையாகச் சொல்லும் பசுமை விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > உற்பத்திச் செலவு ரூ. 49... வருமானம் ரூ. 32... பால் விலையேறியும் பயனில்லை! - கொதிக்கும் பால் உற்பத்தியாளர்கள்! https://www.vikatan.com/news/agriculture/milks-manufacturing-cost-is-still-higher-than-the-selling-cost

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/