Published:Updated:

‘இந்தியா இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது!’

இயற்கை விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயம்

உண்மையை உரைத்த நிதி ஆயோக்!

‘இந்தியா இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டிய தருணம் இது!’

உண்மையை உரைத்த நிதி ஆயோக்!

Published:Updated:
இயற்கை விவசாயம்
பிரீமியம் ஸ்டோரி
இயற்கை விவசாயம்

திருப்புமுனை

சாயன உரங்களாலும் பூச்சிக் கொல்லிகளாலும் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை உருவாகி, மக்களின் உடல் நலனைப் பாதிக்கிறது. இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்தால்தான் ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய முடியும் என இயற்கை ஆர்வலர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள்.

அந்த வரிசையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், இயற்கை வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் உள்ளிட்ட பலரது உழைப்பு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, பசுமை விகடன் வருகைக்குப் பிறகு, தமிழ்நாட்டு விவசாயிகள் மத்தியில் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு வேகமாக வளர்ந்தது. இயற்கை விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜீவ் குமார், ராமலிங்கம், பாஸ்கரன்
ராஜீவ் குமார், ராமலிங்கம், பாஸ்கரன்

ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதற்குச் செவி சாய்க்காமலே இருந்து வந்தன. இந்நிலையில்தான் கொரோனா தொடர்பாக, சர்வதேச அளவில் நடைபெற்ற காணொலி கலந்தாய்வில், இந்திய அரசின் நிதி ஆயோக், இயற்கை விவசாயத்தின் தேவை குறித்துத் தனது கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகளில் மிக முக்கிய அங்கம் வகிக்கக்கூடிய நிதி ஆயோக் இவ்வாறு தெரிவித்திருப்பது, இயற்கை விவசாய ஆர்வலர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்துவதற்கான உணவு குறித்தும் விவாதித்தப்பதற்காக, இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பானது, சர்வதேச அளவிலான காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியது. இதில் அமெரிக்க, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா அமைப்பினரும் இதில் கலந்துகொண்டார்கள். இதில் உரையாற்றிய இந்திய நிதி ஆயோக் தலைவர் ராஜீவ் குமார், ‘‘இந்த இக்கட்டான நேரத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்வதே இந்த உலகைப் பாதுகாக்கும். இந்திய மக்கள், பாரம்பர்யமான இயற்கை வாழ்வியலோடு இணைந்து வாழ, முயற்சி செய்ய வேண்டும். பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரங்கள் தவிர்த்து உணவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் உலக நாடுகள் பலவும் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வளமான சமுதாயத்தை வளர்த்தெடுக்க, இயற்கையோடு இணைந்து வாழ்தலே சிறந்த வழி” எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்துப் பேசிய மயிலாடு துறையைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமலிங்கம், ‘‘கொரோனா மனித குலத்துக்கான அபாயமணி. நம்ம அரசாங்கமும் மக்களும், இப்பவும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக, ஒரு பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். நஞ்சில்லாத உணவைச் சாப்பிட்டாலே, நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியமான உடல்ல, தொற்று நோய்களால், பெரிய பாதிப்பு ஏற்படாது. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை மிகவும் அவசியம். நவீன வசதிகள்ல, பின்தங்கியுள்ள குக்கிராமங்கள்ல கொரோனா பாதிப்பே ஏற்படலை. நிதி ஆயோக், வெறும் பேச்சோடு நிற்காமல், இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள்ல தீவிரம் காட்டணும்” என்றார்.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

தஞ்சாவூர் மாவட்டம் தேனாம்படுகையைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாஸ்கரன், ‘‘ரசாயன உர நிறுவனங்களுக்கு, ஏராளமான மானியங்களையும் நிதியையும் வாரி வழங்குது மத்திய அரசு. இவையெல்லாம், விவசாயிகளின் நலனுக்காகவே வழங்குகிறோம்னு கணக்கு காட்டுது அரசு. ஆனால் இதனால விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்துற திட்டங்களை நடைமுறைப்படுத்தினால்தான், விவசாயிகள் நேரடியாகப் பயன் அடைவாங்க. மக்களுக்கான ஆரோக்கியமான உணவும் குறைவான விலையில தங்கு தடையில்லாம கிடைக்கும்.

அதேசமயம், மத்திய அரசு, இயற்கை விவசாயத்தைத் தீவிரப்படுத்துறோம்னு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் துணைபோகக் கூடாது. அதிக விலையில இயற்கை இடு்பொருள்களை, விவசாயிகள்கிட்ட விற்பனை செய்ய கார்ப்பரேட் நிறுவனங்களும் முயலும். இயற்கை விவசாயிகளோட தற்போதைய சந்தை வாய்ப்புகளை, அந்நிறுவனங்கள், குறுக்கு வழியில அபகரிக்கவும் வாய்ப்பிருக்கு. இதுமாதிரியான பின்னடைவுகள் ஏற்படாத வகையில, இயற்கை விவசாயத்தைத் தீவிரப்படுத்தணும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism