Published:Updated:

“இந்தளவுக்கு லாபம் கிடைக்குமா?” வியக்க வைத்த நேரலை பயிற்சி!

பயிற்சி

பிரீமியம் ஸ்டோரி
சுமை விகடன் 10.11.2020 தேதியிட்ட இதழில் ‘வேளாண் கல்லூரி முதல்வரின் அசத்தல் அனுபவப் பாடம்’ என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட் டிருந்தோம். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் ஆழமான அனுபவம் பெற்ற முன்னோடி விவசாயியும், பொன்னையா ராமஜெயம் வேளாண்மைக் கல்லூரி முதல்வருமான இளஞ்செழியன், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள சித்தமல்லி மேல்பாதி கிராமத்தில் நடத்தி வரும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து அதில் விரிவாகப் பதிவு செய்திருந்தோம்.

நெல், தீவனப்புல், ஆடு, மாடு, கோழி, முயல், புறா, வாத்து, மீன் ஆகியவற்றோடு 31 ஏக்கரில் வெற்றி நடைபோடும் இந்தப் பண்ணையை நேரில் பார்க்க வேண்டும் எனப் பலரும் ஆர்வமானார்கள். இந்தப் பண்ணை மூலம் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் ஈட்டி வரும் இளஞ்செழியன், நேரலை மூலம் களப்பயிற்சி அளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தோடு, ‘ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்’ என்ற தலைப்பில் நேரலை (ஆன்லைன்) களப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

“இந்தளவுக்கு லாபம் கிடைக்குமா?” வியக்க வைத்த நேரலை பயிற்சி!

கடந்த நவம்பர் 8-ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, திண்டுக்கல் காந்தி கிராமம் வேளாண் அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர், முனைவர் உதயகுமார் கலந்துகொண்டு, பயனுள்ள பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். பண்ணை முழுவதும் சுற்றிக் காண்பித்துப் பேசிய இளஞ்செழியன், நெல் வயல், மீன் குளம்... அதன் மீது அமைக்கப்பட்டுள்ள கோழிக் கொட்டகை, வாத்து, புறா, முயல், ஆடு வளர்ப்பு என ஒவ்வொன்றாகத் தனித் தனியாகக் காட்சிப் படுத்தி, இவற்றில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

“ஒருங்கிணைந்த பண்ணை அமைச்சிட்டா போதும்... தானாகவே வருமானம் வந்துடும்னு நினைக்கக் கூடாது. கடுமையான உழைப்பும் கண்காணிப்பும் அவசியம். சிலர் எடுத்ததுமே பெரிய அளவுல முதலீடு பண்ணி நஷ்டத்தைச் சந்திக்கிறாங்க. அது தவறானது. படிப்படியாக, நேரடி அனுபவத்தின் மூலமாகத்தான் ஒருங்கிணைந்த பண்ணையை விரிவுபடுத்தணும்’’ என்று சொன்ன இளஞ்செழியன், வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விடையளித்தார். ‘‘ஒருங்கிணைந்த பண்ணையில் இந்தளவுக்கு லாபம் கிடைக்குமா? என்று நினைத்தோம். ஆனால், இதைவிட இன்னும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொண்டோம்’’ என நெகிழ்ச்சியுடன் சொன்னார் ரவிசங்கர் என்ற விவசாயி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு