Published:Updated:

மங்குஸ்தான்... 40 மரங்கள், ஆண்டுக்கு ரூ. 80,000 ஊடுபயிரில் உன்னத வருமானம்!

மங்குஸ்தான் பழங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மங்குஸ்தான் பழங்கள்

மகசூல்

ழங்களின் அரசியான மங்குஸ்தான் சாகுபடியில் அசத்தி வருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல்.
ரசூல் மொகைதீன்
ரசூல் மொகைதீன்

தென்னை, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதில் ஊடுபயிர் மூலமாக வருமானத்தை அதிகரித்துக்கொள்கின்றனர் பல விவசாயிகள். தேக்கு, பப்பாளி, மாட்டுத்தீவனம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் ஊடுபயிர் மாறுபடுகிறது. தென்னந்தோப்பில் மைக்ரோ கிளைமேட் உருவான பண்ணைகளில் பாக்கு, மிளகு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்கிறார்கள். அந்த வகையில், தனது தென்னந்தோப்புக்குள் பாக்கு, மிளகு பயிர்களுடன் ஜாதிக்காய், மங்குஸ்தான் பயிர்களையும் சாகுபடி செய்து மகசூல் எடுத்து வருகிறார் திண்டுக்கல் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல் மொகைதீன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தென்னைக்கு ஊடுபயிராக மங்குஸ்தான்
தென்னைக்கு ஊடுபயிராக மங்குஸ்தான்

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகேயுள்ள மருதாநதி பகுதியில் இருக்கிறது இவரது தோட்டம். ஒரு பக்கம் அணை, மறுபக்கம் மலை. இரண்டுக்கும் இடையில் ரம்மியமாக இருந்தது ரசூல் பண்ணை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தோப்பு முழுக்க மரங்கள். வானைத் தொடும் எண்ணத்தில் தன்னை நீட்டிக்கொண்டே போகும் தென்னை, அதற்கு இடைப்பட்ட இடங்களில் பாக்கு. இவை இரண்டும் தோப்புக்குள் அதிக வெயில் படாமல் இதமான சூழலை உருவாக்குகின்றன. ஒரு பக்கம் பலா காய்த்துத் தொங்குகிறது. காப்பிச் செடி முழுக்கக் காய்கள், நார்த்தை மரங்கள், செம்மரம், மகோகனி, குமிழ், தேக்கு என மரங்களின் மாநாடு நடப்பது போன்ற காட்சி. இதற்கிடையில் ஜாதிக்காய் மரங்கள், மங்குஸ்தான் மரங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஜாதிக்காய் மரங்களில் மரம் முழுக்கக் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தோப்பு முழுக்க மண்புழுக்களின் எச்சங்கள்.

மங்குஸ்தான் பழங்கள்
மங்குஸ்தான் பழங்கள்

“பரம்பரையா விவசாயம்தான் எங்க தொழில். இப்ப என்னோட பசங்களையும் விவசாயத்துல ஈடுபடுத்திக்கிட்டு இருக்கேன். எனக்கு ரெண்டு பசங்க. பெரிய பையன் சாகுல் ஹமீது, பெட்ரோலியம் கம்பெனி வேலையை விட்டுட்டு, முழுநேர விவசாயியா என்கூட இருக்கார். சின்ன பையன் முகைதீன் அப்துல் காதர், மும்பையில ஒரு கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டு இருக்காரு. அவரும் கூடிய சீக்கிரம் விவசாயத்துக்கு வந்திடுவாரு” எனச் சுருக்கமாகத் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ரசூல், தோப்புக்குள் நடந்துகொண்டே பேசத் தொடங்கினார்.

100 வருட வருமானம்

“என்னோட பிரதானப் பயிர் தென்னை தான். 100 வயதான தென்னை மரங்கள்கூட என்கிட்ட இருக்கு. தென்னைக்குச் செய்ற பராமரிப்புல பல ஊடுபயிர்களைச் சாகுபடி பண்றேன். 100 மங்குஸ்தான் மரங்கள் வெச்சிருக்கேன். 8 வருஷத்துக்கு முன்ன நடவு செஞ்சது. இந்த வருஷம்தான் முதல் மகசூல் கிடைச்சிருக்குது. 100 மரங்கள் நடவு செஞ்சேன். 70 மரங்கள் பிழைச்சது. அதுல 40 மரங்கள்லதான் மகசூல் வந்திருக்கு. அடுத்த வருஷம் எல்லா மரங்களும் காய்ச்சிடும்னு நினைக்கிறேன், இது நல்ல மகசூல் கொடுக்க 10 வருஷம் ஆகும். பிறகு 100 வருஷம் வரைக்கும் மகசூல் கொடுக்கும்னு சொல்றாங்க. பரலியாறு பகுதியில 100 வயசு மரங்கள் இப்பவும் இருக்குது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைப் பழங்களின் அரசின்னு சொல்றாங்க. இது பொள்ளாச்சியில சில விவசாயிக தோட்டத்துல இருக்கு. அதைத்தாண்டி தமிழ்நாட்டுல வேற எங்கேயும் இருக்குற மாதிரி தெரியலை. கேரளாவுல தான் இதை அதிகம் சாகுபடி செய்றாங்க. இதுக்கு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதல் இல்லை. தனியாக உரம் கொடுக்கத் தேவையில்லை. நல்லா வறட்சியைத் தாங்கும். குழியெடுத்து நடவு செஞ்சாப் போதும்.

மகன் சாகுல் ஹமீதுடன்
மகன் சாகுல் ஹமீதுடன்

நான் கடல்மட்டதிலிருந்து 1,125 அடி உயரத்தில தென்னைக்கு இடையில நடவு செய்திருக்கிறேன். ஒரு மரம் 150 முதல் 200 காய்கள் வரைக்கும் காய்க்குது. ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் பழம் வரும் சீஸன்.

மங்குஸ்தான்... 40 மரங்கள், ஆண்டுக்கு ரூ. 80,000 ஊடுபயிரில் உன்னத வருமானம்!

ஒரு மரம் கொடுக்கும் 2,000 ரூபாய்

ஒரு கிலோ எடையில் 10 முதல் 15 காய்கள் நிற்கும். வியாபாரிகள் கிலோ 200 ரூபாய் விலையில வாங்கிக்கிறாங்க. சராசரியா 10 கிலோ மகசூல் கிடைச்சாலும் ஒரு மரத்தி லிருந்து 2,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். 40 மரங்களிலிருந்து 80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். தென்னை, பாக்கு பராமரிப் பிலேயே இது வளர்ந்து வருமானம் தருது. எனவே, வாய்ப்புள்ள விவசாயிகள் இதைச் சோதனை அடிப்படையில நடவு செய்து பார்த்து, பிறகு அதிக அளவில் சாகுபடி செய்யலாம்’’ என்றார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு, ரசூல் மொகைதீன், செல்போன்: 94421 02421.

நாற்றுத் தேவைக்கு இங்கே அணுகலாம்!

நீலகிரி மாவட்டம், பர்லியார் பழப்பண்ணை தோட்டக்கலை அலுவலர் மோகன்ராமிடம் பேசினோம். “6 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள்வரை பலன் தரும் மங்குஸ்தான் மீது தமிழக விவசாயிகளின் பார்வை விழத் தொடங்கியுள்ளது. இது மேலும் அதிகரித்தால் கேரள சந்தையைப்போல் தமிழகத்திலும் நல்ல சந்தையை உருவாக்க முடியும். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் கல்லார் மற்றும் பர்லியார், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் நன்கு வளர்கிறது. காற்றின் ஈரப்பதம் 70 முதல் 80 சதவிகிதம் உள்ள பகுதிகளில், நிழலான இடங்களில் இது வளரும்.

தென்னையில் ஊடுபயிராகப் பயிரிட்டுச் சாதித்துள்ளார் திண்டுக்கல் விவசாயி. தற்போது விவசாயிகள் அதிகளவில் மங்குஸ்தான் நாற்றுகளை வாங்கிச் செல்கின்றனர். பர்லியார் அரசு பழப்பண்ணையில் மங்குஸ்தான் நாற்று ஒன்று ரூ.50-க்கு விற்பனை செய்கிறோம். தேவை அதிகம் இருப்பதால் தொடர்ந்து நாற்றுகளை உருவாக்கி வருகிறோம்” என்றார்.

தொடர்புக்கு, மோகன்ராம், செல்போன்: 89030 33658

ஒரு மரம்... ஆண்டுக்கு ரூ.5,000

னது தோட்டத்தில் உள்ள ஜாதிக்காய் பற்றிப் பேசிய ரசூல், “ஜாதிக்காய் ஒரு அருமையான பயிர். இதைத் தனிப்பயிரா சாகுபடி செய்ய முடியாது. தென்னை மரத்துக்கு ஊடுபயிரா சாகுபடி செய்யலாம். அதுவும், இளம் தென்னையில சாகுபடி செய்ய முடியாது. நல்லா வளர்ந்து நிழல் இருக்கத் தோப்புலதான் வளர்க்கணும். இதுக்கு பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. பராமரிப்பு பிரச்னையில்லை. தென்னைக்குப் பாசனம் செய்யும்போதே இதுக்கும் பாசனம் ஆகிடும். அதிக தண்ணியும் இதுக்கு ஆகாது. நடவு செஞ்சதுல இருந்து 7 வருஷத்துக்குப் பிறகுதான் நல்ல மகசூல் கிடைக்கும். அதிலிருந்து 300 வருஷம் வரைக்கும் மகசூல் எடுக்கலாம்னு சொல்றாங்க. என்னோட தோப்புல இதுக்கு இதுவரை நோயே தாக்குனதில்லை. ஜாதிக்காய்ல ஆண் மரங்களும் காய்க்கும். ஆனா, அந்தக் காய் சரியான வடிவத்துல இல்லாம ஒழுங்கீனமா இருக்கும். நல்லா காய்க்கிற மரத்துல இருந்து பட்டை எடுத்து, ஆண் மரங்கள்ல பரு ஒட்டு முறையில ஒட்டுகட்டினா, அந்த மரமும் பெண் மரமா மாறிடும். ஆனாலும், மகரந்தச்சேர்க்கைக்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையில ஆண் மரங்களைப் பராமரிக் கணும். ஒரு மரத்திலிருந்து வருஷம் 5,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்’’ என்றார்.