Published:Updated:

`இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகம்; ஆனால், உணவு பாதுகாப்பில் பின்னடைவு!’ - ஐ.நா அறிக்கையும் நிலவரமும்

உணவு பாதுகாப்பில் இந்தியா:

இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும் அதன் பாதுகாப்பில் பின்தங்கியுள்ளதாக ஐ.நா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் சுமார் 20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நேற்று (அக்டோபர் 16) சர்வதேச உணவு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான உணவின் முக்கியத்துவம் மற்றும் சர்வதேச அளவில் வறுமை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணிகள், இதையொட்டி நடத்தப்பட்டன. பசி, பட்டினி ஒழிந்து அனைத்து மக்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்காக, உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன், உணவு குறித்த பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ``1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வரும் உலக உணவு தினம், ஐ.நா-வின் உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன்
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன்

ஐ.நா பொதுக்கூட்டத்தில் சிறப்பு தினமாக அறிவிக்கப்பட்ட இத்தினத்தை ஆண்டுதோறும் பல்வேறு நாடுகள் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும் அதன் பாதுகாப்பில் பின்தங்கி உள்ளதாக ஐ.நா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் சுமார் 20 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அளவு 21 கோடியாகக் குறைந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உணவு
உணவு

மேலும், இந்தியாவில் 15 சதவிகிதம் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உலகில் அதிக அளவு உணவு உற்பத்திக்குக் காரணமானவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச உணவு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது அமெரிக்காவைச் சேர்ந்த நார்மன் போர்லாக் முயற்சியால் தொடங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. தற்போது நம் நாட்டில் பட்டினியால் சாகும் உயிர்கள் ஒரு பக்கம் என்றால், பொய்த்துப்போன விவசாயத்தில் பாதிக்கப் பட்டு உயிர் விடும் விவசாயிகளின் நிலையும் மிக வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது” என்றார்.