Published:Updated:

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானதா தமிழகத்தின் ஒப்பந்த சாகுபடி சட்டம்?

சாகுபடி சட்டம்
சாகுபடி சட்டம்

இந்தச் சட்டம்குறித்து, சட்டமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்கவில்லை; விவசாயிகளிடமும் கருத்து கேட்கவில்லை.

விவசாயிகளை வாழவைப்பதும் வீழவைப்பதும் விளைபொருள்களுக்கான விலைதான்! கடன் வாங்கி பயிர் செய்த விளைபொருள்கள், பல நேரங்களில் குறைந்த விலைக்கு விற்பனையாகின்றன. இதனால், விவசாயிகள் வேதனையில் சிக்கித்தவிக்கிறார்கள். விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2PRF53D

நெல், கரும்பு போன்ற விளைபொருள்களுக்கு, கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற விளைபொருள்கள், சந்தைவிலைக்கேற்ப விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில்தான், ஒப்பந்த சாகுபடிக்கான தனிச்சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ளது. 'தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம் - 2019' என்ற சட்டத்துக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியிருக்கிறார். விளைபொருள்களுக்கான ஒப்பந்த சாகுபடி சட்டம், இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகம்தான் இந்தச் சட்டத்தை இயற்றும் முதல் மாநிலம். கரும்பு, மூலிகைப் பயிர்கள், விவசாயப் பயிர்கள், இறைச்சிக் கோழி தொடர்பான ஒப்பந்தத்தை, இந்தச் சட்டத்தின்கீழ் செய்துகொள்ளலாம்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானதா தமிழகத்தின் ஒப்பந்த சாகுபடி சட்டம்?

''இந்தச் சட்டம் முழுமையாகச் செயல்பட்டால் பண்ணையாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், செயல்பாட்டுக்கு முழுமையாக வருமா என்பதில் சந்தேகம் உள்ளது. இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் ஒப்பந்த சாகுபடி சட்டம் செயல்படுத்தப்பட்டு, தோல்வியில் முடிந்திருக்கிறது'' என்று சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் தமிழக விவசாயச் சங்கத்தினர்.

தமிழக அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ''இந்தச் சட்டம்குறித்து, சட்டமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்கவில்லை; விவசாயிகளிடமும் கருத்து கேட்கவில்லை. இந்த நிலையில் ஒப்பந்த சாகுபடி சட்டம் நிறைவேற்றப்படுவது, கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத்தான் சாதகமாக இருக்கும்.

தமிழகத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் தற்போது அதிகரித்துவருகிறார்கள். இதனால், பாரம்பர்ய விதைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. இயற்கைவழி வேளாண்மை காரணமாக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி விற்பனை வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்த நிலையில் ஒப்பந்த சாகுபடி சட்டம் நடைமுறைக்கு வந்தால், மீண்டும் ரசாயனப் பயன்பாடு அதிகரிக்கும். காரணம், ஒப்பந்த நிறுவனம் விதை முதல் உரம், பூச்சிக்கொல்லி வரை அனைத்தையும் கொடுத்துவிடும். 'வீரிய ரக விதைகள் மூலம் அதிக மகசூல் கிடைப்பதால், வருமானம் அதிகமாகும்' என விவசாயிகளுக்கு ஆசை காட்டப்படும். இவற்றால் மண் மலடாகும் என்ற உண்மையை மறைத்துவிடுவார்கள்.

இதனால், பெரும்பாலான விவசாயிகள் கார்ப்பரேட் கம்பெனிகள் சொல்லும் பயிரையே சாகுபடி செய்வார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் இடுபொருள்களை விவசாயிகளிடம் விற்றுவிடுவார்கள். அதோடு, குஜராத்தில் உருளைக்கிழங்கு காப்புரிமைப் பிரச்னை ஏற்பட்டதுபோல், இங்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.

- ஒப்பந்த சாகுபடி சட்டம் குறித்த ஜூனியர் விகடன் இதழின் விரிவான பார்வைக்கு > 'குஜராத் சிக்கல் தமிழகத்துக்கும் வரலாம்!' https://www.vikatan.com/news/agriculture/agricultural-produce-and-livestock-contract-farming-and-services-act

மக்களை நசுக்கவா... இயற்கையை பாதுகாக்கவா?

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய 17 வருவாய் கிராமங்கள், சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலமாக அறிவிக்கப்பட உள்ளன.

"ஏற்கெனவே வன உயிரினப் பாதுகாப்புச் சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதி, தனியார் காடுகள் சட்டம் போன்றவற்றால் நாங்கள் ஏராளமான சிக்கல்களைச் சந்தித்துவருகிறோம். இதுபோதாதென, சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலத்தையும் கொண்டுவந்து எங்களை மேலும் நசுக்கப்பார்க்கின்றனர்" என்று அலறுகின்றனர் சம்பந்தப்பட்ட கிராம மக்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானதா தமிழகத்தின் ஒப்பந்த சாகுபடி சட்டம்?

களியல் எல்லையிலிருந்து சிற்றாறு அணைப் பகுதியின் கடையாலுமூடு ஜங்ஷன் வரை, 19,605 ஹெக்டேர் அளவுக்கு இந்தச் சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் அமையப்போகிறது. மங்களம் கிராமப் பகுதியில் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும், சுங்கான்கடைப் பகுதியில் மூன்று கிலோமீட்டர் தூரமும் மற்ற இடங்களில் 200 முதல் 300 மீட்டர் தூரமும்தான் சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டத்துக்குள் வரப்போகின்றன. `இதனால் மக்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று வனத்துறை தரப்பில் சொல்லப் பட்டாலும், இதற்கான எதிர்ப்புக்குரல் ஒருபுறம் ஓங்கி ஒலிக்கிறது.

- முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > சூழலியல் அதிர்வு தாங்கும் மண்டலம் - மக்களை நசுக்கவா... இயற்கையை பாதுகாக்கவா? https://www.vikatan.com/news/environment/17-villages-should-not-be-linked-to-ecological-vibration-in-kanyakumari

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

பின் செல்ல