Published:Updated:

ஒரு திராட்சைப் பழம் 21,000 ரூபாய்…

திராட்சைப் பழம்
பிரீமியம் ஸ்டோரி
News
திராட்சைப் பழம்

ஜப்பான் நாட்டின் அதிசயம்!

ம் ஊரில் ஒரு கிலோ திராட்சைப்பழம் அதிகபட்சமாக 200 ரூபாய்க்கு விற்பனையானாலே அதிசயம். ஆனால், ஜப்பான் நாட்டில் 30 பழங்கள் கொண்ட 1 கொத்து திராட்சையை 1.2 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 6,50,000 ரூபாய்) கொடுத்து ஏலம் எடுத்திருக்கிறார், சூப்பர் மார்க்கெட் ஒன்றின் உரிமையாளர், டகாமாரு கொனிஷி. இந்திய மதிப்பில் கணக்கிட்டால் ஒரு திராட்சைப்பழத்தின் விலை கிட்டத்தட்ட 21,000 ரூபாய்.

இந்த விலையுயர்ந்த திராட்சை வகையை உருவாக்கிச் சந்தைப்படுத்த, ஜப்பானுக்கு 14 ஆண்டுகள் பிடித்தன.

அந்தத் திராட்சை ரகத்தின் பெயர் ரூபி ரோமன். இது ஜப்பான் நாட்டின் உயர் ரகத் திராட்சைப்பழம். ஜப்பானியர்களைப் பொறுத்தவரை ரூபி ரோமன் திராட்சை ஒரு அந்தஸ்தின் அடையாளம். நாட்டின் பெருமை. உயர்பதவியில் உள்ள அதிகாரிகள், பெரிய நிறுவன முதலாளிகள், நகரின் முக்கியஸ்தர்கள் போன்றோருக்கு, இவ்வகைத் திராட்சைப் பழங்களைப் பரிசாக வழங்குவது ஜப்பானின் கலாசாரங்களில் ஒன்று. ரூபி ரோமனை பரிசாக அளிப்பதைத் தங்களின் பெருமையாகக் கருதுகிறார்கள், ஜப்பானியர்கள். அதனால்தான் ரூபி ரோமன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த ஜூலை முதல் வாரம், இதை ஏலத்தில் எடுத்திருக்கும் டகாமாரு கொனிஷி, “இந்த ஆண்டு, ரூபி ரோமனை ருசிக்கும் வாய்ப்பு ஒரு சில வாடிக்கையாளர்களுக்குத்தான் கிடைக்கும். இந்தத் திராட்சைக் கொத்தைச் சில நாள்கள் எங்கள் கடையில் பார்வைக்கு வைத்துவிட்டு அதன் பிறகுதான் விற்பனை செய்வோம்” என்று அறிவித்துள்ளார்.

 டகாமாரு கொனிஷி
டகாமாரு கொனிஷி

ஜப்பானின் வடகோடி தீவுகளில் ஒன்றான இஷிகாவா தீவில் பயிரிடப்படும் ரூபி ரோமன் திராட்சை, மக்களை வசீகரிக்கும் பழங்களில் நம்பர் ஒன். அதன் பிரகாசமான சிவப்பு நிறம், பெரிய அளவு, அதீத சுவை ஆகியவை அதன் சிறப்பம்சங்கள்.

இந்த விலையுயர்ந்த திராட்சை வகையை உருவாக்கிச் சந்தைப்படுத்த, ஜப்பானுக்கு 14 ஆண்டுகள் பிடித்தன. 1995-ம் ஆண்டில் கறுப்பு நிறத் திராட்சையை மட்டுமே உற்பத்தி செய்து ஓய்ந்துபோன இஷிகாவா தீவு விவசாயிகளுக்கு, ஒரு வித்தியாசமான திராட்சை வகையைப் பயிரிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. உடனடியாக, அவர்கள் இஷிகாவா விவசாய ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்களிடம் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்க, ஆராய்ச்சியாளர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கறுப்பு நிற ஃபுஜிஷிமா திராட்சை வகையிலிருந்து 400 விதைகளைத் தேர்வு செய்து, சோதனைத் திடலில் நட்டனர். முதல்கட்ட சோதனையில், நானூறு செடிகளில் நான்கு செடிகளில் மட்டுமே சிவப்புப் பழங்கள் காய்த்தன. பின்னர், அந்த நான்கு செடிகளில் தேவையான மாற்றங்கள் செய்து பழத்தின் நிறம், பளபளப்பு, அளவு, தரம் ஆகியவை கூட்டப்பட்டன. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு 2004-ம் ஆண்டில் இந்த ரகம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ரூபி ரோமன் என்று பெயரிடப்பட்டது.

அடுத்த இடத்தில் இருப்பது தர்பூசணி. அதன் விலை வின்டேஜ் ஒயினைவிட அதிகம்

‘இது க்யோஹோ என்ற கறுப்பு வகைத் திராட்சையைவிட அளவில் இருமடங்கு பெரியது. பிரகாசமான சிவப்பு நிறம் இதன் தனித்துவம். ‘இது ஒரு கனவுப் பழம்’ என்கிறார்கள், இஷிகாவா ஆராய்ச்சியாளர்கள் இன்று ரூபீ ரோமன் இஷிகாவா தீவின் பொக்கிஷம். ஏனெனில், இதன் பெயர்கூட 639 பெயர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இதன் வழக்கமான அறுவடைக்காலம் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரைதான். ஆனால் இந்த ஆண்டு, ஜூலை முதல் வாரத்திலேயே அறுவடைக்கு வந்துவிட்டது, ரூபி ரோமன்.

பழத்தின் தரத்தை உறுதி செய்ய, பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவ்வகைத் திராட்சையைப் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் ‘ரூபி ரோமன் கிளப்’ என்ற அமைப்பின் கீழ் செயல்படுகின்றனர். அதனால், பயிரிடும் முறை, பராமரிப்பு, அறுவடை, அறுவடை பின்சார் தொழில்நுட்பம் போன்றவை அனைத்தும் ஒரே சீராகக் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதனால், பழங்களின் தரம், நிறம், சுவை ஆகிய அனைத்தும் உறுதிசெய்யப்படுகின்றன. ஒரு பழத்தின் எடை 20 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும். சர்க்கரை அளவு குறைந்தபட்சம் 18 சதவிகிதம் இருக்க வேண்டும். ஒரு கொத்தில் 30 பழங்களுக்கு மேல் இருக்கக் கூடாது.

ஒரு திராட்சைப் பழம் 21,000 ரூபாய்…

இவையெல்லாம் சரியாக இருந்தால்தான் அப்பழம் அதிக விலை போகும். கடந்த

2008-ம் ஆண்டில், முதன்முதலாக ரூபி ரோமன், கனாசாவா சந்தையில் அறிமுகப்படுத்தப் பட்டது.

முதல் ஏலத்திலேயே, ரூபி ரோமன் ஒரு மில்லியன் யென்னுக்கு விலை போனது. பின்னர் டோக்கியோ, ஒசாகா சந்தைகளிலிலும் ரூபி கோலோச்சியது. கடந்த ஆண்டு ஒரு கொத்து 1.1 மில்லியன் யென்னுக்கு விற்பனையானது.

ஜப்பானின் பிரீமியம் பழங்கள் வரிசையில் ரூபி ரோமனுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தர்பூசணி. அதன் விலை வின்டேஜ் ஒயினைவிட அதிகம். என்கிறார்கள், ஜப்பானியர்கள். கடந்த ஆண்டு ஒரு பழம் 6,000 டாலர் விலைக்கு விற்பனையாகியுள்ளது.

உயர்பதவியில் உள்ள அதிகாரிளுக்கு இவ்வகைத் திராட்சைப் பழங்களைப் பரிசாக வழங்குகிறார்கள்.

ஹொக்கைடொ தீவில் தர்பூசணி அதிகளவில் பயிரிடப்படுகிறது. கோடைக்காலத்தில் ஜப்பானில் கடும் வெப்பம் நிலவும். அப்போது ஜப்பானியர்கள் தர்பூசணியை விரும்பி உண்பர். இதுவும் ஒரு மதிப்புக்குரிய பரிசுப்பொருள். கோடைக்காலம், பழங்களைப் பரிசளிக்கும் காலம் என்கிறார்கள், ஜப்பானியர்கள். சாதாரணமாக 20,000 முதல் 30,000 யென் வரை தர்பூசணி விற்கப்படுகிறது. கறுப்பு நிறத் தோலும், சுவையான ரசமும், சிவந்த சதைப்பகுதியும்தான் அதன் சிறப்பம்சம். அதன் சுவையே அலாதி என்கிறனர் மக்கள்.

ஆனாலும், ஜப்பானில் பழங்களின் ராணி ரூபி ரோமன்தான்.