Published:Updated:

``எனக்கு ஊரடங்கு கவலை இல்லை!" - `ஜூப்ளி பாலு' வீட்டுத்தோட்டம்!

வீட்டுத்தோட்டம் மூலம் நஞ்சில்லாக் காய்கறிகளை உற்பத்தி செய்யும் நகர விவசாயிகள் நல்ல மகசூலையும் எடுத்துவருகிறார்கள்.

''ஒரு வருஷம் ஊரடங்கு போட்டாலும் எனக்குக் கவலை இல்லை. எங்க குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள் இங்கேயே கிடைச்சிடும். இப்படிப்பட்ட தன்னிறைவு வாழ்க்கையை ஒவ்வொரு மனுஷனும் வாழணும். இதை என்னோட நிறுத்திக்கலை. நண்பர்கள், உறவினர்கள்னு பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வர்றேன்.

'வீடுதோறும் தோட்டம் அமைப்போம்... விஷமில்லா நல் உணவு சமைப்போம்'கிற தாரக மந்திரத்தோடு எனது இயற்கைப் பயணம் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கு'' என்கிறார் பாலு.

வீட்டுத்தோட்டம் இன்றைக்கு நகரத்தில் இருப்பவர்களின் விவசாயக் கனவை நிறைவேற்றி வருகிறது. நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமான சூழல். கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலருக்கும் இது பல வகைகளில் உதவியாக இருக்கிறது.

``எனக்கு ஊரடங்கு கவலை இல்லை!" - `ஜூப்ளி பாலு' வீட்டுத்தோட்டம்!

இதை வைத்திருப்பவர்கள் காய்கறிக்காகக் கடைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே பறித்து, தற்சார்பு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் பலர் புதிதாக இதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

வீட்டுத்தோட்டம் மூலம் நஞ்சில்லாக் காய்கறிகளை உற்பத்தி செய்யும் நகர விவசாயிகள் நல்ல மகசூலையும் எடுத்துவருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாநகரில் தொழிற்சாலை நடத்திவரும் சிவசுப்பிரமணியன் 30 சென்ட் அளவில் வீட்டுத்தோட்டம் அமைத்து, இயற்கை முறையில் காய்கறி விவசாயம் மேற்கொண்டுவருகிறார்.

அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ''என்னை திருப்பூர்ல `ஜூப்ளி பாலு'னு சொன்னாத்தான் தெரியும். நீங்களும் அப்படியே சொல்லுங்க'' என்ற முன்னுரையோடு பேசத் தொடங்கினார் ஜூப்ளி பாலு.

''ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு இயற்கை விவசாயப்பயிற்சியில நானும் கலந்துக்கிட்டேன். இயற்கை வேளாண்மைப் பயிற்சியாளர் ரேவதி மூலமா அந்தப் பயிற்சியில பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். மூணு நாள் நடந்த அந்தப் பயிற்சியிலதான் வீட்டுத்தோட்டம் எப்படி அமைக்குறது, இயற்கை இடுபொருள்களை எப்படித் தயாரிக்கிறதுனு சொல்லிக்கொடுத்தாங்க. எல்லாத்தையும் மனசுலயும் புத்தியிலயும் பதிவு பண்ணிக்கிட்டேன்.

பாலு
பாலு

பயிற்சி முடிஞ்சு வந்ததும் வீட்டுத்தோட்டம் அமைக்கிற வேலையை ஆரம்பிச்சேன். இந்த ஒன்றரை வருஷமா என் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளைச் சுழற்சி முறையில விளையவெக்கிறேன். காய்கறிகளுக்காகக் கடைக்குப் போறதேயில்லை'' என்கிறார் ஜூப்ளி பாலு.

அவர் பகிர்ந்த உத்திகளை பசுமை விகடன் இதழில் முழுமையாக அறிய க்ளிக் செய்க.. > தற்சார்பு: ஊரடங்கில் கைகொடுத்த வீட்டுத்தோட்டம்! https://bit.ly/2A3IiaN

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு