பிரீமியம் ஸ்டோரி
சுமை விகடன் சார்பில் ஆன்லைன் மூலமாகப் பல பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாகப் பசுமை விகடன் மற்றும் கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனமும் இணைந்து கடந்த ஜூன் 26-ம் தேதி, ‘கைமேல் காசு தரும் கடம்ப மரச் சாகுபடி’ என்ற தலைப்பில் நான்காவது நேரலைப் பயிற்சியை நடத்தின.
கைமேல் காசு தரும் கடம்ப மரச் சாகுபடி!

இப்பயிற்சியில் கடம்ப மரச் சாகுபடி குறித்துப் பேசிய, மரம் வளர்ப்பு விஞ்ஞானி முனைவர் ஆ.விஜயராகவன். “2010-ம் ஆண்டு முதல் பூவரசு, கடம்பு, குமிழ் போன்ற நம் நாட்டு மரங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறோம். நல்ல தாய் மரங்களை ஆராய்ச்சி செய்து கன்றுகளைப் பிரித்து எடுத்துக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கடம்ப மரத்தில் மஞ்சள் கடம்பு, வெள்ளைக் கடம்பு என இரு வகைகள் உள்ளன. நம் நாட்டில் மரங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெள்ளைக் கடம்பைக் காகிதக் கூழ், தீக்குச்சி, பென்சில், பிளைவுட் எனப் பல வழிகளிலும் உபயோகிக்கலாம்.

ஆ.விஜயராகவன்
ஆ.விஜயராகவன்

வெள்ளைக் கடம்ப மரத்தின் பழம் வயிற்று நோய்க்கும், பூக்கள் வாசனை பொருள்களுக்கும், இலை தீவனம், வாய்ப்புண், தொண்டைப்புண் எனப் பல வழிகளில் மருந்தாகப் பயன்படுகிறது. கடம்ப மரத்தைக் கடல்மட்டத்திலிருந்து 1,300 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் வளர்க்கலாம். ஆழமான, ஈரமான, நல்ல வடிகால் வசதியுடைய வண்டல் மண், ஆற்றின் ஓரப் பகுதிகள், ஏரியின் கரைப் பகுதிகளிலும் இம்மரங்களைச் சாகுபடி செய்யலாம். உப்பு நீர்ப் பகுதிகள், மண்ணில் காற்றோட்டம் இல்லாத நிலங்களிலும் வளரும். ஒரு வருடத்துக்கு 5 மீட்டர் உயரம் வரை வளரும். மரத்தின் சுற்றளவு வருடத்துக்கு 70 முதல் 125 செ.மீ வரை வளரக் கூடியது’’ என்றார். தொடர்ந்து, நாற்றங்கால் தயாரித்தல், நடவு முறை, நீர் மேலாண்மை, நோய் மேலாண்மை, நோய் தாக்குதல், அறுவடை, வருமானம், ஏற்றுமதி உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு, வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

நன்றிவுரையாற்றிய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் செந்தில்குமார், ‘‘மரம் வளர்ப்பு தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் பணியினை எங்கள் நிறுவனம் செய்துவருகிறது. இது போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு