Published:Updated:

நாட்டியக்கலையுடன் தோட்டக்கலையும்! - அசத்தும் கலா மாஸ்டர்

கலா மாஸ்டர்
பிரீமியம் ஸ்டோரி
News
கலா மாஸ்டர்

வாசகர் அரங்கம்

மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம்தான் தற்போது நகரவாசிகளிடம் டிரெண்ட். இதற்காகவே கடந்த சில தினங்களுக்கு முன் `அவள் விகடன்’ மற்றும் `பசுமை விகடன்’ இணைந்து இணைய வாயிலாக (Zoom meeting) பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியில் வீட்டுத் தோட்டம் பற்றிய தன் அனுபவங்களை நூற்றுக்கணக்கான வாசகிகளிடம் ஆர்வம் பொங்கப் பகிர்ந்துகொண்டார் திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாடித்தோட்டம் வைத்துப் பராமரித்து வருகிறேன். ஊரடங்கில் தோட்டத்தைப் பராமரிக்க அதிக நேரம் கிடைத்தது. வீட்டில் சாமிக்கு பூ வைக்க வேண்டும் என்றுதான் பூச்செடிகள் வளர்க்க ஆரம்பித்தேன். ரோஜா, சங்குப்பூ, ஜாதிமல்லி, முல்லை, அரளி, போகன்வில்லா, செம்பருத்தி, இட்லிப்பூ. நித்தியகல்யாணி, பவள மல்லி, செண்டு மல்லி என்று முதலில் பூச்செடிகளுடன் மாடித்தோட்டத்தை ஆரம்பித்தேன்.

நாட்டியக்கலையுடன் தோட்டக்கலையும்! - 
அசத்தும் கலா மாஸ்டர்

என் தோழி, நடிகை விஜி சந்திரசேகரின் வீட்டுக்குச் சென்றபோது, அவர் வீட்டு மாடியில் காய்கறிச் செடிகள் இருந்ததைப் பார்த்ததும் எனக்கும் காய்கறித் தோட்டம் அமைக்கும் ஆசை வந்தது. அதிலிருந்து கறிவேப்பிலை, கத்திரிக்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை வளர்த்து வருகிறேன். முதலில் செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்துக் கொண்டிருந்தேன். நம்மாழ்வார் எழுதிய புத்தகத்தைப் படித்த பிறகு, பூச்சிகளைக் கொல்லக்கூடாது. ஆனால், விரட்டலாம் என்பதைப் புரிந்துகொண்டு இயற்கையாகவே பூச்சிகளை விரட்ட ஆரம்பித்தேன். பசுமை விகடனில் வரும் குறிப்புகளைப் பின்பற்றி என் மாடித் தோட்டத்தைப் பராமரித்து வருகிறேன். நானே பஞ்சகவ்யம் தயாரித்துப் பயன்படுத்தி வருகிறேன். முட்டை ஓட்டைப் பொடித்த தூள், வெங்காயத்தோல், டீத்தூள், அரிசி கழுவிய தண்ணீர், வேப்ப எண்ணெயைத் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு அடிப்பேன்” டிப்ஸ் சொன்னபடியே தன் வீட்டுத்தோட்டத்தைக் காணொலி வழியாக விகடன் நேயர்களுக்குக் காண்பித்தார்.

மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பான நேயர்களின் கேள்வி களுக்கும் சந்தேகங்களுக்கும் விடை யளித்தார்.

“தோட்டம் என்பது மிகவும் அழகான விஷயம். வீட்டில் நாம் வளர்க்கும் காய்கறிகளைப் பறித்து சமைத்துச் சாப்பிடும்போது கிடைக்கும் சந்தோஷம் எதற்கும் ஈடாகாது” என்று நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நாட்டியக் கலையைப் போன்றே கலா மாஸ்டர் தோட்டக்கலையிலும் சிறந்து விளங்க அவள் விகடனின் வாழ்த்துகள்!