Published:Updated:

ஹரியானாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 2 எருமைக் கன்றுகள்; என்ன பயன்?

எருமைக் கன்று (Representational image) ( Mark Stebnicki from pexel )

குளோனிங் துறையில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை செய்து வந்த இந்த என்.டி.ஆர்.ஐ நிறுவனம், தற்போது இரண்டு எருமைக் கன்றுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

ஹரியானாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 2 எருமைக் கன்றுகள்; என்ன பயன்?

குளோனிங் துறையில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை செய்து வந்த இந்த என்.டி.ஆர்.ஐ நிறுவனம், தற்போது இரண்டு எருமைக் கன்றுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

Published:Updated:
எருமைக் கன்று (Representational image) ( Mark Stebnicki from pexel )

ஹரியானா மாநிலத்தின் கர்னால் பகுதியில் அமைந்துள்ள தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் (NDRI - National Diary Research Institute) இந்தியாவின் பால் ஆராய்ச்சிக்கான முதன்மை நிறுவனமாகும்.

குளோனிங் துறையில் தொடர்ந்து ஆராய்ச்சிகளைச் செய்து வந்த இந்த என்.டி.ஆர்.ஐ நிறுவனம், தற்போது இரண்டு எருமைக் கன்றுகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட கன்றுகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். அதிக அளவு பால் கொடுக்கும் மரபணு திறனைக் கொண்டுள்ள எருமைக்கன்றுகளை, இப்படி குளோனிங் முறையில் உற்பத்தி செய்கின்றனர். இதன் மூலமாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, நாட்டின் பால் உற்பத்தியையும் இரட்டிப்பாக்கிட முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பால் உற்பத்தியைப் பொறுத்தவரையில், சாதாரண எருமைகளை விட, குளோனிங் செய்யப்பட்ட எருமையின் விந்து மூலமாகப் பிறக்கும் எருமைகள் நாள் ஒன்றுக்கு 14 முதல் 16 லிட்டர் வரை பால் கொடுக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தொழில்நுட்பம் வெற்றியடைந்தது குறித்து, என்.டி.ஆர்.ஐ-யின் இயக்குநர் டாக்டர் எம்.எஸ்.சௌஹான் கூறுகையில், ``விவசாயப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை கால்நடை வளர்ப்புக்கு இந்தியாவில் முக்கிய இடமுண்டு. மொத்த பால் உற்பத்தியில் எருமை மாடுகள் கிட்டத்தட்ட 50% பங்களிப்பை அளிக்கின்றன. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு முக்கியப் பங்காற்றும்.

இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி சரியான திசையை நோக்கி நகர்கிறது; குளோனிங் துறையில் இது திருப்புமுனையான தருணம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Research
Research

ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று பிறந்த ஆண் கன்றை `கந்தந்த்ரா' என அழைக்கின்றனர். இது ஓர் உயரகக் காளையின் குளோன். டிசம்பர் 20-ம் தேதி பிறந்த பெண் கன்றை `கர்னிகா' என அழைக்கின்றனர். இது அதிக பால் கறக்கும் எருமையின் செல்களிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை பிரசவத்தின் மூலமாகவே இந்த இரண்டு கன்றுகளும் பிறந்து, நல்ல நிலையில் தற்போது உள்ளதென என்.டி.ஆர்.ஐ-யின் மூத்த விஞ்ஞானியான மனோஜ் குமார் சிங் கூறியுள்ளார்.

குளோனிங் முறையில் பிறக்கும் விலங்குகள் விரைவாகவே இறந்துவிடும். எனவே, இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காகக் கவனம் செலுத்தி வருகிறது என்டிஆர்ஐ. இதுவரையில் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட குளோனிங் செய்யப்பட்ட விலங்குகளை என்.டி.ஆர்.ஐ உருவாக்கிய நிலையில், அவற்றில் 11 மாடுகள் இன்றும் உயிரோடு உள்ளது குறிப்பிடத்தக்க சாதனையே.

``இந்த மாடுகள் பால் உற்பத்தியின் தேவையைப் பூர்த்தி செய்யும். அதுமட்டுமல்லாமல் செயற்கை முறையில் கருவூட்டுவதற்கு விந்துவின் தேவையையும் பூர்த்தி செய்ய உதவும்" என என்.டி.ஆர்.ஐ இயக்குநர் மன்மோகன் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.