Published:Updated:

`எங்கள் விற்பனையும் லாபமும் உயர புனித் ராஜ்குமாரும் காரணம்!' - பால் விவசாயிகளுக்காக உதவிய புனித்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விளம்பரத்தில் புனித் ராஜ்குமார்
விளம்பரத்தில் புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார், நமது ஊர் விஜய், அஜீத்துக்கு இணையாக கர்நாடகாவில் பிரபலமாக இருந்தவர். அவரே விவசாயிகளுக்காக நடத்தப்படும் ஓர் அமைப்புக்கு பணம் வாங்காமல் விளம்பரத் தூதுவராக இருந்தார்.

நமது ஊர் ஆவின் போன்றே கர்நாடகாவில் இயங்கும் பால் கூட்டுறவு அமைப்பின் பிராண்டு நந்தினி. கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பின் மூலம் 22,000 கிராமங்களில் 24 லட்சம் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு பால் மற்றும் பால் பொருள்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் அமுல் பால் நிறுவனத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறது கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பு. நமது ஊர் ஆவினுக்குப் (1958) பிறகு 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் பிராண்டு அம்பாஸிடராக இருந்து வந்தார் புனித் ராஜ்குமார். நந்தினி பிராண்டு மூலம் தயாரிக்கப்படும் பால் பொருள்களின் விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார். கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பின் ஆண்டு வருமானம் 8 கோடியில் இருந்தது. தற்போது 16,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. கர்நாடகா மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் நந்தினி பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விளம்பரத்தில் புனித் ராஜ்குமார்
விளம்பரத்தில் புனித் ராஜ்குமார்
Doctor Vikatan: புனித் ராஜ்குமாருக்கு ஏற்பட்ட மாரடைப்பு; பலருக்கு உடற்பயிற்சியின்போது  ஏற்படுவதேன்?

இதுகுறித்து கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் பிரேம்நாத் தெரிவித்துள்ளதாவது, ``கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பின் தூதுவராக இருந்து வந்த நடிகர் ராஜ்குமார் 2006-ம் ஆண்டு காலமானார். அவருடைய இறப்புக்குப் பிறகு 2011-ம் ஆண்டு புனித் ராஜ்குமாரை அணுகினோம். உடனடியாகத் தூதுவராக இருக்க சம்மதித்துவிட்டார். விளம்பர படங்கள், புகைப்படங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டோம்.

`எங்கப்பா ஐந்து பைசா வாங்காமல், விவசாயிகளுக்காக நடத்தப்படும் பால் கூட்டுறவு அமைப்புக்காகத் தூதுவராக இருந்தார். அதேபோன்று நானும் இருக்கிறேன். பணம் எதுவும் வேண்டாம். விளம்பரப் படங்களை எப்போது எடுக்கிறீர்கள் என்று மட்டும் சொல்லுங்கள், வந்து நடித்துக் கொடுக்கிறேன்' என்று சொல்லி பணம் வாங்க மறுத்துவிட்டார். அவருடைய விளம்பரங்களால் பால் பொருள்களின் விற்பனை உயர்ந்தது. பால் கூட்டுறவும் லாபமாக இயங்க உதவியது” என்று தெரிவித்திருக்கிறார்.

புனீத் ராஜ்குமார்
புனீத் ராஜ்குமார்

``தமிழ்நாட்டிலும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்பு இருக்கிறது. இதன் பிராண்டு பெயர் ஆவின். இதில் 20 லட்சம் விவசாயிகள் பால் உற்பத்தி செய்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பால் விவசாயிகளுக்காக நடத்தப்படும் ஆவினுக்கும் இதுபோன்று நடிகர்கள் பிராண்டு அம்பாஸிடராக இருந்தால், அதன் விற்பனை இன்னும் அதிகரிக்கும். கிராமங்களில் 1, 2 மாடுகளை வைத்து பால் உற்பத்தி செய்து வரும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். தமிழ்நாட்டில் பனைபொருள்களுக்கு 1980-களில் விளம்பரப் படங்களில் நடித்துக் கொடுத்தார் நடிகர் ரஜினிகாந்த். அதேபோன்று கொரோனா விழிப்புணர்வுக்ககாக சில நடிகர்கள் நடித்துக் கொடுத்தனர். ஆனால், பால் விவசாயிகளுக்காகச் செயல்படும் ஆவினுக்கு இதுவரை விளம்பரத் தூதர்கள் இருப்பதாக அறியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகர் ராஜ்குமாரை `கர்நாடகாவின் எம்.ஜி.ஆர்' என்று சொல்லலாம். அந்தளவுக்கு அங்கே பிரபலமாக இருந்தார். அவரே கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்புக்கு விளம்பரத் தூதுவராக இருந்திருக்கிறார். அவருடைய மகன் புனித் ராஜ்குமார், நமது ஊர் விஜய், அஜீத்துக்கு இணையாக கர்நாடகாவில் பிரபலமாக இருந்தவர். அவரே விவசாயிகளுக்காக நடத்தப்படும் ஓர் அமைப்புக்கு பணம் வாங்காமல் விளம்பரத் தூதுவராக இருந்தார். இங்கே அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருக்கும் விஜய் ஆகட்டும், பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்டிருக்கிற அஜீத் ஆகட்டும், தமிழ்நாட்டு பால் விவசாயிகளுக்காக ஏன் விளம்பரத் தூதுவராக இருக்கக் கூடாது.

அஜீத், விஜய்
அஜீத், விஜய்
"அவர் ஊர்ல அவர் ராஜா" - புனித் ராஜ்குமாருடனான நினைவுகள் பகிரும் சமுத்திரக்கனி

தங்களுடைய ரசிகர்களை ஆவின் பால் பொருள்களைப் பயன்படுத்துங்கள் என்று ஏன் அறிவுறுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் பனைபொருள்கள், கதர் துணிகள், பால் பொருள்கள், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளை பொருள்களுக்கு நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து விற்பனைக்கு வழி வகுத்தால் விவசாயிகள் வாழ்வு இன்னும் செழிக்கும்” என்று கோரிக்கை வைக்கிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் ஜெயக்குமார்.

புனித் ராஜ்குமார் கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்புக்கு மட்டும் விளம்பரத் தூதுவராக இருக்கவில்லை. பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம், கர்நாடகா மாநில தேர்தல் ஆணையம், பெஸ்காம் என்று பல அரசு அமைப்புகளுக்குத் தூதுவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு இயற்கையின் மீது பெரிய ஆர்வம் கொண்டவர். மலைகளுக்கு ட்ரெக்கிங் போவது, இயற்கையை ரசிப்பது என்று ஆர்வமாக இருந்தவர். விவசாயப் பண்ணையும் நடத்தி வந்தார். மாடுகளுக்காகச் கோசாலாவும் நடத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு