Election bannerElection banner
Published:Updated:

கரூர்: பாதிக்குப் பாதியாக குறைந்த வெற்றிலை விலை... கலக்கத்தில் விவசாயிகள்!

வெற்றிலை விவசாயம்
வெற்றிலை விவசாயம் ( நா.ராஜமுருகன் )

திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளதால், வெற்றிலை கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் குறைந்த அளவு வெற்றிலையையே வாங்கிச் செல்கின்றனர். இதனால், வெற்றிலையின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

தமிழகத்தில் நடக்கும் சுப, துக்க காரியங்களில் முதன்மையான வஸ்துவாக இருப்பது வெற்றிலை தான். அதோடு, செரிமான பிரச்னை சரிசெய்வதிலும், இன்னபிற வியாதிகளையும் குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. இதனால், வெற்றிலைக்கு எப்போதும் நல்ல கிராக்கி இருக்கும். ஆனால், கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடை காரணமாக, அதன் விலை பாதிக்கு பாதியாக குறைந்துள்ளதாக, கரூர் மாவட்ட வெற்றிலை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

வெற்றிலை விவசாயம்
வெற்றிலை விவசாயம்
நா.ராஜமுருகன்
நாமக்கல்: கூட்டுறவு சங்கத்தில் ரூ.31.78 லட்சம் மோசடி; தலைவர், செயலாளர் கைது... என்ன நடந்தது?

கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். தற்போது, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளதால், வெற்றிலை கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் குறைந்த அளவு வெற்றிலையையே வாங்கிச் செல்கின்றனர்.

வெற்றிலை விவசாயம்
வெற்றிலை விவசாயம்
நா.ராஜமுருகன்

இதனால், வெற்றிலையின் விலை சரிவைச் சந்தித்துள்ளது. 104 கவுளிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை கடந்த வாரங்களில் ரூ. 6,000-க்கு விற்பனையானது. ஆனால், தற்போது ரூ. 3000-க்கு மட்டுமே விற்பனை ஆகி வருவதால், வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். கொரோனாவால் வெற்றிலையின் தேவை குறைந்துள்ளதால், அதனை குறைந்த அளவே இடைத்தரகர்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், பல இடங்களில் வெற்றிலை கொடிக்காலிலேயே அறுவடை செய்யாமல் விடப்படுவதால், அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், `ஆயிரக்கணக்கான வெற்றிலை விவசாயிகளின் வேதனையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனா தடை உத்தரவால், எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்' என்று வெற்றிலை நடவு செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு