Published:Updated:

1,000 ரூபாயில் களை எடுக்கும் கருவி! - கரூர் விவசாயியின் கண்டுபிடிப்பு!

வயலில் களையெடுக்கும் கருவியுடன் துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
வயலில் களையெடுக்கும் கருவியுடன் துரைசாமி

கருவி

1,000 ரூபாயில் களை எடுக்கும் கருவி! - கரூர் விவசாயியின் கண்டுபிடிப்பு!

கருவி

Published:Updated:
வயலில் களையெடுக்கும் கருவியுடன் துரைசாமி
பிரீமியம் ஸ்டோரி
வயலில் களையெடுக்கும் கருவியுடன் துரைசாமி
‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்றார் கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ. அதை உறுதிப்படுத்தியிருக்கிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி துரைசாமி. களைவெட்டும் வேலைக்கு ஆள் கிடைக்காத காரணத்தால், புதிதாகக் களைவெட்டும் கருவி ஒன்றை வடிவமைத்தார். அது இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கிறது.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் உள்ள குமாரமங்கலத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. தான் கண்டுபிடித்த கருவிமூலம் காய்கறி வயலில் செடிகளுக்கு இடையில் மண்டி கிடந்த களைச்செடிகளை வெட்டிக் கொண்டிருந்த துரைசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

வீல்களுடன் கூடிய கருவியின் பாகங்கள்
வீல்களுடன் கூடிய கருவியின் பாகங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நான் பி.எஸ்ஸி படிப்பை முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். விவசாயத்துல புதுசா ஏதாச்சும் கருவி வந்தா, அதை முதல்ல வாங்கிப் பயன்படுத்திடுவேன். சில நாள்கள்ல அந்தக் கருவிகளைப் பார்த்து, அதுமாதிரி வேறொரு கருவியை வடிவமைச்சு பயன்படுத்துவேன். நெல் கதிரடிக்குற மெஷினை அப்படித்தான் செஞ்சு (கூண்டு வண்டி) விவசாயத்துக்குப் பயன்படுத்தினேன். விவசாயிகள் மத்தியில அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

இந்த நிலையில, புதுசா வாங்குன தோட்டத்துல களை பறிக்க ஆள் கிடைக்கலை. அதனால, ஒரு களை வெட்டுற கருவியை நாமே சொந்தமா உருவாக்கணும்னு நினைச்சேன். 2010-ம் வருஷம் ஒரு மாடலை உருவாக்குனேன். அந்த மாடலுக்குப் ‘பலராம் வீடர்’னு பேர் வெச்சேன். அதை வேளாண் அறிவியல் மையம், ஐ.சி.ஏ.ஆர் ஹைதராபாத், டெல்லியில இருக்க அகில இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம்னு பல இடங்கள்ல நடந்த கண்காட்சிகள்ல பார்வைக்கு வெச்சேன். பலரையும் அது கவர்ந்துச்சு.

கருவியுடன்
கருவியுடன்

வாய்ப்புக்கொடுத்த நபார்டு

இந்த நிலையில், கரூர் கே.வி.கே மற்றும் நபார்டு வங்கி மூலமா ஒரு புராஜெக்ட் கிடைச்சது. ரூ.2,95,000 மானியம் கொடுத்தாங்க. அந்தப் பணத்தை முதலீடா வெச்சு, இந்தப் பலராம் வீடரை உருவாக்குனேன். 2012-13-ம் வருஷத்துல அந்த புராஜெக்ட் வெற்றிக்கரமா முடிஞ்சது. 2017-ம் வருஷம் கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழத்தில இருக்க அறிவுசார் சொத்துப் பதிவுத் துறையின் கீழ் இந்தக் கருவிக்கு, ‘டிசைன் காப்பிரைட்’ கொடுத்தாங்க. இந்தக் கருவியை, பல வேளாண் கண்காட்சிகள்ல பார்வைக்கு வெச்சேன். நிறைய விவசாயிகள் இதைப் பார்த்துப் பாராட்டியதோடு, இந்தக் கருவியைக் கேட்டு ஆர்டர் கொடுத்தாங்க. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும் ஹைதராபாத் ஐ.சி.ஏ.ஆரிலும், இந்தப் பலராம் வீடரை நிரந்தரமா காட்சிப்பொருளா வெச்சிருக்காங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மோடி கையால் விருது

2011-ம் வருஷம் கோவை வேளாண் பல்கலைக்கழகம் இதற்கு, சிறப்பு அவார்டு கொடுத்தது. அதேபோல, குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தப்ப, அவர் கையால் சிறந்த விவசாயி விருது வாங்கினேன். இந்த வருஷம் டெல்லியில நடந்த அகில இந்திய வேளாண் கண்காட்சியில இதுக்கு சான்று கிடைச்சது. இப்படிப் பல விருதுகளும் பாராட்டுகளும் இந்தக் களைவெட்டும் கருவி கண்டுப்பிடிப்புக்குக் கிடைச்சது. இந்தக் களைவெட்டும் கருவியோட விலை 1,000 ரூபாய். தமிழ்நாடு, ஆந்திரா மாநில விவசாயிகள் இதை ஆர்வமா வாங்குறாங்க. இதுவரைக்கும் 1,500 கருவிகளை விற்பனை பண்ணியிருப்பேன்’’ என்றவர் கருவியின் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

வயலில் களையெடுக்கும் கருவியுடன் துரைசாமி
வயலில் களையெடுக்கும் கருவியுடன் துரைசாமி

ஐ.சி.ஏ.ஆர் அங்கீகாரம்

“நெம்புகோல் தத்துவத்தில் இயங்கும் இந்தக் கருவிமீது, நாம் ஒரு கிலோ விசையைச் செலுத்தினால், அது 8 முதல் 10 கிலோ வரையிலான விசையாகச் செயல்படும். இது ஐ.சி.ஏ.ஆர் அங்கீகாரம் பெற்றது. மற்ற களை வெட்டும் கருவிகள், நிரந்தரமா ஓர் அமைப்போடு இருக்கும். ஆனால், பலராம் வீடரில் 2 வீல்கள், 1 போர்க், முன்பக்கம் வெட்டும் கத்தி, பின்பக்கம் நீளமான கைப்பிடி குழாய் என்ற அமைப்புடன் இருக்கும். அதேபோல் மற்ற பயிர்களுக்கு இடையில் களை வெட்டுவதற்கு ஏற்றபடி, தேவையான அளவுல கத்தியை மாத்திப் பொருத்தி பயன்படுத்தலாம். அந்தவகையில், 4 லிருந்து 10 அங்குலம்வரை உள்ள கத்திகளை மாத்தி மாத்திப் பொருத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றவர் நிறைவாக,

தோட்டக்கலைப் பயிர்களுக்கு இடையில் இருக்குற களையை இந்தக் கருவிமூலம் எளிதாக வெட்டலாம்.

“இந்தக் கருவியின் முக்கியப் பாகங்களை நானே வடிவமைச்சுக்கிறேன். மீதமுள்ளவற்றை, அருகில் உள்ள பட்டறையில் கொடுத்துச் செய்து வாங்கிப் பொருத்துவேன். தோட்டக் கலைப் பயிர்களுக்கு இடையில் இருக்குற களையை இந்தக் கருவிமூலம் எளிதாக வெட்டலாம். ஆழமான வேருள்ள கோரையைக் கூட இந்தப் பலராம் வீடர் சுலபமா வெட்டி எடுக்கும். அடிவேர்வரை களையை இது அப்புறப்படுத்துறதால, கருவி வெட்டிய களைகளை எடுக்க வேண்டியதில்லை. வேர் இல்லாததால, அந்தக் களைகள் காய்ஞ்சிடும். அதேபோல, இந்தப் பலராம் வீடர்ல களைவெட்டுறதுக்கு முன்ன, தோட்டத்தை நடுத்தரமான ஈரப்பதத்துல வெச்சுக்கணும். அப்பத்தான் தடையில்லாம இந்தக் கருவி களை வெட்டும்.

மாதம் ரூ.15,000 கூடுதல் வருமானம்

விவசாய வேலைகள் நடக்குற சீஸன்ல மாசத்துக்கு 40 கருவிகள் வரைக்கும் விற்பனை யாகும். மத்த மாசங்கள்ல மாசம் 15 கருவிகள் வரை விற்பனை ஆகுது. விவசாயம்தான் முழுநேர வேலை. இடையில கிடைக்குற ஓய்வுநேரத்திலதான் இந்தப் பலராம் வீடர் கருவி செய்யுற வேலைகள்ல இறங்குவேன். இதைத் தயாரிச்சு விற்பனை செய்றது மூலமா, எல்லாச் செலவுகளும் போக, மாசம் 15,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது. எல்லாத் தையும்விட, விவசாயிகளுக்கு எளிமையான முறையில விவசாய வேலை பார்க்கச் சிறந்த கருவியைச் செய்துகொடுக்க முடியுதே என்ற மகிழ்ச்சிதான், இதை விடாமல் என்னைச் செய்ய வைக்குது” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, துரைசாமி, செல்போன்: 99653 45400.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எளிமையானகளை வெட்டும் கருவி!

துரைசாமியின் பலராம் வீடர் பற்றி, புழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும் தலைவருமான முனைவர் திரவியத்திடம் பேசினோம். “துரைசாமி வடிவமைத்துள்ள இந்தப் பலராம் வீடர் அறிவியல்பூர்வமான, எளிய விவசாயக் களை வெட்டும் கருவி. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதை கே.வி.கே மூலமாக, நபார்டு வங்கியின் புராஜெக்டாகச் செய்ய, நாங்கள் துரைசாமிக்கு உதவினோம். தொடர்ந்து, வேளாண் அறிவியல் மையம் (கே.வி.கே) சம்பந்தமான ஆய்வுகள், கண்காட்சிகளில் துரைசாமியின் இந்த பலராம் வீடரைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தோம். அதோடு, அவருக்கு ‘இன்னோவேட்டிவ் விவசாயி’ என்று அவார்டு கிடைக்க வழிவகைச் செய்தோம். பெங்களூருவில் நடைபெற்ற கண்காட்சியில், அப்போதைய மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார், இந்தப் பலராம் வீடரை ஆர்வமாக விசாரித்து, துரைசாமியைப் பாராட்டினார். துரைசாமியின் இந்தக் கண்டுபிடிப்புக்கு, புழுதேரி கே.வி.கேயும் ஒரு துரும்பாக இருந்து உதவியது என்பது உண்மையில் மகிழ்ச்சியே” என்றார் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism