பாடப்புத்தகம் என்பது மாணவர்களின் கற்றலுக்கான வெளியைத் தொடங்கிவைக்கும் ஊடகம். அதுமட்டுமே அறிவல்ல. கற்பிக்கும் ஆசிரியர்கள், பாடப்புத்தகம் வழியாக, வாழ்தலுக்கான அறிவையும் பண்பாட்டையும் பாரம்பர்யத்தையும் கற்றுத்தர வேண்டும். அப்படிக் கற்றுத்தரும் ஆசிரியர்களே நல்லாசிரியர்களாக கொண்டாடப்படுகிறார்கள். மாணவர்களால் காலம் முழுமையும் நினைவில் கொள்ளப்படுகிறார்கள். அப்படியான ஆசிரியர்களில் ஒருவர்தான் பொன்னுசாமி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள தே.இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் பொன்னுசாமி. இந்தப் பள்ளிக்கு அருகில்தான் நம்மாழ்வார் நிரந்தர துயில்கொள்ளும் வானகம் இருக்கிறது.

அங்கே நடக்கும் இயற்கை சார்ந்த முன்னெடுப்புகளில், தனது பள்ளியைச் சேர்ந்த மாணவர்களைப் பங்குபெறச் செய்து இயற்கை அறிவை வளர்த்து வருகிறார். அதோடு, பள்ளியில் மாணவர்களை வைத்து, தோட்டம் அமைத்து இயற்கை விவசாயமும் செய்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பள்ளியருகே இருக்கும் சிறு இடத்தில் நம் பாரம்பர்ய ரகமான மாப்பிள்ளை சம்பா நெல்லை விதைத்து, நாற்றாக்கி, அதைக்கொண்டு மாணவர்களை வைத்து ஒற்றை நாற்று முறையில் நடவுசெய்ய வைத்திருக்கிறார்.

விதை விதைப்பது, நாற்று பறிப்பது, நடவு நடுவது என வேளாண்மை சார்ந்த அனைத்து விஷயங்களையும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறார். பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் பொன்வண்டு ஒன்று இருக்க, அதைப் பிடித்து தான் சிறுவயதில் பொன்வண்டு பிடித்து வளர்த்தது, அதுபோடும் முட்டைகளைக் காண்பதற்காக தவம் கிடந்தது, பொன்வண்டை வைத்து விளையாண்டது என்று தனது பால்ய கால அனுபவங்களைச் சொல்ல, ஆச்சர்யம் விலகாமல் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். நிறைய கேள்விகளையும் கேட்டிருக்கிறார்கள்.
``மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தோட சேர்த்து அனுபவக் கல்வியையும் தர விரும்புறேன். அதற்காகத்தான் வானகத்தையும் நம்மாழ்வாரையும் அவங்களுக்கு அறிமுகப்படுத்திக் கற்றுக்கொடுக்கிறேன். நாம் அனுபவித்த வாழ்க்கையையும் அதில் இருந்த அலாதியான அனுபவங்களையும் இப்போது உள்ள மாணவர்கள் துளியும் அனுபவிக்கலை.

அதனால்தான், எனது சிறுவயது அனுபவங்களைப் பகிர்ந்து அதுமாதிரியான கிராமத்து வாழ்க்கை சார்ந்த வாழ்க்கை மேல அவங்களுக்கு ஈடுபாடு உருவாக்க முயல்கிறேன். உடம்புக்கு உகந்த இயற்கை விவசாய முறைகளையும் பாரம்பர்ய விஷயங்களையும் அவர்கள் தெரிந்துகொள்ளணும். அதற்காகத்தான் மாப்பிள்ளைச் சம்பா நெல்லை பள்ளிக்குப் பக்கத்திலேயே விவசாயம் செஞ்சு காமிக்கிறேன்.
அது விளைஞ்சு, அந்த அரிசியில மதிய உணவு சமைச்சு, எங்க பள்ளித் தோட்டத்துல இயற்கையா விளையும் காய்கறிகளைக் கொண்டு குழம்பு, கூட்டெல்லாம் வச்சு மாணவர்களுக்கு மதிய சாப்பாடு போடணும். அதன் ருசியை அவங்களை உணரவச்சு, சிறுவயதிலேயே அவர்களுக்குள் இயற்கை விவசாயத்தை விதைப்பதுதான் இதன் நோக்கம். மரத்தில் இருந்த பொன்வண்டை காண்பித்தபோது, அதன் பெயர்கூட மாணவர்களுக்குத் தெரியல. பொன்வண்டு உடனான எனது சிறுவயது அனுபவங்களைச் சொன்னதும், ஆர்வமா கேட்டுக்கிட்டாங்க.

``இப்போ ஏன் சார் பொன்வண்டுகளைப் பார்க்க முடிவதில்லை?"னு கேட்டாங்க. `பொன்வண்டு, சிட்டுக்குருவிகளெல்லாம் அழிஞ்சுபோனதற்கான காரணங்களைச் சொன்னதும், வருத்தப்பட்டாங்க. `இயற்கையை சீரமைக்க நம்மாலான முயற்சிகளை செய்வோம்'னு எல்லோரும் உறுதி எடுத்துக்கிட்டோம்..." என்று கூறும் பொன்னுசாமியின் குரலில் வழிகிறது நம்பிக்கை.
விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் வெல்லட்டும்.