Published:Updated:

"ஐபிஎஸ் பணியிலிருந்து சமூக சேவையோடு இயற்கை விவசாயம் பக்கம் வந்தது ஏன்?" -`கர்நாடக சிங்கம்' அண்ணாமலை

அர்ஜுன் அண்ணாமலை தனது தோட்டத்தில்... ( நா.ராஜமுருகன் )

இவர் அங்கே பணியாற்றிய ஏ.எஸ்.பி, எஸ்.பி, டி.சி.பி பதவி காலங்களில் இவர் குற்றவாளிகளிடம் காட்டிய அதிரடியைப் பார்த்து, அந்த மக்கள் `கர்நாடக சிங்கம்' என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த வேலையைத்தான் ராஜினாமா செய்துவிட்டு, வேறொரு ரூட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

"ஐபிஎஸ் பணியிலிருந்து சமூக சேவையோடு இயற்கை விவசாயம் பக்கம் வந்தது ஏன்?" -`கர்நாடக சிங்கம்' அண்ணாமலை

இவர் அங்கே பணியாற்றிய ஏ.எஸ்.பி, எஸ்.பி, டி.சி.பி பதவி காலங்களில் இவர் குற்றவாளிகளிடம் காட்டிய அதிரடியைப் பார்த்து, அந்த மக்கள் `கர்நாடக சிங்கம்' என்று அடைமொழி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த வேலையைத்தான் ராஜினாமா செய்துவிட்டு, வேறொரு ரூட்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

Published:Updated:
அர்ஜுன் அண்ணாமலை தனது தோட்டத்தில்... ( நா.ராஜமுருகன் )

"நாடு போற போக்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள். வருமானத்தை எல்லாம் டாஸ்மாக்குல விட்டுட்டு, குடும்பத்தை கஷ்டத்துல விடுறாங்க உழைப்பாளிங்க. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அரசியல்வாதிகள், ஓட்டுகளை வியாபாரமாக்கிட்டாங்க. எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்கள்ல இதுவரை ஓட்டுக்குப் பணம் கொடுத்தவங்க, அந்தக் கொடுமையை இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் 600, 700 எனப் பணம் கொடுக்கும்வரைக்கும் வந்துட்டாங்க. மக்களும் அதைச் சங்கடமே இல்லாம வாங்குறாங்க. கெட்ட விஷயம், நல்ல விஷயம் எதுங்கிற விழிப்புணர்வும் மக்களுக்கு இல்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆள் இல்லை.

அர்ஜுன் அண்ணாமலை
அர்ஜுன் அண்ணாமலை
நா.ராஜமுருகன்

காரணம், சமூகத்தில் லீடர்ஷிப் இல்லை. அதனால்தான், எனது ஒன்பது வருடம் போலீஸ் வேலையை உதறித் தள்ளிவிட்டு, `வி த லீடர்'ங்கிற சமூக அமைப்பை ஆரம்பித்திருக்கிறேன். இது அரசியல் அமைப்பு அல்ல; அரசியலைத் தூய்மைப்படுத்தும் அமைப்பு; மக்களை விழித்தெழுச் செய்யும் அமைப்பு" என்று பலருக்கும் கனவாக இருக்கும் போலீஸ் வேலையை, தான் உதறித் தள்ளியதைச் சாதாரணமான நிகழ்வாக்கி, ஆழமாகவும் அர்த்தமாகவும் பேச்சைத் தொடங்குகிறார் அர்ஜுன் அண்ணாமலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பலருக்கும் கனவாக இருக்கும் ஐ.பி.எஸ் தேர்வை தனது 25 வயதிலேயே எழுதி, ஜெயித்தவர் அர்ஜுன் அண்ணாமலை. ஒன்பது வருடங்கள் கர்நாடக மாநிலத்தில் பணி. அங்கு தலைவலியை ஏற்படுத்திய மத மோதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது, சிக்மங்களூரில் குடைச்சல் கொடுத்த 7 முக்கிய நக்சலைட்களை சரணடைய வைத்து அமைதி வாழ்க்கைக்குத் திருப்பியது, ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற காவல் நிலையங்களை உருவாக்கியது, சாமான்யர்கள் அளிக்கும் மனுக்களுக்கும் 7 நிமிடங்களில் எஃப்.ஐ.ஆர் போட வைத்து, ஒரே வாரத்தில் பிரச்னைகளைத் தீர்க்க உத்தரவாதம் ஏற்படுத்தியது என்று அங்கே இவர் சாதித்தவை ஏராளம்.

அர்ஜுன் அண்ணாமலை
அர்ஜுன் அண்ணாமலை
நா.ராஜமுருகன்

இதனால், இவர் அங்கே பணியாற்றிய ஏ.எஸ்.பி, எஸ்.பி, டி.சி.பி பதவி காலங்களில் இவர் குற்றவாளிகளிடம் காட்டிய அதிரடியைப் பார்த்து, அந்த மக்கள் `கர்நாடக சிங்கம்' என்று இவருக்கு அடைமொழி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த வேலையைத்தான் ராஜினாமா செய்துவிட்டு, சமூக அமைப்பு, இயற்கை விவசாயம், நாட்டு மாடுகளைக் காத்தல் என்று வேறொரு ரூட்டில் பயணிக்க, நிதானமாக அடியெடுத்து வைத்திருக்கிறார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில் உள்ள தொட்டம்பட்டிதான், அர்ஜுன் அண்ணாமலையின் சொந்த ஊர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரூர் வருகை தந்த அர்ஜுன் அண்ணாமலையைச் சந்தித்துப் பேசினோம். "எங்களுடையது விவசாயக் குடும்பம்தான். முதல்ல, இன்ஜினீயராகணும்னு சொல்லி, 2007-ம் வருடம் கோவையில் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சேன். ஆனால், படிக்கிற காலத்தில், `இன்ஜினீயர் மூலமா மத்தவங்கிட்ட அடிமையா இருக்கக் கூடாது; சொந்தமா பிசினஸ் பண்ணணும்'னு தோணுச்சு. அதற்கு தோதாக எம்.பி.ஏ படிக்க, லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். 2008-ல் இருந்து 2010 வரை தங்கிப் படிச்சேன். அப்போது, நான் பார்த்த ரெண்டு சம்பவங்கள், `பிசினஸ் மேன்' என்கிற என் லட்சியத்தை, `போலீஸ் மேன்' என்று மாற்றின. 2008-ம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல்ல நடந்த தீவிரவாதத் தாக்குதல் ஒன்று, மற்றொன்று உ.பியில 5 ரூபாய்க்கூட கொலை பண்ணும் சம்பவம். இதைப் பார்த்ததும், சிவில் சர்வீஸ்தான் நமக்குத் தேவைனு தோணுச்சு. உடனே, சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி, எழுதினேன். முதல் முயற்சியிலேயே 2010-ம் ஆண்டு, ஐ.பி.எஸ்ஸாகத் தேர்வானேன். கர்நாடகம் கார்தலாவுல ஏ.எஸ்.பியா போஸ்ட் போட்டாங்க. ஒன்பது வருஷம் திட்டமிட்டு, அந்தத் துறையைக் காதலித்து, பல முன்முயற்சிகளைச் செய்தேன்.

அர்ஜுன் அண்ணாமலை
அர்ஜுன் அண்ணாமலை
நா.ராஜமுருகன்

அதனால், அந்த மக்கள் காவல்துறையைத் தங்களுக்கு நெருக்கமான துறையா உணர்ந்தாங்க. ஆனா, கடைசியா பெங்களூர்ல டி.சி.பியா பதவி உயர்வி கிடைத்தது. அதற்கு மேல், அந்த வேலையில் விருப்பமில்லை. மேலை நாடுகளில் ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும், அடுத்தடுத்த இலக்குகளை வச்சுக்கிட்டு அதற்கு ஏற்றவாறு மாறுவதுதான் இயல்பு. அதற்காக, உயர்பதவிகளைக்கூட அங்குள்ளவர்கள் உதறுவார்கள். அங்கே உயர்பதவிகளை ராஜினாமா செய்வது சாதாரணம். ஆனா, இங்கு நான் ஐ.பி.எஸ் பதவியைக் கடந்த வருடம் ராஜினாமா பண்ணியதை பலரும் ஆச்சர்யமா பேசுறாங்க. நான் ஓடை போல தொடந்து ஓடிக்கொண்டே இருக்க விரும்பினேன். கடந்த வருடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை, இந்த வருடத் தொடக்கத்தில்தான் ஏத்துக்கிட்டாங்க.

கஷ்டத்தைப் புரியவைக்காம குழந்தைகளை வளர்க்கிறோம். உணவை நாமே உழுது சாப்பிட்ட காலம் போய், இப்போ ஏதோதோ ஆப் மூலமா உணவை ஆர்டர் பண்ணி, வீட்டுக்கு வரவழைச்சு சாப்பிடுறோம். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கிறதா, நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கையில் சின்ன தடுமாற்றத்துக்குக்கூட தற்கொலை முயற்சியை மேற்கொள்ளும் இளைஞர், இளைஞிகளை கண்கூடாகப் பார்க்கிறோம். இதைச் சரிபண்ணணும். நாம் மாறினால் சமூகம் மாறும். நாம் மாறவே இந்த முயற்சி!
அர்ஜுன் அண்ணாமலை

இப்போ புதிய இலக்கை நோக்கிப் பயணப்பட ஆரம்பித்துவிட்டேன். கோயம்புத்தூர், கரூரை மையங்களா வைத்து, `வி த லீடர்'ங்கிற அமைப்பைத் தொடங்கியிருக்கிறோம். ஆன்லைன் மூலமா, விருப்பப்படும் இளைஞர்களையும் அதுல இணைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பு மூலமா இப்போதைக்கு மூன்று விஷயங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளோம். கல்வியில் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்துவது முதலாவது. பல கம்பெனிகளில், `நாங்க எல்லோருக்கும் வேலை தரத் தயார். ஆனால் அதற்குரிய ஸ்கில்ஸ் பல மாணவர்களுக்கு இல்லை'னு சொல்றாங்க.

அர்ஜுன்
அண்ணாமலை தனது தோட்டத்தில்...
அர்ஜுன் அண்ணாமலை தனது தோட்டத்தில்...
நா.ராஜமுருகன்

அந்த ஸ்கில்ஸ் மேம்பாட்டைச் செய்வது எங்கள் முதல் இலக்கு. அதேபோல், தேசிய அளவில் குடியுரிமை திருத்தச் சட்டம் மாதிரி பல விஷயங்களை இம்ப்ளிமென்ட் பண்ணும்போது, எந்த அரசியல், சமூக அமைப்புகளும் அதன் சாதக, பாதகங்களை மக்களுக்கு முழுமையாகச் சொல்வதில்லை. மாறாக, அரசியலுக்காக அதைப்பற்றி மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தவே பார்க்கிறார்கள். நல்ல விஷயங்களைத் தீயதாகவும் தீய விஷயங்களை நன்மை பயக்கும் விஷயமாகவும் சித்திரித்து, மக்கள் மத்தியில் பதற்றத்துக்கு வித்திடுகிறார்கள்.

உண்மையில் பயனுள்ள பல திட்டங்கள் இதனால் மக்களால் எதிர்க்கப்படுகிறது. இதுபோன்ற விஷயங்கள் வரும்போது, அதுபற்றிய போதிய அறிவை மீம்ஸ், வீடியோஸ், ஆர்டிக்ள்ஸ் போன்ற பல்வேறு வடிவங்களில் மக்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களுக்கு தேசியப் பிரச்னைகளில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம்.

மூன்றாவதாக, கிராமம் கிராமமாகப் பயணித்து, நல்ல மருத்துவத்தைச் செய்யவைப்பது, நல்ல மருத்துவத்தை இலவசமாக நாங்களே கொடுக்க நினைப்பதுன்னு செயல்பட இருக்கிறோம். இதை ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணப் போறதில்லை. எனது காவல்துறையில் நான் காட்டிய அதே திட்டமிடல், அர்ப்பணிப்பு உணர்வுடன் இதைச் செய்துகாட்டப் போறோம்.

அர்ஜுன் அண்ணாமலை
அர்ஜுன் அண்ணாமலை
நா.ராஜமுருகன்

மேலும், எனது சொந்த ஊரில் எங்களுக்கு 72 ஏக்கர் நிலமிருக்கு. அதுல, 52 ஏக்கர்ல இப்போதைக்கு இயற்கை விவசாயம் பண்ணப்போறேன். கடந்த மூன்று வருடங்களாக எங்க ஊர் அடங்கியுள்ள க.பரமத்தி ஒன்றியமே அதிக வெயில் அடிக்கும் பகுதியாக மாறி இருக்கு. இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. ஆனால், இத்தகைய பூமியில் ஆய்வு பண்ணி, இயற்கை விவசாயத்தில் சாதித்துக் காட்டி, பண்டமாற்று முறையைத் தொடங்க இருக்கிறேன்.

நாட்டுமாடுகளைப் பெருக்கும்விதமாக, நாட்டுமாடுகளை வளர்க்க இருக்கிறேன். `எதைச் செய்தாலும் சரியாகச் செய்வேன்' என்ற நம்பிக்கை என்னைவிட என்மீது என் தந்தை குப்புசாமி, தாய் பரமேஸ்வரி, மனைவி அகிலா சுவாமிநாதன் ஆகியோருக்கு உண்டு. அதனால், என்னைத் தண்ணி தெளிச்சு இல்லை, ஆசீர்வாதம் பண்ணியே விட்டிருக்காங்க. எனக்குக் கிடைத்த இயற்கை வாழ்க்கை இப்போ உள்ள குழந்தைகளுக்கு இல்லை. கஷ்டத்தைப் புரியவைக்காம குழந்தைகளை வளர்க்கிறோம்.

உணவை நாமே உழுது சாப்பிட்ட காலம் போய், இப்போ ஏதேதோ ஆப் மூலமா உணவை ஆர்டர் பண்ணி, வீட்டுக்கு வரவழைச்சு சாப்பிடுறோம். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கிறதா, நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கையில் சின்ன தடுமாற்றத்துக்குக்கூட தற்கொலை முயற்சியை மேற்கொள்ளும் இளைஞர்களைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இதைச் சரிபண்ணணும். நாம் மாறினால் சமூகம் மாறும். நாம் மாறவே இந்த முயற்சி" என்றார் உறுதியாக!

உறுதி வெல்லட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism